கடவுள் உண்டா இல்லையா என்பது குறித்த உங்களின் கருத்து

இன்னும் ஒரு controversial title. இது குறித்து ஏற்கனவே அறுசுவையில் ஒரு சிறிய விவாதம் நடந்தது. வருகையாளர்களின் எண்ணங்களையும் தெரிந்துகொள்ள இதை வாக்கெடுப்பிற்கு விட்டிருக்கின்றோம். தங்களின் நம்பிக்கையை வாக்கெடுப்பில் மட்டும் தெரிவிக்காமல், காரணங்களை இங்கேயும் விளக்கினால், அது பலரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, பாபு போன்ற கடவுள் நம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள், ஆதாரப்பூர்வமான கருத்துக்களினால் பக்தி மார்க்கம் திசை திரும்ப வாய்ப்புகள் உள்ளது. அதிகப்படியான நம்பிக்கையினால், நஷ்டங்களை சந்தித்து வருவோர் தங்களைத் திருத்தி கொள்ளவும் இந்த விவாதங்கள் உதவலாம்.

இது கடவுள் என்ற பொதுவான சொல்லைக் கொண்டு விவாதம் செய்யப்பட வேண்டிய விசயம். இங்கே தனிநபர், மதம், ஜாதி, அரசியல் போன்ற விசயங்களை தவிர்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் தாக்கி செய்யப்படும் பதிவுகள் உடனே நீக்கப்படும். இருதரப்பினரும் தங்களது நம்பிக்கை சார்ந்த விசயங்களை தெளிவாக எடுத்துரைக்கலாம். இதனால் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களையும் அலசலாம். நல்லவற்றையும் பட்டியலிடலாம். யார் மனதும் நோகாமல் இந்த விவாதம் செல்லும் வரை அது ஆரோக்கியமானதாக இருக்கும். (இதைவிட செய்வதற்கு எனக்கு ஆயிரம் நல்ல வேலைகள் உண்டு என்று நினைப்பவர்கள், தயவுசெய்து இந்த பக்கம் வரவேண்டாம். அதை இங்கே தெரிவிக்கவும் வேண்டாம். நீங்கள் உங்களின் பணியில் கவனம் செலுத்தலாம்.)

இலட்சியம் செய்யாதீர்கள் சகோதரி. இரண்டு விசயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.

அவர் அந்த பதிவை இங்கே கொடுக்கவில்லை. நேரிடையாக சொல்ல துணிவு இல்லை. அது மதம் என்னும் போர்வை போத்திக்கொண்டு, தைரியமுடன் உரையாடும் இடம். நாளை யாராவது கேட்டால்கூட தனிப்பட்ட யாரையும் தாக்கவில்லை. எங்கள் மதத்தில் உள்ளதை நாங்கள் சொல்கின்றோம் என்று எளிதில் தப்பித்துக்கொள்ளலாம். அதைவிடுங்கள்.., கடவுளையே இல்லையென்று சொல்லும் நாம் சைத்தான்களை நம்புகின்றோமா என்ன? இல்லாத கூட்டத்தில் நம்மை சேர்த்து அதில் ஆனந்தம் கொள்வதில் அவர்களுக்கு ஒரு அற்ப சந்தோசம் கிடைக்கின்றதென்றால் கிடைத்துவிட்டுப் போகட்டுமே.. (விதுபா.. உங்களுக்கு தெரியுமா? சைத்தானையும் கடவுள்தான் படைத்தாரா?? )

இரண்டாவது விசயம். அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே வசைப்பாடியே கடவுளை நம்பு என்று சொல்லிவருகின்றார்கள். வாதத்தின் பொருளை நம்புவதைக் காட்டிலும் வசவு வார்த்தைகளையே நம்புகின்றனர். நம்பவில்லையா முட்டாள், அறிவீனன், அறிவை கடன் கொடுத்தவன், சிந்திக்க தெரியாத ஜென்மம், இப்போது சைத்தான். இதுவே அவர்கள் எந்த மாதிரி பள்ளியில் இருந்து பயின்று வந்திருக்கின்றார்கள் என்பதற்கு சான்று. எங்கள் கிராமத்து பக்கம் சொல்வார்கள். பேசவிட்டாத்தான் தெரியும் வாய்நாற்றம் என்று. அவர்கள் பேசட்டும் :-)

சகோதரர் பாபு நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் பள்ளி பருவத்திலே என் அம்மாவிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் கேட்டிருக்கிறேன்.யாரிடம் இருந்தும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை.கடைசியில் அவர்கள் சாத்தான் இப்படிதான் உன்னை சோதிப்பான்.நீ சோதனைக்கு ஆளாகக்கூடாது என முடித்தார்.சிந்திக்க ஆரம்பித்தால் நிறைய விஷயங்களுக்கு விளக்கம் கிடைக்காது.

