கடவுள் உண்டா இல்லையா என்பது குறித்த உங்களின் கருத்து

இன்னும் ஒரு controversial title. இது குறித்து ஏற்கனவே அறுசுவையில் ஒரு சிறிய விவாதம் நடந்தது. வருகையாளர்களின் எண்ணங்களையும் தெரிந்துகொள்ள இதை வாக்கெடுப்பிற்கு விட்டிருக்கின்றோம். தங்களின் நம்பிக்கையை வாக்கெடுப்பில் மட்டும் தெரிவிக்காமல், காரணங்களை இங்கேயும் விளக்கினால், அது பலரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, பாபு போன்ற கடவுள் நம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள், ஆதாரப்பூர்வமான கருத்துக்களினால் பக்தி மார்க்கம் திசை திரும்ப வாய்ப்புகள் உள்ளது. அதிகப்படியான நம்பிக்கையினால், நஷ்டங்களை சந்தித்து வருவோர் தங்களைத் திருத்தி கொள்ளவும் இந்த விவாதங்கள் உதவலாம்.

இது கடவுள் என்ற பொதுவான சொல்லைக் கொண்டு விவாதம் செய்யப்பட வேண்டிய விசயம். இங்கே தனிநபர், மதம், ஜாதி, அரசியல் போன்ற விசயங்களை தவிர்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் தாக்கி செய்யப்படும் பதிவுகள் உடனே நீக்கப்படும். இருதரப்பினரும் தங்களது நம்பிக்கை சார்ந்த விசயங்களை தெளிவாக எடுத்துரைக்கலாம். இதனால் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களையும் அலசலாம். நல்லவற்றையும் பட்டியலிடலாம். யார் மனதும் நோகாமல் இந்த விவாதம் செல்லும் வரை அது ஆரோக்கியமானதாக இருக்கும். (இதைவிட செய்வதற்கு எனக்கு ஆயிரம் நல்ல வேலைகள் உண்டு என்று நினைப்பவர்கள், தயவுசெய்து இந்த பக்கம் வரவேண்டாம். அதை இங்கே தெரிவிக்கவும் வேண்டாம். நீங்கள் உங்களின் பணியில் கவனம் செலுத்தலாம்.)

நீங்கள்கேட்டகேள்விக்குவருகிறேன்;
"இல்லாத ஒன்றை ஏதோ ஒன்று இருக்கு என்று சொல்கின்ற நீங்கள்தான் அதை ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும்."என்றுகேட்டிருந்தீர்கள் இதற்க்குஆதாரம் "உலகப்பொதுமறை வேதமும், அதை கொண்டு வந்த தூதுவரும்" தான் இதைதான் விளக்கமாக முன் அனுப்பிய பதிவில் குறிப்பிட்டுருந்தேன். அதை "இங்கே தனிநபர், மதம், ஜாதி, அரசியல் போன்ற விசயங்களை தவிர்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் தாக்கி செய்யப்படும் பதிவுகள் உடனே நீக்கப்படும்."
என்றகண்டிஷனில்அதை நீக்கி விட்டீர்கள்,

அப்படியிருக்க (ஆதாரத்தை சொல்லாமல்)எப்படி ஆதாரத்தை நிருபிக்க முடியும்???

//நான் என்னை நாத்திகன் என்று அழைத்துக் கொள்பவன் அல்ல.//

நீங்கள் அப்படியொரு பெயரை உங்களுக்கு சூட்டிக் கொள்ளாவிட்டாலும் உங்கள் கொள்கை, முழுக்க முழுக்க நாத்திகக் கொள்கை என்பதை உங்களின் ஒவ்வொரு எழுத்தும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நாத்திகத்தையும் பகுத்தறிவையும் பற்றி பேசும் முன் அண்ணன் பாபாகிய தாங்கள் சகோதரி ஷமி அவர்களுக்கு கூறியிருந்ததை நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

//அடுத்தவரைப் பார்த்து பகுத்தறிவு இல்லாதவர், சிந்திக்க தெரியாதவர்கள், வடிக்கட்டிய அறிவீனர்கள் என்று விமர்சனங்கள் கொடுத்துவிட்டால் சகோதரி அஸ்மா போன்றவர்கள் கைதட்டி பாராட்டு தெரிவிக்கலாம்.//

அடுத்தவரைப் பார்த்து விமர்சனம் செய்ததற்காக அவர்களை உங்கள் சகோதரி பாராட்டவில்லை. அவர்கள் அப்படி விமர்சனம் செய்யவுமில்லை. அழகான சான்றுகளை எடுத்து வைத்த ஒருவரை எந்த ஒரு நல்ல மனமும் பாராட்டாமல் இருக்காது. அந்த அடிப்படையில் நான் அவர்களை பாராட்டியதில் தவறொன்றுமில்லை என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். விஷயத்திற்கு வருவோம்.

கடவுள் உண்டா?

இந்தக் கேள்விக்கு 3 விதமான பதில்களைக் கூறலாம்.

1. கடவுள் உண்டா என்று அறியவில்லை.
2.கடவுள் இல்லை.
3.கடவுள் இருக்கிறார்.

இதில் முதல் நிலையானது கடவுளைப் பற்றிய அறிவின் குறைப்பாட்டை தெரிவிக்கிறது. அதாவது, கடவுள் உண்டு என்று நிரூபிக்கவோ, இல்லை என்று நிரூபிக்கவோ ஆதாரங்கள் இல்லை என்பதை குறிக்கிறது.

இரண்டாவது நிலைபாடு கடவுள் இல்லை என்றும் இப்பிரபஞ்சம் தன்னாலேயே உருவாகியது என்றும் நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் உண்டு என்பதைக் குறிக்கிறது.

இந்த இரண்டு நிலைபாடுகளுக்குமிடையில் தெளிவான வித்தியாசம் உள்ளது. கடவுள் உண்டா என்று அறியவில்லை என்று சொல்லக்கூடிய வாதத்தைக் கொண்டு, கடவுள் இல்லை என்று அறிவுடையோர் யாரும் வாதிக்க முடியாது. ஏனெனில் இரண்டாவது நிலைபாடு கடவுள் இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கக்கூடியதாகும். ஆகவே கடவுள் உண்டா இல்லையா என்பதை அறியேன் என்ற நிலையில் உள்ளவர் கடவுள் இல்லை என்று அறுதியிட்டு கூறமுடியாது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், கடவுள் இல்லை என்று கூறக்கூடிய நாத்திக சகோதரர்கள் தங்களுக்கு ஆதாரமாக முதல் நிலைபாட்டை உடையவரின் கருத்தையே கூறுகிறார்கள்.

'நான் கடவுளை அறிய முடியவில்லை, கண்களால் காண முடியவில்லை, அதனால் கடவுள் இல்லை' - இது பகுத்தறிவு வாதமா? தங்களின் சிந்தனைக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையெல்லாம் மறுத்துவிடுவதே இவர்களின் பகுத்தறிவு வாதம். மறுமை விஷயத்திலும் இதே நிலைதான்! ஆகவே கடவுளும் இல்லை, மறுமையுமில்லை என்று துணிந்து கூறிவிடுகிறார்கள். கடவுளே இல்லை என்பவர்களுக்கு கடவுளைப் பற்றிய அச்சமும் இருக்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதனால் கடவுளை மறுக்கும் அவர்களின் துணிவைப் பற்றி ஆச்சரியப்பட தேவையில்லை.

"கண்ணுக்குத் தெரியாத கடவுளை நம்புவது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல, கடவுளைக் காட்டினால் நம்புகிறோம், லட்சக்கணக்கில் பரிசும் தருகிறோம்" என்று கூட சில நாத்திகர்கள் சவால் விடுவார்கள்.

