கேரட், பீன்ஸ் பொரியல்

தேதி: September 28, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நறுக்கிய கேரட், பீன்ஸ் - அரை கிலோ
நறுக்கிய வெங்காயம் - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை


 

தாளிக்கக் கொடுத்துள்ளவைகளைத் தவிர்த்து மற்ற பொருட்களை குக்கரில் இட்டு தண்ணீரை தெளித்து (3 தேக்கரண்டி) வேகவிடவும்.
விசில் வர தொடங்கும் சற்று முன் சரியாக தீயை அணைத்து விடுங்கள். அப்பொழுது தான் அளவாக வேகும்.
தண்ணீர் இல்லாதிருக்க வேண்டும். தண்ணீர் இருந்தால் மூடியைத் திறந்து வைத்து தண்ணீர் வற்றும் அளவு சூடாக்கவும்.
பிறகு எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து காய்கறியில் சேர்த்து கிளறவும். சுவையான கேரட், பீன்ஸ் பொரியல் தயார்.


குக்கரில் என்று குறிப்பிட்டது 5 நிமிடத்தில் செய்து முடிப்பதற்கு. சாதாரணமாக வாணலியிலும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கேரட் பீன்ஸ் பொரியல் செய்தேன். ரசத்துக்கு அருமையான காம்பினேஷன். எங்க அம்மாவும் இப்படி தான் சிம்பிள் பொரியல் செய்வாங்க.

"If you want to feel rich, just count the things you have that money can't buy."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..