அதற்காக நான் கடவுளை இல்லை என்று வாதிக்கமாட்டேன்.நம் அறிவுக்கு எட்டாதவராய் இருக்கிறார்.உலகில் நடக்கும் தீமைகளை பார்த்துக்கொண்டு எந்த தண்டனையும் கொடுக்காமல் இருக்கிறார்.அவர் எல்லோரையும் ஒன்றுபோல் தானே படைத்தார் நாம்தானே நமக்குள் அடித்துக்கொள்கிறோம்.அதனால் தொலைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறார்ரோ?

கடவுளை நம்பி நல்லவழியில் நான் போகிறேன்.நம்பாமல் நீங்களும் நல்வழியில் வாழுங்கள்.கடவுளை நம்பி அடித்துக்க்கொண்டு கடைசியில் என்ன சாதிக்கபோகிறோம்?வெட்டினால் எல்லோருக்கும் ரத்தம் தானே வரும்.இல்லை இவர்கள் இந்த கடவுளை நம்புபவர்கள் இவர்களுக்கு மட்டும் ஸ்பஷல் அப்படி ஏதும் இருக்கா?எல்லாம் நாம் வைத்துகொண்டதுதானே?கடவுளை பற்றி நினைக்காமல் உன்னால் நன்றாக வாழமுடியும் என்றால் வாழுங்கள்.கடவுள் பயம் இருந்தால் மனிதன் நன்றாக வாழ்வான் என்றுதான் பல விஷயங்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.அதை வைத்து மற்றவர்களை பழிக்கவோ,வெறுக்கவோ இல்லை.தெய்வ நம்பிக்கை மனிதனை அன்பினால் இணைத்தால் சந்தோஷம். இல்லை பிரித்து பேதங்களை உருவாக்கினால் அது எதற்கு???????

அன்புள்ள அட்மின் அண்ணாவிற்க்கு,
ஆனாலும் இந்தளவு பொறுமையெல்லாம் நமக்கு கிடையாதுப்பா,
என்னுடைய தந்தை மிகுந்த இறைபக்தியுள்ள குடும்பப்பிண்ணணி யிலிருந்து வந்தவரே,
அவர் எப்போதும் சொல்வது "மனம்தான் ஆலயம்".
மற்றவரை நாம் சொல்லாலும் செயலாலும் புண்படுத்தாமல் ஒருவரையொருவர் புரிந்து கொண்டாலே அது இறைத்தன்மைதான். இதற்க்காக வெளியிலே சென்று இறைவனைத்தேடத் தேவையில்லை" என்று.

இறைவன் உண்டு அல்லது இல்லை என்கின்ற வாதத்திற்கு அப்பாற்பட்டு மேலுள்ள கருத்தில் எனக்கு முழு உடன்பாடுண்டு.

முட்டாள் என்ற வார்த்தை பயன்பாடு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், நீங்கள் குறிப்பிடும் மற்ற வசவு வார்த்தைகளுக்கு கடைசி பொருள் அதுதான்.

அடுத்து ஒரு முக்கியமான விசயம். மேலே உள்ள பதிவில் "அவர்கள்" என்று குறிப்பிட்டு இருப்பது ஷமி, அஸ்மா என்ற இருவரை மட்டுமல்ல. நீங்கள் கருத்துக்கள் எடுத்த பல தளங்களில் பேசி இருப்பவர்கள், இங்கேயே பல இடங்களில் கடவுள் பற்றி பேசி இருப்பவர்கள், நம்பு.. நம்பு என வசை பாடி கடவுளை நம்பவைக்கின்ற மொத்த எதிரணியையும்தான் குறிப்பிட்டு இருக்கின்றேன் :-)

அது பழமொழி போன்று வழக்கில் இருக்கும் சொல். அதன் பொருள் ஒருவர் பேசப் பேசத்தான் ஒருவரின் சுயரூபம் அறிந்து கொள்ள முடியும் என்பது. அதுதான் அங்கே சொல்ல வந்த விசயம்.

அப்புறம் இந்த பதிலை கொடுத்தது பாபு, அட்மின் அல்ல. அவர் வேண்டுமென்றால் இதை நீக்கிக் கொள்ளட்டும். கவலையில்லை. :-)

..

.

.

network error ன்னு வந்ததால நிறைய தடவை க்ளிக் பண்ணிட்டேன்

ரோஸ், உங்க கருத்துக்களை தெளிவாக, அழகாகச் சொல்லியிருந்தீர்கள்.
//தெய்வ நம்பிக்கை மனிதனை அன்பினால் இணைத்தால் சந்தோஷம். இல்லை பிரித்து பேதங்களை உருவாக்கினால் அது எதற்கு???????//

இதுவே தான் எனது கேள்வியும்...

கடவுள்,மதம் எனும் போர்வையில் நிகழும் கொடுஞ்செயல்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் பார்க்கையில் எழுந்த விரக்தியால் வந்த தேடுதல் தான் இப்போதைய கருத்துத் தெளிவுக்கு வித்து எனலாம்.

மற்றபடி நானும் வாசலில் கோலமிட்டு,வீட்டில் விளக்கேற்றி, குழந்தைகளுக்கு ஸ்லோகம் சொல்லிக் கொடுத்து ஒரு சராசரி குடும்பத்தில் வாழும் பெண் தான்.