எந்த உண்மையான பகுத்தறிவாளனும் இதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இதனைப் பார்த்தறிவு அதாவது ஐயறிவு என்றே சொல்லுவான். மிருகங்கள்தான் பார்த்தால் மட்டுமே நம்பக்கூடியவை. உதாரணமாக,

ஒருவர் உங்களிடம் வந்து எதிர்வரும் ஒரு தேதியில் பெரிய தொரு விருந்துபச்சாரம் நடைபெற இருப்பதாகவும், அதில் நீங்கள் அவசியம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுகிறார். பகுத்தறிவு ரீதியாக இதை எப்படி ஏற்பீர்கள்? அவர் வீட்டிற்குப் போய் அந்த விருந்துக்குரிய ஏற்பாடுகள் அனைத்தையும் கண்ணால் பார்த்த பின்னர்தான் ஏற்பீர்களா? அப்படியே அவர் வீட்டிற்குப் போய் நேரில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நடைபெற இருக்கும் விருந்துக்குரிய அறிகுறிகள் ஏதும் அதற்கு முன்னரே உங்கள் பார்வையில் படுமா? இல்லையே? அவர் கொடுத்த அழைப்பில் நம்பிக்கை வைத்து, அவர் குறிப்பிட்ட தேதியில் அங்கு செல்லும்போதுதான் அந்த விருந்துக்குரிய அத்தனை ஏற்பாடுகளையும் கண்ணால் பார்க்கிறீர்கள். இது யாருக்கு பொருந்தும்? பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தானே பொருந்தும்! மிருகத்திற்குப் பொருந்துமா?

ஒரு மாட்டையோ , ஒரு ஆட்டையோ பார்த்து ஏய்! ஆடே உனக்காக இன்ன தேதியில் பெரியதொரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .நீ அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அந்த மிருகத்திற்கு அது புரியுமா? ஐயறிவு மிருகமான அது பகுத்தறியும் திறன் பெற்றுள்ளதா? இல்லையே! அதற்கு முன்னால் ஒரு மரக்கொப்பைக் அசைத்துக் காட்டி அழைத்தால் அது வேகமாக ஓடிவரும். அதாவது கண்ணால் கண்டபின் வேகமாக ஓடிவரும். இது பகுத்தறிவு செயலா? அல்லது மிருகத்தின் அறிவான பார்த்தறிவு செயலா? சிந்தியுங்கள்!

இந்த ஒரு சிறிய உதாரணத்திலிருந்தே, கடவுளை பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவு வாதமேயல்ல; பார்த்தறிவு வாதமாகும் என்பது சாதாரண பாமர மக்களுக்கும் புரியுமே! ஆக, கண்ணால் கண்ட பின் ஏற்பதற்கு மனிதனுக்கு பகுத்தறிவு அவசியமில்லை. மிருகங்களுக்கு இருக்கும் ஐயறிவே தாரளாமாகப் போதும். கடவுள் மறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்களா? அல்லது பார்த்தறிவாளர்களா?நாத்திக நண்பர்களே சிந்திப்பீர்களா?

//கடவுள் இல்லை என்பவர் நிலையில் இருந்து யோசித்தபோது எல்லாமே தெளிவாய் தெரிந்தது//

கடவுள் இல்லை என்பவரின் நிலையில் இருந்து யோசித்ததால் வந்த விபரீதமே உங்களை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது. நடுநிலையாக இருந்துக் கொண்டு யோசித்திருந்தால் அழகான, தெளிவான முடிவான கடவுள் உண்டு என்ற நிலையில் இருந்திருப்பீர்கள். டார்வின் கொள்கையை பகுத்தறிவுக் கொள்கை என்று நம்பி இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டீர்கள்.

//மனிதன் இன்று இருப்பது போலவே கோட் சூட்டுடன் படைக்கப்பட்டான் என்பதையே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றீர்களா? மனிதன் மனிதனாகவே பிறக்கவில்லை என்று சிறிய உண்மை உங்களுக்கு இன்னமும் பிடிபடவில்லை. இன்று நாம் கொண்டிருக்கும் உருவம் பரிணாம வளர்ச்சி என்பது தெரியவில்லையா? விலங்காய் இருந்துதான் காலப் போக்கில் மனிதனாகி, ஒவ்வொரு விசயத்திலும் வளர்ச்சி கண்டிருக்கின்றோம் என்ற உண்மை புரியவில்லையா?//

மனிதன் மனிதனாகவே பிறக்கவில்லை என்று சொல்பவர் யாரும் ஒரு அறிவார்ந்த சிந்தனையுடையவர்களாக இருக்கவே முடியாது. மனிதன் மனிதனாகத்தான் படைக்கப்பட்டான். அதுபோன்ற இவ்வுலகின் ஜீவராசிகள் எல்லாமே அதனதன் உருவத்திலேயே படைக்கப்பட்டன. அந்தோ பரிதாபமே........! இந்த உண்மை தெரியாதவர்கள் நாங்கள் அல்ல, நீங்களும் உங்களைப் போன்ற நாத்திகம் பேசும் கூட்டத்தார்களுமே என்பதை நீங்கள் அறியவில்லையே!

நீங்கள் கூறும் பரிணாம வளர்ச்சி என்பது உண்மையானால், இப்போது ஏன் அந்த பரிணாம வளர்ச்சியை பார்க்க முடியவில்லை? நேற்றோ அல்லது சென்ற வருடமோ அல்லது 50 வருடங்களுக்கு முன்போ எங்காவது ஒரு குரங்கு மனிதனாக மாறிய உண்மை செய்தியை யாராவது கேள்விப்பட்டதுண்டா? ஏன், சரித்திரம் எழுதப்பட்ட காலத்திலிருந்து எடுத்துக் கொண்டாலும் அப்படி ஒரு உயிரினம் வேறொன்றாக பரிணாமம் அடைந்த உண்மை சம்பவங்களை யாராலும் கூறமுடியாது. இதற்கு 'பரிணாம வளர்ச்சி என்பது முடிவுக்கு வந்துவிட்டது' என்று பதில் சொல்லப் போகிறீர்களா? 'பரிணாமம்' என்ற வார்த்தைக்கே முடிவில்லாதது என்று பொருள் என்பதை அறிவீர்கள் என்று நினைக்கிறேன். முடிவில்லாத அத்தகைய வளர்ச்சி உண்மையானால், உலகின் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ வேறொன்றாக மாறிக்கொண்டே இருக்கவேண்டியதுதானே? பரிணாமம் எப்படி முடிவுக்கு வரமுடியும்? அன்றிலிருந்து இன்றுவரை குரங்கு குரங்குதான், மனிதன் மனிதன்தான் என்ற உண்மையை நடுநிலையோடு மறுஆய்வு செய்துப்பார்த்து பேசுங்கள்.

அதுபோல் படைத்தவன் இல்லாமல் படைப்பினங்கள் ஏற்பட்டிருக்க முடியாது, எனவே எல்லாவற்றையும் படைத்த ஏக கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்து அனைத்துமே தானாகவே உருவானது என்பதும் அறிவுடமையாகாது.

உதாரணத்திற்கு, எனக்கு முன்னால் உள்ள இந்த கம்ப்யூட்டரைத் தாங்கும் சாதாரண ஒரு மேஜையை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு காலத்தில் ஏதோ ஒரு தோட்டத்தில் மரமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அது அப்படியே பிளந்து, இன்னும் சில காலங்களுக்கு பிறகு அழகான பலகையாக மாறிக்கொண்டது. பிறகு காலப் போக்கில் தன்னால் உருவான ஆணிகளோடு சேர்ந்து, தன்னாலேயே கோர்த்துக் கொண்டு இப்படியொரு அழகான மேஜையாகிவிட்டது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? கீழ்ப்பாக்கத்தின் அட்ரஸை கொடுத்து அனுப்ப மாட்டீர்களா? சாதாரண ஒரு மேஜை தன்னால் உருவானது என்பதை யாராலும் ஒத்துக்கொள்ள முடியவில்லையென்றால், அண்ட சராசரங்களும் தானாகவே உருவானது, உருவான அனைத்துமே ஒரு சூப்பர் பவர் என்ற கடவுள் இல்லாமலேயே தானாக இயங்குகிறது என்பதை மட்டும் உங்கள் அறிவு எப்படி ஏற்றுக்கொள்கிறது?

டார்வின் கொள்கைகளைப் பற்றி சொல்லக்கூடிய இந்த இடத்தில் உங்களுக்கு விஞ்ஞானத்தைப் பற்றி ஒரு சிறு விளக்கம் கொடுக்கவேண்டியுள்ளது. அதாவது விஞ்ஞானம் என்பது,
1. நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம்
2. விஞ்ஞானக் கோட்பாடு என்று 2 வகையாக உள்ளது. விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு உறுதி செய்யப்பட்டதுதான் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் ஆகும். கோட்பாடுகள் என்பவை நிரூபிக்கப்பட்டவை அல்ல. வெறும் அனுமானங்களே! காலப் போக்கில் இவை உண்மை என்று நிரூபிக்கவும்படலாம், அல்லது பொய் என்று புறக்கணிக்கவும்படலாம். இதனையே கோட்பாடு என்கிறோம்.

