கடவுள் உண்டா இல்லையா என்பது குறித்த உங்களின் கருத்து

இன்னும் ஒரு controversial title. இது குறித்து ஏற்கனவே அறுசுவையில் ஒரு சிறிய விவாதம் நடந்தது. வருகையாளர்களின் எண்ணங்களையும் தெரிந்துகொள்ள இதை வாக்கெடுப்பிற்கு விட்டிருக்கின்றோம். தங்களின் நம்பிக்கையை வாக்கெடுப்பில் மட்டும் தெரிவிக்காமல், காரணங்களை இங்கேயும் விளக்கினால், அது பலரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, பாபு போன்ற கடவுள் நம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள், ஆதாரப்பூர்வமான கருத்துக்களினால் பக்தி மார்க்கம் திசை திரும்ப வாய்ப்புகள் உள்ளது. அதிகப்படியான நம்பிக்கையினால், நஷ்டங்களை சந்தித்து வருவோர் தங்களைத் திருத்தி கொள்ளவும் இந்த விவாதங்கள் உதவலாம்.

இது கடவுள் என்ற பொதுவான சொல்லைக் கொண்டு விவாதம் செய்யப்பட வேண்டிய விசயம். இங்கே தனிநபர், மதம், ஜாதி, அரசியல் போன்ற விசயங்களை தவிர்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் தாக்கி செய்யப்படும் பதிவுகள் உடனே நீக்கப்படும். இருதரப்பினரும் தங்களது நம்பிக்கை சார்ந்த விசயங்களை தெளிவாக எடுத்துரைக்கலாம். இதனால் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களையும் அலசலாம். நல்லவற்றையும் பட்டியலிடலாம். யார் மனதும் நோகாமல் இந்த விவாதம் செல்லும் வரை அது ஆரோக்கியமானதாக இருக்கும். (இதைவிட செய்வதற்கு எனக்கு ஆயிரம் நல்ல வேலைகள் உண்டு என்று நினைப்பவர்கள், தயவுசெய்து இந்த பக்கம் வரவேண்டாம். அதை இங்கே தெரிவிக்கவும் வேண்டாம். நீங்கள் உங்களின் பணியில் கவனம் செலுத்தலாம்.)

ok நீங்க எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா நல்ல கதை உள்ள பக்கம்[web site) இருந்தால் சொல்லுவிங்களா

திஷா... முதலில் தாங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்... ஆதி இல்லாமல் அந்தம் இல்லை...! அதாவது 1- ல் இருந்துதான் 1000 வரை செல்லவேண்டுமே தவிர... எடுத்தவுடன் 1000-ல் ஆரம்பம் செய்ய முடியாது... முதலில் குழந்தை பிறகு சிறுவன்,வாலிபன்,பெரியவர்,முதியவர்... என்றுதான் செல்லவெண்டும்.. இதுதான் இயற்கயின் நியதி. இது மனித பிறவிக்கு மட்டும் அல்ல.... எல்லா விஷயத்திற்க்கும் பொருந்தும்.... சிந்தித்து பாருங்கள். தாங்கள் கூறியது போன்று நான் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று கூறவில்லை. அது நிருபிக்கபடாத கூற்று. அதை விஞ்ஞானமும், அறிவியலும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அது வெறும் டார்வின் தத்துவம் தானே தவிர... அறிவியல் அல்ல....என்பதனை உணருங்கள்.

நன்றி....
Jaa..

அன்புடன்
ஜா...

ஹாய்...பிரித்தா.... குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்.. என்பதற்க்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. அது வெறும் டார்வின் கூற்று. நிறுபிக்கபடாத விஷயம். அதை அறிவியலும்,விஞ்ஞானமும் ஏற்றுக்கொள்ளவில்லை. அறியவும்..

நன்றி...
Jaa....

அன்புடன்
ஜா...

பல கடவுள் ஷாத்தியம் இல்லை.சிலபேர் கடவுளை நேரில் பார்த்தால் நம்புவேன் என்கிறார்கள்.இப்போ ஒரு கம்புயூட்டர் இருக்கு.இத செஞ்சவன நேர்ல பார்த்தாதான் கம்புயூட்டர நம்புவிங்கலா?வள்ளூவர் கூட தன் முதல் குரளில் ஒரு கடவுளைதான் குறிப்பிடுகிரார்.ஒன்றே குலம்.ஒருவனே தேவன் எப்படி வந்தது?ஜாதி நாம பிரிச்சது.பல கடவுளும் நாம பிரிச்சது.ஒரு சட்டை இருக்கு.அது தானாகவே பஞ்ச எடுத்து,நூல் எடுத்து ,தானகவே சட்டை உன்டானதுன்னு சொன்னால் நம்புவிங்கலா?பிறகு ஏன் கடவுள்தான் இந்த உலகத்தில் அனைத்தையும் படைத்தார் என்பதை மறுக்கிறோம்?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஒரு கடவுள் நம்பிக்கை உடைய ஒருவர் முடிவெட்ட சென்றார். அந்த நாவீதன் முடிவெட்டி முடிக்கும் வரை கடவுள் இல்லை என்பதை பற்றி அதிகம் பேசிக்கொண்டே இருந்தார்.இவருக்கு எப்படி சொல்வது என்று அவர் யோசித்துக்கொண்டு இருந்தார். முடிவெட்டி முடித்து வெளியில் ஒருவர் தலை மற்றும் முகத்தில் நிறைய முடியுடன் வெளியில் நின்றுகொண்டு இருந்தார். அவரை பார்த்தவுடன் இவர் வுலகத்தில் நாவீதர்களே இல்லை என்று சொன்னார் உடனே நாவீதர் வந்து நாங்கள் இங்கேதான் இருக்கிறோம் அவர்கள்தான் எங்களைத்தேடி வருவதில்லை என்று சொன்னார். அதுபோல் கடவுளை தேடாமல் எதையெதையோ பேசிக்கொண்டு இருந்துவிட்டு கடவுள் இல்லை என்று எப்படி சொல்கிரீர்கள்? என்று அவர் சொல்லிவிட்டு போய்விட்டார். இப்போது நானும் போகிறேன்.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

இந்த கருத்தைச் சொல்ல எதற்கு "அட்மின் அவர்களே!" என்று ஒரு விளித்தல்?!

நான் இப்போது வேலை தேடிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் கடவுளைத் தேடுங்கள். எனக்கு பிரச்சனை இல்லை. :-)

(மீண்டும் ஒரு நினைவுறுத்தல்: மதச் சம்பந்தமான பதிவுகள் நீக்கப்படுவதோடு, பதிவுகள் கொடுப்பவர் பெயரும் நீக்கப்படும். பிரச்சனை செய்யவென்றே சிலர் வருவது தெரிகின்றது. யாராயினும் பெயர் நீக்கம் செய்யப்படும்.)

கடவுள் என்பது அவரவர ர்நம்பிக்கை.

ஏமாறாதே|ஏமாற்றாதே

மேலும் சில பதிவுகள்