உதாரணத்திற்கு, இந்த பூமி உருண்டை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். ஆனால், இந்த பிரபஞ்சம் தோன்றியது எப்படி? அதன் வயது என்ன? என்பது பற்றியெல்லம் கணித்துக் கூறுவது விஞ்ஞானக் கோட்பாடு ஆகும். இப்படிப்பட்ட எத்தனையோ விஞ்ஞானக் கோட்பாடுகள் பொய் என்று நிரூபிக்கப்பட்டும் உள்ளன. இதை விஞ்ஞானிகளே ஒப்புக்கொண்டும் உள்ளார்கள். ஆகவே நிரூபிக்கப்படாத விஞ்ஞானக் கோட்படுகளில் ஒன்றான டார்வின் கொள்கைகளை வைத்து வாதம் செய்வது பகுத்தறிவு வாதமேயல்ல சகோதரர்களே!

//மனிதனின் தோற்றம் எப்படி என்பதை கற்பனை செய்து பாருங்கள். 50 வருடங்களுக்கு முன்பு இருந்தவர்களுக்கும் நமக்குமே எவ்வளவு வித்தியாசங்கள்? இதில் 5000 வருடங்களுக்கு முன்பு இருந்தவர்கள் எப்படி இருந்திருக்கவேண்டும் என்று யோசியுங்கள்//

மனிதனின் தோற்றத்தில் அப்படி எந்த வித்தியாசமும் இதுவரைக் காணப்பட்டதில்லை. 50 வருடங்களுக்கு முன்பிருந்தவர்கள் உடுத்தும் உடைகளிலோ அல்லது வாழ்ந்த வாழ்க்கை முறைகளிலோ அல்லது பயன்படுத்திய பொருட்களிலோ வித்தியாசங்கள் இருக்குமே தவிர, நீங்கள் சொல்லும் தோற்றத்தில் வித்தியாசம் என்பது புதுமையிலும் புதுமை! இது என்ன கேலிக்கூத்து?! (5000 வருடங்களுக்கு முன் கடவுளால் படைக்கப்பட்ட மனிதனுக்கும் இதே பதில்தான்!)

//ஆக்கியோன் என்ற எல்லையோடு நிறுத்தி கொள்வதுதான் அறிவா? ஆக்கியோனை ஆக்கியது யார் என்று யோசித்து பார்க்க உங்களுக்கு தோன்றவில்லையா?//

இதுவும் நாத்திகர்கள் எடுத்துவைக்கும் கேள்விகளில் ஒன்று. மேலோட்டமாக பார்க்கும்போது இது ஒரு அறிவுப்பூர்வமான கேள்வியாகத் தோன்றலாம். ஆனால், சிந்தித்து பார்த்தால் இந்த கேள்வியின் போலித்தனம் விளங்கும்.

எந்த ஒரு விஷயத்திற்குமே "Axioms fundamental truths Assumptions" என்று சொல்லக்கூடிய அடிப்படை உண்மைகள் உண்டு. கணக்கு, அறிவியல் என்று எல்லாத் துறைகளிலும் இதே நிலைதான். அடிப்படை உண்மைகளை கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளாத துறையே இல்லை என சொல்லலாம். அந்த அடிப்படை உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் உலகில் எதையுமே செய்ய முடியாது. நம் நாத்திக நண்பர்களோ எந்த துறையிலுமே அடிப்படை உண்மைகளை மறுத்து விதண்டா வாதங்கள் செய்ததில்லை. அதாவது, அடிப்படையான ஒரு விஷயத்திற்கு இன்னொரு அடிப்படை இருக்கவேண்டும், அதற்கு இன்னொரு அடிப்படை, அதற்கு இன்னொன்று.........என்று கேட்பதில்லை. எல்லாவற்றையும் படைத்த முதல் அடிப்படையான கடவுளுக்கு மட்டும் இன்னொரு (?)அடிப்படையான கடவுளைத் தேடுவதேன்? கடவுளை ஏற்றுக் கொள்ளும் விஷயத்தில் மட்டும் எப்படிப்பட்ட விஞ்ஞானிகளும் அறிவாளிகளும் தங்களின் அறிவை யாருக்கோ கடன் கொடுத்துவிடுகிறார்கள் என்பதே உண்மை!

//இன்று நாம் பேசும் மொழி சில காலங்களுக்கு முன்பு இப்படி கிடையாது. அதற்கு சில காலங்களுக்கு முன்பு மொழியே கிடையாது. வார்த்தைகளும், அர்த்தங்களும் இல்லாதபோது மனிதனுக்கு சிந்தனைகளே இருந்திருக்காது. விலங்குகளுக்கு இருப்பது போன்று வெறும் பிம்ப அசைவுகளே ஓடியிருக்கும். சப்தங்களை வார்த்தைகளாக்கி, அதற்கு அர்த்தம் புகட்டி, சிந்தனை, அறிவு என்பதெல்லாம் மனிதன் உருவாகி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மனிதனுக்கு கிடைத்தவை.//

ஆரம்பத்தில் மொழிகளே இல்லையென்பதும் விலங்குகளைப் போன்றுதான் மனிதன் இருந்தான் என்பதெல்லாம் வெறும் கற்பனையே! ஆதி மனிதன் படைக்கப்பட்டது முதல் மொழி என்பது இருந்துள்ளது என்பற்கு எவ்வளவோ சான்றுகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரிந்தால்தானே?!

//சிறுவயதில் இருந்தே ஊட்டப்பட்டுவிட்ட இறை நம்பிக்கையை சட்டென எடுத்து, தூக்கி வீசிவிட முடியாது. அது உங்கள் இரத்தத்தில் ஊறி இருப்பதால், இப்போது இதற்கு நீங்கள் பதில் அளிக்க நினைத்தால்கூட எப்படி இவனை மடக்குவது என்று நினைத்துதான் விளக்கங்கள், பதில்கள் கொடுக்க நினைப்பீர்கள்.//

//யாரோ சின்ன வயதில் சொன்னார்கள் என்பதை இன்று வரை எடுத்துக்கொள்ளாதீர்கள். எல்லாவற்றிற்கும் விடை தேட முயற்சி செய்யுங்கள்//

சிறு வயதிலிருந்தே ஊட்டப்பட்ட இறை நம்பிக்கை என்பது உண்மையானாலும், (சகோதரி தளிகா சொன்னதுபோல்) வளர்ந்து, சுயமாக சிந்திக்கும் திறன் வந்தபிறகு, சிந்தித்து உண்மையை உணர்ந்து, அனைத்திற்கும் விடைக் கண்டபிறகு நாங்கள் கொண்ட இறை நம்பிக்கைதான் இன்னும் வலுவானது!உங்களை நாங்கள் வாதத்தால் மடக்கிதான் பதில் சொல்லவேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. சத்தியமே என்றும் நிலைத்து நிற்கும் என்ற அடிப்படையில்தான் எங்களின் வாதங்களை சத்தியத்திற்குட்பட்டு எடுத்து வைக்கிறோம்.

இன்னும் உங்களுக்கு சொல்லவேண்டிய பதில்களும் ஆதாரங்களும் எவ்வளவோ காத்திருக்கிறது. அடுத்தடுத்த பதிவுகளில் சந்திப்போம்!

அம்மா சொன்னது நீக்கிவிடலாமே

அட்மின், புது உருப்பினர்கலை நீங்க வரவேர்ப்பது ரொம்ப நல்லா இருக்கு. சதாரணமாக நான் கேட்டதுக்கு தப்ப பதில் குடுத்தது அவங்க. கடவுள் பகுதியில் இருக்கும் நான் எலுதிய அம்மா சொன்னது- என்பதையும் எடுத்துடலாமே. சீக்கிரம் செய்துடுங்க.

//மனிதன் மனிதனாகவே பிறக்கவில்லை என்று சிறிய உண்மை உங்களுக்கு இன்னமும் பிடிபடவில்லை.இன்று நாம் கொண்டிருக்கும் உருவம் பரிணாம வளர்ச்சி என்பது தெரியவில்லையா? விலங்காய் இருந்துதான் காலப் போக்கில் மனிதனாகி, ஒவ்வொரு விதத்திலும் வளர்ச்சி கண்டிருக்கின்றோம் என்ற உண்மை புரியவில்லையா?//

பரிணாம வளர்ச்சி?! இதைப்பற்றி எனக்கு புரியத்தான் இல்லை சகோதரரே. ஒன்றிலிருந்து தான் ஒன்று தோன்றியது எனில் இப்பொழுது ஏன் ஒன்றுமே தோன்றவில்லை. நாயிலிருந்து தான் நரி வந்தது, கழுதையிலிருந்து தான் குதிரை வந்தது, குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்றால் மனிதன் ஏன் இதைவிட மேல் நிலையை அடையக் காணோம்?இப்போது அது தடைப்பட்டது ஏன்? உலகில் அதன் வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு காரணமென்ன? உலகில் என்னென்னவோ நடைபெறுவதாக கேள்விப்படுகிறோமே, எங்காவது நாய் நரியான அதிசயத்தை கேட்டதுண்டா? அல்லது பாதி நாயாகவும்,பாதி நரியாகவும் உள்ள மிருகத்தைக் கண்டதுண்டா? அல்லது அப்படி ஒரு மிருகம் இருந்ததற்கு அடையாளமாக எலும்புக்கூடோ அல்லது படிவமோ கிடைத்ததுண்டா? தினம் உலகின் ஏதாவது பகுதியில் ஏதாவது ஒன்று வேறொன்றாக மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அது போல் தான் நடக்கின்றதா? நாய் நாயாக இருப்பதை பார்க்கிறோம்.நரி நரியாக இருப்பதை பார்க்கிறோம். கழுதை கழுதையாகவும், குதிரை குதிரையாகவும், குரங்கு குரங்காகவும்,மனிதன் மனிதனாகவும் இருப்பதைத் தானே பார்க்கிறோம்.

உதாரணத்திற்கு ஒட்டகத்தை எடுத்துக்கொள்வோமே. ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாமவளர்ச்சி அடைந்தது என்று தாங்களால் கூறமுடியுமா?

ஆடு, மாடுகளுக்கு இருப்பது போன்ற கழுத்தைத் தான் ஒட்டகச்சிவிங்கி பெற்றிருந்ததாம். அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி, நீட்டி படிப்படியாக கழுத்து நீண்டு பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டுவிட்டதாக சொல்கிறார்கள்.சரி வாதத்துக்காக வைத்துக்கொள்வோம். இப்போது தான் ஒட்டகச்சிவிங்கிக்கு தாராளமாக உணவு கிடைக்கிறதே? பிறகு ஏன் அதன் கழுத்து குறையவில்லை? சரி, உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டுவிட்டதாகவே இருக்கட்டும். உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது ஏற்பட்டதுண்டா?பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறியது எப்படி? அப்படி மாறுவதற்குரிய சூழல் நிர்ப்பந்தம் தான் எது? உடல் வளர்ச்சிக்கும், உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் பரிணாம வளர்ச்சி தத்துவம் கூறுகிறது.உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையை மனிதன் பெறவில்லை. பகுத்தறிவால் தான் அந்தப் பெருமையைப் பெறுகிறான்.

பரிணாம வளர்ச்சி என்பது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு அல்ல சகோதரரே. அது வெறும் அனுமானம் தான். இன்றைய மனிதன் மரபணுச் சோதனைகளில் முன்னேறிவிட்டான். குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஒத்திருக்கிறது என்று ஆய்வு செய்து நிருபணம் செய்யப்பட்டுள்ளதா? அல்லவே.குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தானே இந்த யூகத்திற்கு காரணம்?

உடலமைப்பை அடிப்படையாகக் கொள்வதைவிட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வதே அறிவியலுக்கு அதிக நெருக்கமுடையதாகும். அப்படிப்பார்த்தோமானால், மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்ததை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தபோது மனிதனின் இரத்தத்தோடு அதிக அளவு பன்றியின் இரத்தம் தான் பொருந்துகிறது என்பதைக் கண்டறிந்தனர். அதுமட்டுமல்ல, வேறு உயிரிணங்களின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டப்போது அப்போதும் பன்றியின் இதயமே மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப்போவதைக் கண்டுபிடித்தனர். அப்படி என்றால் பன்றியிலிருந்து மனிதன் தோன்றியிருப்பானோ?!

//மனிதனின் தோற்றம் எப்படி என்பதை கற்பனை செய்து பாருங்கள். 50 வருடங்களுக்கு முன்பு இருந்தவர்களுக்கும் நமக்குமே எவ்வளவு வித்தியாசங்கள்? இதில் 5000 வருடங்களுக்கு முன்பு இருந்தவர்கள் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று யோசியுங்கள்.//

மனிதனின் தோற்றம் எப்படி உள்ளது? நன்றாகத்தான் உள்ளது. 50 வருடங்களுக்கு முன்பு இருந்தவர்களுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம்? பாதி குரங்காகவும் ,பாதி மனிதனாகவுமா? 5000 வருடங்களுக்கு முன்பு இருந்தவர்கள் எப்படி இருந்திருக்க வேண்டும். முழு குரங்காகவா? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களும் மனிதர்களாகத்தானே இருந்தார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. புரியவில்லை சகோதரரே.

ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் தான் என்று உறுதியாகக்கூறுகிறார்களே. அது எப்படி?

‘உருவாக்கியோன் இல்லாமல் எப்பொருளும் உருப்பெறாது’ என்பதே எதார்த்தம். இந்த பிரபஞ்சத்தில் உள்ள படைப்புகள் அனைத்தும் இறைவன் ஒருவன் இருப்பதைத் தெள்ளத்தெளிவாகவே காட்டுகிறது.

சகோதரி ஹலீமா அவர்களுக்கு,

மன்னிக்கவும். நான் ஏன் நீக்கினேன் என்பதற்கு அங்கேயே விளக்கம் கொடுத்துவிட்டேன். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அதை நீக்கவில்லை. நீங்கள் செய்ததுதான் தவறு, அவர் செய்ததுதான் தவறு என்று நீதியெல்லாம் வழங்கவில்லை. அதே முறையில் அந்த விவாதம் தொடர்ந்திருந்தால் அது சச்சரவில் முடியும் என்பது போல் தோற்றம் இருந்தது. அதனால்தான் சண்டை வேண்டாம் என்று கூறி அதை நீக்கியிருந்தேன். அதுமட்டுமல்ல, அறுசுவையில் நான் பலமுறை கோடிட்டு காட்டிய விசயம். ஒரு பதிவை நீக்கும்போது அதன் கீழ் அதற்கு பதிலாக கொடுக்கப்பட்ட பதிவுகளும் தானாவே நீங்கிவிடும்.

இப்போதுகூட நீங்கள் விரும்பி கேட்டுக்கொண்டாலும், மேலே நீங்கள் கொடுத்துள்ள பதிவை முழுவதுமாக நீக்க முடியாது. அப்படி செய்தால் அதன் கீழ் உள்ள பதிவுகளும் போய்விடும். வாக்கியங்களை மட்டும் வேண்டுமென்றால் நீக்கலாம். (இவ்வளவு சீக்கிரம் கோபப்படுகின்றீர்களே..!!! உங்களது மேலே உள்ள அம்மா பதிவிற்கு பதில் கொடுக்கலாம் என்று நினைத்து இருந்தேன். நல்லவேளை.. செய்யவில்லை. :-))

Hafsa அவர்களுக்கு,

தனி நபர், மதம், வேதம் இவற்றை குறித்து விவாதிக்க வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம், அதற்கு பதில் கொடுப்பவர்கள் அவற்றையும் விமர்சிக்க வேண்டியிருக்கும். ஹஃப்ஷா கூறும் கருத்துக்களை நான் விமர்சிக்கின்றேன் என்றால், அது எனக்கும் ஹஃப்ஷா என்ற இருவருக்கும் மட்டுமேயா விசயம். வேதங்கள், மதங்கள் பொதுவானவை. இந்த விவாதத்தில் கலந்துகொள்ளாதவர்களும் அதற்கு உரிமையுடையவர்கள். நாம் பேசிக்கொள்ளும் கருத்துக்கள் சம்பந்தப்படாவர்களை பாதிக்கக்கூடாது என்ற நோக்கில்தான் வேண்டாம் என்று சொல்கின்றேன்.

நல்ல கருத்துக்களை, ஏற்றுக் கொள்ளும் கருத்துக்களை வேதம்தான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை ஹஃப்ஷா சொன்னாலே போதும். எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும். நீங்கள் வேதத்தின் பெயரை சொல்லுவதால், அடடா அப்படியா, அப்ப இது உண்மையாகத்தான் இருக்கும் என்று நாங்கள் உடனே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எனவே, வேதம், மதம் என்றெல்லாம் குறிப்பிடாமல், பொதுவாக குறிப்பிடுங்கள். அவற்றை உங்களின் சொந்தக் கருத்தாகவே குறிப்பிடுங்களேன். இதனால் பிரச்சனைகள் வராது.

//...நாத்திகத்தையும் பகுத்தறிவையும் பற்றி பேசும் முன் ...//
நான் என்னைப் பற்றி குறிப்பிட்டேன். நீங்கள் என்னைப் பற்றி எந்த அபிப்ராயம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு தங்களுக்கு முழு உரிமை இருக்கின்றது.

//அவர்கள் அப்படி விமர்சனம் செய்யவுமில்லை. அழகான சான்றுகளை எடுத்து வைத்த ஒருவரை எந்த ஒரு நல்ல மனமும் பாராட்டாமல் இருக்காது. அந்த அடிப்படையில் நான் அவர்களை பாராட்டியதில் தவறொன்றுமில்லை// //இறைவனின் படைப்பாகிய பரந்து விரிந்த இவ்வுலகை முழுமையாக அறிய முடியாத மனிதன் இதனைப்படைத்தவன் ஒருவன் இல்லை என வாதிப்பது வடிகட்டிய அறிவீன மாகும் //

படைத்தவன் இல்லை என்று வாதிப்பவர்கள் அறிவீனர்கள் என்பதுதானே இதற்கு பொருள். இதற்கு வேறு ஏதேனும் அர்த்தம் இருக்கின்றதா? சரி, அதை விடுங்கள். நீங்கள் பாராட்டியதை தவறு என்று நான் எந்த இடத்திலும் சொல்லவில்லையே. உங்களைப் போன்றோர்தான் பாராட்டுவார்கள். அறியாமையால் செய்யும் வாதங்களை நான் பாராட்டமாட்டேன் என்ற அர்த்தத்தில் சொல்லியிருந்தேன்.

//இந்தக் கேள்விக்கு 3 விதமான பதில்களைக் கூறலாம் ...... //

பதில்கள் சரி, விளக்கம்??

//கடவுள் இல்லை என்று கூறக்கூடிய நாத்திக சகோதரர்கள் தங்களுக்கு ஆதாரமாக முதல் நிலைபாட்டை உடையவரின் கருத்தையே கூறுகிறார்கள். 'நான் கடவுளை அறிய முடியவில்லை, கண்களால் காண முடியவில்லை, அதனால் கடவுள் இல்லை' - இது பகுத்தறிவு வாதமா? தங்களின் சிந்தனைக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையெல்லாம் மறுத்துவிடுவதே இவர்களின் பகுத்தறிவு வாதம். //

தங்களின் சிந்தனைக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையெல்லாம் கடவுளாக்குவதுதான் பகுத்தறிவா?
//மறுமை விஷயத்திலும் இதே நிலைதான்! ஆகவே கடவுளும் இல்லை, மறுமையுமில்லை என்று துணிந்து கூறிவிடுகிறார்கள். கடவுளே இல்லை என்பவர்களுக்கு கடவுளைப் பற்றிய அச்சமும் இருக்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதனால் கடவுளை மறுக்கும் அவர்களின் துணிவைப் பற்றி ஆச்சரியப்பட தேவையில்லை.//

இல்லாத ஒன்றை இல்லை என்று மறுக்க எதற்கு துணிவு?!! இல்லாத ஒன்றை இருக்கு என்று சொல்லி ஊரை ஏமாற்றத்தான் துணிவு, தனித்திறமை எல்லாம் வேண்டும். உலகில் வறுமை உண்டு, வெறுமை உண்டு, மறுமை என்றெல்லாம் எதுவும் கிடையாது. இந்த பத்தி வரை நீங்கள் சொல்ல நினைக்கும் விசயம் எனக்கு புரியவில்லை. உங்கள் பார்வையில் நாத்திகன் யார் என்பதை விளக்கியிருக்கின்றீர்கள், அவ்வளவுதான். நமது விவாதத்திற்கு நீங்கள் வரவேயில்லை.

//இதனைப் பார்த்தறிவு அதாவது ஜயறிவு என்றே சொல்லுவான்.//

ஜயறிவு கேள்விப்படாத புதிய அறிவாக இருக்கிறது?!! ஐயறிவு என்பதைத்தான் எழுத்து பிழையினால் அப்படி குறிப்பிட்டு விட்டீர்களோ..! பாவம்.. நீங்கள் தேடி எடுத்த அந்த இணையத்தளத்திலும் அப்படித்தான் குறிப்பிட்டு இருக்கின்றார்கள் இல்லையா? நீங்கள் என்ன செய்வீர்கள்.. இதுதானே உங்களின் அடிப்படை பிரச்சனையே.. இப்படித்தான் அது என்னவென்றுகூட பொருள் பாராமல், தம்மை சார்ந்தவர்கள் எது சொன்னாலும் அதை அப்படியே யோசிக்காமல் எடுத்துக் கொள்கின்றீர்கள். நல்ல பகுத்தறிவாளர்கள்.!!

//......ஒரு மாட்டையோ , ஒரு ஆட்டையோ பார்த்து ஏய்! ஆடே உனக்காக இன்ன தேதியில் பெரியதொரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .நீ அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அந்த மிருகத்திற்கு அது புரியுமா? முன்னால் ஒரு மரக்கொப்பைக் அசைத்துக் காட்டி அழைத்தால் அது வேகமாக ஓடிவரும். ....//

உங்களது உதாரணக் கதையை படித்து விழுந்து விழுந்து சிரிக்கின்றேன்.:-)) இந்த கதையும் அந்த தளத்தில் சொல்லப்பட்டதுதான் என்றாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏன் திடீரென 25 வயது குறைந்து போய், இப்படி எல்லாம் எழுதுகின்றீர்கள்.. உங்களுக்கு ஒன்று தெரியுமா? எங்கள் வீட்டு நாய்க்கு விருந்து ரெடி பண்ணி வைத்துவிட்டு காண்பிக்க வேண்டியதில்லை. த்தோ. த்தோ த்தோ என்று மூன்று முறை கூப்பிட்டால் போதும்.. எங்கிருந்தாலும் விருந்துக்கு வந்துவிடும். அதுதான் அதனுடைய பாஷை. யாருக்கு என்ன பாஷை புரியோமோ அந்த பாஷையில் பேசுவது நல்ல அறிவு. அதற்கு புரியாத பாஷையில் பேசிவிட்டு.. 'அது வரவில்லையே, அதற்கு அறிவில்லை' என்பது அறிவல்ல. இதற்கு பெயர்தான் ....

நான் அஸ்மா அவர்களிடம் "Gli ho organizzato un pranzo per. Dovete venire." என்றால் அஸ்மா வரமாட்டார். அதற்காக அவருக்கு ஜயறிவு(?!) என்று சொல்லிவிடலாமா? ஏனென்றால் அந்த பாஷை அவருக்கு புரியாது. அப்போது என்ன செய்ய வேண்டும். ஒரு இலை, கொஞ்சம் சாப்பாடு இதெல்லாம் வைத்து, அதை மேசைமேல் வைப்பதுபோல் காட்டி, அதை சாப்பிடுவது போல் செய்து, கையை காலை ஆட்டி, நாளை விருந்துக்கு வாருங்கள் என்று புரியவைக்கவேண்டும். அதற்காக உங்களுக்கு பார்த்தறிவு, அதாவது மிருக அறிவு மட்டுமே என்று குறிப்பிட முடியுமா?

//கொடுத்த அழைப்பில் நம்பிக்கை வைத்து, அவர் குறிப்பிட்ட தேதியில் அங்கு செல்லும்போதுதான் அந்த விருந்துக்குரிய அத்தனை ஏற்பாடுகளையும் கண்ணால் பார்க்கிறீர்கள்.//

நான் முன்பே குறிப்பிட்டதுபோல் இது ஒரு சப்பை உதாரணம். இந்த மாதிரி உதாரணங்களையெல்லாம் வைத்து விவாதம் செய்தால் உங்களை குழந்தையாக நினைத்துவிடுவார்கள். உங்கள் உதாரணத்தில் வைக்கப்படும் நம்பிக்கை கண்ணில் காட்டாத உணவுகளின் மீது வைக்கப்படும் நம்பிக்கை அல்ல. அந்த அழைப்பு விடுக்க நிஜத்தில் மானிடராய் வந்தாரே, கண்ணால் காணப்பட்ட அந்த நபர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை. அவர் இருப்பது நிஜம், அவரது பழக்கம் நிஜம். அதனால் அவர் விருந்து வைப்பார் என்று நம்பி செல்கின்றோம். இதையே அவர் ஒருமுறை அழைத்துச் சென்று, விருந்து வைக்காமல் விரட்டி அடித்திருந்தால் அடுத்தமுறை செல்வோமா? இல்லை முன்பின் யாரென்றே தெரியாத ஒருவர் விருந்து வைத்திருக்கின்றேன் வாருங்கள் என்றால், நம்பிக்கையின் பேரில் செல்வோமா? யார் என்றே தெரியாத ஒரு குரல் தொலைபேசியில் அழைத்து, நாளை உங்களுக்கு இந்த இடத்தில் விருந்து என்றால் அஸ்மா நம்பிக்கை அடிப்படையில் போய் சாப்பிட்டுவிட்டு வருவாரா? நமக்கு அங்கே தோன்றிய நம்பிக்கை எப்படி வந்தது? அந்த நபருடன் பேசிப் பழகி, அவர் உண்மை என்பதை அறிந்தபிறகுதானே..

//இந்த ஒரு சிறிய உதாரணத்திலிருந்தே, கடவுளை பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவு வாதமேயல்ல; பார்த்தறிவு வாதமாகும் என்பது சாதாரண பாமர மக்களுக்கும் புரியுமே!//

இந்த சிறிய உதாரணத்தை வைத்து பாமரனாகிய எனக்கு நிறைய புரிந்தது. ஹஹ்ஹ்ஹா.. ஆனால், அதை வெளியில் சொல்ல முடியவில்லை. :-0

//நீங்கள் கூறும் பரிணாம வளர்ச்சி என்பது உண்மையானால், இப்போது ஏன் அந்த பரிணாம வளர்ச்சியை பார்க்க முடியவில்லை? நேற்றோ அல்லது சென்ற வருடமோ அல்லது 50 வருடங்களுக்கு முன்போ எங்காவது ஒரு குரங்கு மனிதனாக மாறிய உண்மை செய்தியை யாராவது கேள்விப்பட்டதுண்டா? ஏன், சரித்திரம் எழுதப்பட்ட காலத்திலிருந்து எடுத்துக் கொண்டாலும் அப்படி ஒரு உயிரினம் வேறொன்றாக பரிணாமம் அடைந்த உண்மை சம்பவங்களை யாராலும் கூறமுடியாது. இதற்கு 'பரிணாம வளர்ச்சி என்பது முடிவுக்கு வந்துவிட்டது' என்று பதில் சொல்லப் போகிறீர்களா? //

அடக்கடவுளே...!! (என்னையும் கடவுளை கூப்பிட வைத்துவிட்டீர்களே :-) உங்களுக்கு தெரிந்த பரிணாம வளர்ச்சி என்பது நீங்கள் இருந்து பார்க்கக்கூடிய 50 வருடத்தில் நடந்தவை மட்டும்தானா? அட.. இப்போது மட்டும் உங்களுக்கு சாதகமாக "எங்கே.. காட்டுங்கள்" என்ற உதாரணத்தை எடுத்துக் கொள்கின்றீர்கள்?!! அதையே நாங்கள் காட்டுங்கள் என்று சொன்னால் அறிவீனம், முட்டாள்தனம், பகுத்தறிவிற்கு அழகில்லை.. (நானும் பார்க்கின்றேன். நீங்கள் மட்டுமல்ல, நீங்கள் கருத்துக்கள் எடுக்கும் தளங்களாகட்டும், விவாதிப்பவர்கள் ஆகட்டும், எதிராளியை வெறும் வார்த்தைகளால், கடவுளை நம்பவில்லையா, நீ முட்டாள், கேள்வி கேட்கின்றாயா, நீ அறிவு இல்லாதவன், இப்படி சொல்கின்றாயா, நீ மூடன்,, இப்படி திட்டுவதில்தான் அதிக வார்த்தைகளை செலவழிக்கின்றீர்களே தவிர, விளக்கத்தில் ஒன்றையும் காணோம். தலைப்பில் மட்டும் தான் விளக்கங்களும், ஆதாரங்களும் இருக்கின்றன. )

//அன்றிலிருந்து இன்றுவரை குரங்கு குரங்குதான், மனிதன் மனிதன்தான் என்ற உண்மையை ..//

நீங்கள் எத்தனை வருடங்களாக குரங்கினைப் பார்த்து வருகின்றீர்கள்? அருமைச் சகோதரியே, பரிணாம வளர்ச்சி என்பது ஒரே நாளில் அடைகின்ற வளர்ச்சியல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகள் சம்பந்தப்பட்ட விசயம். இன்று இருக்கும் அஸ்மாவும், 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஏதோ ஒரு அஸ்மாவும், 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அஸ்மாவும் பெண்கள்தான் என்றாலும், ஒப்பிடுகையில் ஏராளமான விசயங்களில் வேறுபாடுகள் இருக்கும். நீங்கள் இன்று வெட்டி சாப்பிடும் ப்ராய்லர் கோழி சமீபத்திய பரிணாம வளர்ச்சி. உங்கள் வீட்டில் மீன்கள் வளர்த்து இருக்கின்றீர்களா? கட் பிஷ்ம், ப்ளாக் மாலிக்கும் இணைந்து புதிய வகை உருவாகும் பார்த்திருக்கின்றீர்களா? அந்த இனம்கூட ஒரு பரிணாம வளர்ச்சி. டைனோசாரில் ஆரம்பித்து, உலகில் இல்லாமலே போன இனங்கள் எத்தனை உள்ளன தெரியுமா? இப்போதுகூட பாண்டா கரடிகள் அழியும் அபாயம் இருக்கிறது. இவையெல்லாம்கூட பரிணாம வளர்ச்சி.

//நீங்கள் சொல்லும் தோற்றத்தில் வித்தியாசம் என்பது புதுமையிலும் புதுமை! இது என்ன கேலிக்கூத்து?//

பாவம், வெறும் வேதத்தை மட்டும் படித்துவிட்டு, ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு அறிவியலைக்கூட நம்பிக்கையில்லாமல் படித்து வந்திருக்கின்றீர்கள். நான் நிறைய விளக்கம் கொடுக்க நினைக்கின்றேன். சகோதரியே.. மன்னிக்கவும். எனக்கு நேரம் போதவில்லை. முடிந்தால் நாம் என்றாவது சந்திக்கும்போது இதையெல்லாம் பேசலாம்.

// அந்த விதத்தில் எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியே. உங்களுக்கு கொஞ்சம் அறிவியல் தெரிந்திருக்கிறது. //

பயப்படாதீர்கள். இது நான் எழுதிய வார்த்தைகள்தான். அதனை வாபஸ் வாங்கிக் கொள்கின்றேன். தயவுசெய்து மன்னிக்கவும். உங்களுக்கு கடுகளவிற்குகூட அறிவியல் தெரியவில்லை.

//எந்த ஒரு விஷயத்திற்குமே "Axioms fundamental truths Assumptions" என்று சொல்லக்கூடிய அடிப்படை உண்மைகள் உண்டு//
இதையும் ஒரு இணையத்தளத்தில் இருந்து எடுத்துப் போட்டுவிட்டீர்கள். இது ஒரு வாக்கியமா? அல்லது மூன்று வார்த்தைகளா? இதன் மொத்த பொருள் என்ன? இப்படி மூன்று ஆங்கில வார்த்தைகளைப் போட்டுவிட்டால் எல்லோரும் பயந்து ஆஹா இது ஏதோ பெரிய விசயம் என்று எண்ணிவிடமாட்டார்கள் சகோதரி:-) நானும் அந்த ஆற்றில் கட்டை மிதந்த கதையை படித்தேன்.

//கணக்கு, அறிவியல் என்று எல்லாத் துறைகளிலும் இதே நிலைதான். அடிப்படை உண்மைகளை கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளாத துறையே இல்லை என சொல்லலாம். அந்த அடிப்படை உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் உலகில் எதையுமே செய்ய முடியாது.//

நானும் நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அறிவியலில் எல்லா விசயத்தையும் எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வதில்லை. பொத்தாம் பொதுவாக அடிப்படை உண்மைகளை ஏற்றுக்கொள்ளாத துறையே இல்லை என்று சொல்லாதீர்கள். எல்லாத்துறையும் வேண்டாம். ஒரு நான்கு துறையை இங்கே ஆதாரத்துடன் உதாரணம் கொடுங்கள்.

//எல்லாவற்றையும் படைத்த முதல் அடிப்படையான கடவுளுக்கு மட்டும் இன்னொரு (?)அடிப்படையான கடவுளைத் தேடுவதேன்? கடவுளை ஏற்றுக் கொள்ளும் விஷயத்தில் மட்டும் எப்படிப்பட்ட விஞ்ஞானிகளும் அறிவாளிகளும் தங்களின் அறிவை யாருக்கோ கடன் கொடுத்துவிடுகிறார்கள் என்பதே உண்மை!//

உங்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லையென்றால், விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் அறிவை இழந்துவிடுகின்றார்களா? பாவம், இயலாமை கோபமாக மாறி, அவை வார்த்தைகளாய் விழுகின்றது. ஆக்கியோன் இல்லாமல் ஆன பொருளில்லை. தச்சன் இல்லாமல் மேசை இல்லை என்பதையெல்லாம் சொன்னவர்கள் நீங்கள்தான். இதை இல்லை என்று மறுத்தால் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பிவிடுவார்களாம். ஆனால், சக்தியை படைத்த சக்தி யாரென்று கேட்டால் 'ஆ, அதையெப்படி நீ கேட்கலாம். நான் சொல்வதை நீ அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். This is Axioms of the fundamental truths of the Assumptions என்று சொல்வார்களாம் :-)

உலகில் இருக்கும் எல்லா ஆற்றல்களும் மற்றொரு ஆற்றலின் மறுவடிவம் என்று சிறிய அறிவியல் உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனெனில் உங்களைப் பொறுத்த மட்டில் அறிவியலாளர்கள் சொல்வது எல்லாம் பொய். நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், இந்த தொலைபேசி, பார்க்கும் டிவி, பறக்கும் விமானம் இவை எல்லாவற்றையுமே கடவுள்தான் படைத்தார். இது இன்னும் நூறு வருடங்கள் கழித்து இவை வேதத்தில் வேறு ஏற்றப்பட்டுவிடும். அப்போது விவாதிப்பவர்கள் இது எங்கள் வேதத்தில் என்றோ எழுதப்பட்டு இருக்கின்றது என்றுதான் சொல்லப் போகின்றார்கள்.

//ஆரம்பத்தில் மொழிகளே இல்லையென்பதும் விலங்குகளைப் போன்றுதான் மனிதன் இருந்தான் என்பதெல்லாம் வெறும் கற்பனையே! ஆதி மனிதன் படைக்கப்பட்டது முதல் மொழி என்பது இருந்துள்ளது என்பற்கு எவ்வளவோ சான்றுகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரிந்தால்தானே?!//

சத்தியமாக எனக்கு தெரியாது. சான்றுகளை இங்கே கொடுப்பீர்களாக..

//''இந்த உலகம், இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் வீணுக்காக படைக்கவில்லை'', என்றும், ''மனிதனுக்கு வாழ்வையும் மரணத்தையும் ஏற்படுத்தி இருப்பது அவர்களில் செயல்களில் அழகானவர் யார் என்பதை சோதிப்பதற்காகத் தான்!'' இந்த உலகில் நல்லவர்களாக வாழ்ந்தவர்களுக்கு பரிசும், தீயவர்களுக்கு தண்டனையும் கொடுப்பது தானே நியாயம்.

''இதை கொடுக்கும் இடம் தான் மறுமை!'' இந்த உலகம் தேர்வுக்களம் மட்டும் தான்! மறுமையே நிரந்தரமானது,என்கிறான். //

கடவுள் என்ன கிறுக்கனா என்று நான் நேற்று கொடுத்திருந்த ஒரு பத்தியை மீண்டும் இதற்கு பதிலாக படித்துக்கொள்ளுங்கள். இதில் வளரும் கருவை அழிப்பதற்கான பதில் இல்லை. இறந்தே பிறக்கும் குழந்தையை அல்லது ஒரு நாள் மட்டும் உயிர் வாழ்ந்த குழந்தையை "செயல்களில் அழகான குழந்தை" என்று எப்படி அந்த ஆண்டவன் சோதித்து தீர்மானிக்கின்றான் என்பதும் புரியவில்லை. என்னுடைய நிறைய கேள்விகளுக்கும் பதில் இல்லை.

அடுத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கு அன்பு வேண்டுகோள்.

நீங்கள் வேண்டுமென்றால் சில நாட்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். இங்கே பதில் உரைப்பவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக இருப்பதால், இது ஏதோ இஸ்லாத்துக்கும், பாபுவுக்கும் நடக்கும் வாதம் போல் தோற்றம் உண்டாகின்றது. நாளை நான் இந்த மதத்திற்கு மட்டும் எதிரானவன் என்பது மாதிரியான கருத்து வந்துவிடக்கூடாது. மற்ற மதம் சார்ந்தவர்களும் கொஞ்சம் விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்.

கடவுளைப் பற்றிய விவாதங்கள் மிகவும் அருமை. ஆனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்னும் விவாதமே அர்த்தமற்றதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. நாம் நமது ஐந்து அறிவைக் (senses) கொண்டுதான் நம்மைச் சுற்றி உள்ளவற்றை உணர்ந்து புரிந்து கொள்கிறோம்.இப்படி குழந்தையிலிருந்து இன்றுவரை நாம் கற்றுகொண்டவைதான் நம் அனுபவம். நம் அனுபவத்தை ஆராய்ந்து கற்றது அறிவு. குழந்தையிலிருந்து இன்றுவரை எத்தனை நாட்கள் நாம் கடவுளை சிரத்தையுடன் தேடியிருக்கிறோம்? மிகக் குறைவே!

கடவுள் என்றால் என்ன என்று ஒவ்வொரு மதமும் வெவ்வேறு விதத்தில் கூறுகிறது. கடவுளே இல்லை என்கின்ற நாத்திகமும் கடவுளைப் பற்றி மறைமுகமாக விளக்குகிறது. இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்கள் ஒருவரே கடவுள் என்றும் ஹிந்து மதம் போன்றவை கடவுளுக்கு பல உருவம் என்றும் கூறுகின்றன. நாத்திகம் கடவுளை ஹீரோ மாதிரி உருவுகப்படுத்தி, அவர் எங்கே என்று கேட்கின்றது. சில / பல Intelligent designers மனிதர்கள் என்ற Speicies-ஐப் படைத்ததாக Anti-Darwin theory கூறுகிறது. நமக்கு படிப்பதில் ஒரு பிரச்சினை. எழுதுபவரின் கருத்தும் அதைப் படிப்பவர் புரிந்து கொண்டதும் ஒன்றாக இருப்பது மிகக் கடினம்.அதனால் கடவுளைப் பற்றி ஒவ்வொருவரின் எண்ணத்திலும் நம்பிக்கையிலும் குறைபாடில்லை. ஆனால் தெரியாத ஒன்றைப் பற்றி இருக்கிறது என்றும் இல்லை என்றும் விவாதிப்பது சரியில்லை என்பது என் தாழ்மையான எண்ணம்.

என்னை மீறி சில விஷயங்கள் நடக்கும் பொழுது, அதுவும் மிகச் சீராக நடக்கும் பொழுது மனித சக்திக்கும் மனிதபுலன்களுக்கும் (senses) அப்பாற்பட்ட சக்தி இருப்பதாக எனது நம்பிக்கை. அதை கடவுள் என்ற பெயரால் நம்ப விரும்புகிறேன். கடவுளைப் பற்றி எனது எண்ணம் சில வார்த்தைகளில் ...

கடவுள் என்பது இறைத்தன்மை கொண்ட, மனிதர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒரு சக்தி. நமது ஒவ்வொரு புலன்களையும் Computer-ன் Sensors or Input devices-க்கு ஒப்பிடுங்கள். Computer-ல் Camera பொருத்தவில்லை என்றால் Video Streaming செய்ய முடியாது. நமக்கு நமது கண் மாதிரி, Computer-க்கு Camera ... அது மாதிரி கடவுள் என்ற புதிரைப் புரிந்து கொள்ள நமக்கு இன்னொரு புலன் வேண்டும். யோகிகள் கடவுளை உணர நமக்கு போதிப்பது யோகமும் த்யானமும். யோகம் உடம்பின் உட்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், த்யானம் மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் போதிக்கப்படுகிறது. தூய்மையான மனமும் உடம்பும் கடவுளை உணரும் வழி என்று யோகிகள் கூறுகின்றனர். அதாவது கடவுளைக் உணரும் புலன் கிடைக்கும் வழி என்றும் எடுத்துக்கொள்ளலாம். முயன்று பார்க்கலாமே! அதை விடுத்து நமக்கிருக்கும் புலன்களின் மூலம் கிடைத்த அறிவைக் கொண்டு கடவுள் இருக்கிறார் என்றோ இல்லை என்றோ விவாதிப்பது சரியல்ல.இருக்கிறார் என்பதற்கு எப்படி சான்று வேண்டுமோ அப்படியே இல்லை என்பதற்கும் சான்று தேவை.

கடவுள் என்பது இறைத்தன்மை கொண்ட, மனிதர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒரு சக்தி என்று நான் நம்புவதாகக் கூறினேன். அப்படி என்றால் இறைத்தன்மை என்றால் என்ன? நல்லவர்களும், திருடர்களும், கொலைகாரர்களும், மக்களை ஏமாற்றுபவர்களும் கடவுளிடம் வேண்டுவது, "கடவுளே என்னை காப்பாற்று!". கடவுள் சினிமா ஹீரோவாக இருந்தால் நல்லவனை மட்டும்தான் காப்பாற்ற வேண்டும். அப்படியா நடக்கிறது? இறைத்தன்மை என்பது தாய்மையை விட சிறந்த ஒன்று. இறைத்தன்மை கொண்ட அந்த சக்திக்கு அனைவரும் ஒன்றே என்றிருந்தால்தான் அனவரையும் சரிசமமாக பராபட்சமில்லாமல் பார்க்க முடியும். அதனால்தான் நல்லவனும் கடவுளை வேண்டுகிறான்; கெட்டவனும் வேண்டுகிறான். சுகபோதானந்தா (மனஸே ரிலேக்ஸ் ப்ளீஸ்!) ஒருமுறை கூறினார், "நீ ஜனிக்கும் போது உனக்கு பசிக்கும் என்று தாயின் தனத்தில் பால் சுரக்கச் செய்தவன் இறைவன்" என்று. அப்படிப்பட்ட அந்த சக்தி நம்மிடம் பலி கேட்காது; நம்மை துன்புறுத்தாது. அப்படி என்றால் "கடவுளே எனக்கு மட்டும் ஏனிந்த கஷ்டம்?" என்று பலரும் புலம்பக் காரணம் என்ன? இதற்கு ஹிந்து மதம் கர்ம பலன் என்று பதில் தருகிறது. இதைத்தான் என்னை மீறி நடக்கும் சீரான விஷயங்கள் என்று கூறினேன். இதற்கு பதில் கிடைக்கும் வரை கடவுள் இருப்பதாகவே நம்ப விரும்புகிறேன்.

நண்பர் பாபுவின் கருத்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது. நீண்ட நாளாக தேடுகிறார் போலும்!அவர் சென்ற பாதையில் அவருக்கு கிடைத்த அனுபவத்தின் வெளிப்பாடே அது. ஆனால் அதையே நிதர்ஸனம் என்று கூற இயலாது. "ஆக்கியோன் என்ற எல்லையோடு நிறுத்தி கொள்வதுதான் அறிவா? ஆக்கியோனை ஆக்கியது யார் என்று யோசித்து பார்க்க உங்களுக்கு தோன்றவில்லையா?" என்பதை மிகவும் ரசித்தேன். என்ன ஆக்கபூர்வமான சிந்தனை!எதற்கும் ஆதி என்று உண்டு என்றே எனக்குத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, Darwin theory மிகவும் ஆக்கபூர்வமான சிந்தனைதான், ஆனால் அது விஞ்ஞானமாக ஒப்புக் கொள்ளப்படவில்லை. ஏனெனில், குரங்கிலிருனிந்து மனிதன் தோன்றினான் என்று யாரும் நிரூபிக்கவில்லை! Darwin ஆதியைத் தேடினார்; ஆன்மீகமும் ஆதியைத் தேடியது. நம்மால் இரண்டையும் நிராகரிக்க முடியாது.

"ஒரு சக்தி சூரியனைப் படைக்கின்றது. சுற்றிலும் கோள்களை ஓட விடுகின்றது. ஆங்காங்கு நிலாக்களை வைக்கின்றது. ..." என்ற பத்தியில், நல்ல நயமும் கிண்டலும் தொனிக்கிறது. நம்மால் புரிந்து கொள்ளப்படக்கூடிய மனித சக்தியால் மாபெரும் Computer-களையும், சிறந்த மருந்துகளையும் படைப்பது சாத்தியம் என்னும் பொழுது மாபெரும் சக்தி என்று மனிதனால் நம்பப்படும் இறை சக்தியால் இது சாத்தியமே! இப்படி சாத்தியம் என்று நம்பியதால் தோன்றியதுதான் Quantum Physics! :)

"காசு பணம், ஏழை, பணக்காரன் வித்தியாசம், அறிவு போன்ற விசயங்கள் எல்லாம் மனிதன் தோன்றிய நாளில ..." என்ற பத்தியில், நண்பர் பாபு Darwin-ஐத் தீவிரமாக நம்புகிறார். நண்பரே, Darwin Theory இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!

நீண்ட நாட்களுக்கு முன் "A cup of Tea!" (http://www.ashidakim.com/zenkoans/1acupoftea.html) என்ற ஒரு Zen கதை படித்தேன். அதிலிருந்து காலிக் கோப்பையாக என் மனதை வைத்துக் கொண்டுதான் கடவுளைப் பற்றிய என் கேள்விகளுக்கு பதில் தேடுகிறேன். விரும்புபவர்கள் காலி கோப்பை போல் முயன்று பார்க்கலாம்!

My 2cents!

சகோதரி ஷமி அவர்களுக்கு,

அது தனிப் பதிவு அல்ல. நான் நேற்று கொடுத்திருந்த பதிலில் ஒரு பத்தி (para). அதில் கடவுள் என்ன மாதிரி கிறுக்கன் என்று சில கேள்விகளை எழுப்பியிருந்தேன். அதையே உங்களது விளக்கங்களுக்கு மீண்டும் பதிலாகப் படித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அதில் கேட்க்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு, கடவுள் விளையாடுகின்றான், சோதிக்கின்றான், நல்லவர்கள் யாரென்று விளையாடவிட்டு கண்டுப்பிடிக்கின்றான், பரிசு கொடுக்கின்றான் என்பது போன்ற குழந்தைத்தனமான பதில்களைக் கொடுக்காமல், ஏற்றுக் கொள்ளக்கூடிய பொருத்தமான பதில்களை கூறுங்கள்.

அட்மின் அண்ணா ஏற்கெனவே நம்ப பெயரெல்லாம் ஷைத்தான் லிஸ்ட்ல சேர்த்துட்டாங்க.அப்புறம் ஏன் நீங்க வேலையில்லாதமாதிரி இத்தனை கேள்வி கேட்டு பதிலும் சொல்லி கஷ்டப்படுறீங்க...

// நீக்கப்படுகின்றது //

மேலும் சில பதிவுகள்