ஆனால் என்னுடைய கடவுள் கருத்துகளைக் குழந்தைகளிடம் திணிக்கபோவதில்லை. ஏனென்றால், ஒரு மதத்தைபற்றி மட்டுமல்ல பல மதக் கருத்துக்களையும் தெரிந்து கொண்டால் தான் அவர்களும் எதிர்காலத்தில் தங்களைத் தெளிவாக வைத்துக்கொள்ளமுடியும் என்பது என் கருத்து

மீண்டும் மீண்டும் விவாதம் இஸ்லாம் vs பாபு என்பது போல் திசை திரும்பி போய் கொண்டிருக்கின்றது. இதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை. நான் எதற்கும் எதிரானவன் அல்ல. கடந்த 15 நாளாக தினமும் ஒரு வாளி நோன்பு கஞ்சி குடித்துக் கொண்டு வருகின்றேன் என்றால், அது என்னைச் சுற்றியுள்ள எனது இஸ்லாமிய நண்பர்களின் எண்ணிக்கையை காட்டும்:-)

இங்கே கேட்கப்படும் கேள்விகளுக்கு, விவாதிக்கப்படும் விசயங்களுக்கு சகோதரிகள் வேறோர் இடம் சென்று பதில் அளிப்பதில் இருந்தே, அவர்கள் எங்கோ மனதால் காயப்பட்டு, அதற்கு அவர்கள் மார்க்க ரீதியாக விளக்கங்கள் கொடுக்க நினைக்கின்றார்கள் என்பது புரிகின்றது. எனக்கு கடந்த சில நாட்களாக வரும் மின்னஞ்சல்களும் இதனை உறுதி செய்கின்றன. நன்றாக சொன்னீர்கள் என்று பாராட்டுகள் சில (மற்ற மதம் சார்ந்தவர்களிடம் இருந்து), இல்லை இதற்கு விளக்கம் இங்கே இருக்கின்றது பாருங்கள் என்று சில இணையத்தளங்களின் முகவரிகளுடன் சில(குறிப்பிட்ட மதம் சார்ந்தவரிடம் இருந்து). இப்படி மின்னஞ்சல்கள் வருகின்றன.

மொத்த விவாதத்தை மீண்டும் படித்துப் பார்க்கும்போது நான் செய்த ஒரு தவறு தெரிகின்றது. இஸ்லாமிய சகோதரிகளின் பதிவிற்கு மட்டுமே நான் பதில்கள் கொடுத்து இருக்கின்றேன். திருமதி. கவிதா கண்ணன் இரண்டாவதாக பதிந்தவற்றுக்கு பதில் சொல்லவில்லை. சுபாவின் அனுபவத்திற்கு பதில் கொடுக்கவில்லை. அர்த்தம் நிறைந்த பதிவுகள் கொடுத்துள்ள விதுபா, பாவி போன்றோர் பதில்களையும் வழிமொழியவில்லை. தெளிவான வாதத்திற்கு வழி செய்யும் வகையில், நல்லதொரு பதிவு கொடுத்துள்ள உதயபாஸ்கர் அவர்களுக்கும் நான் இன்னமும் பதில் கொடுக்கவில்லை. விவாதம் திசை திரும்பியதற்கு இதுவும் ஒரு காரணம் என்பது புரிகின்றது. கட்டாயம் பதில் கொடுத்தாக வேண்டும் என்ற நிலை வந்தாலொழிய, இனி இஸ்லாமிய சகோதரிகளுக்கு பதில் கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கின்றேன். (இங்கே இந்த விவாதத்தில் மட்டும் :-) மற்றவர்கள் தொடரலாம்.

இந்த விவாதத்தை நிறைய பேர் ஆவலுடன் கவனித்து வருகின்றார்கள் என்பது தெரிகின்றது. சில வி.ஐ.பி களும் கவனித்து வருகின்றனர்!

ஆனால், விவாதம் இன்னமும் ஆரம்ப நிலையிலேயே, இப்பிரபஞ்சம், உயிர்களின் தோற்றம் எப்படி என்பதிலேயே நின்று கொண்டிருக்கின்றது. இரண்டு தரப்புமே இதை நிருபிக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. பிரபஞ்ச 'தோற்றம்', உயிர்களின் 'தோற்றம்' என்பது எல்லாம் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் அல்ல. எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை நடந்த விசயம். மீண்டும் அந்த இடத்திற்கு போய் காரண, காரியங்களை அலசி கண்டிபிடிக்க இயலாது. அறிவியலில் நடந்து கொண்டிருக்கும் விசயங்களுக்கு பதில் இருக்கின்றது. மழை, இடி, மின்னல், பூகம்பம், புயல், பிறப்பு, இறப்பு இப்படி நிறைய நிகழ்வுகளுக்கு பதில் இருக்கின்றது. எல்லாவற்றிற்கும் இல்லையென்றாலும் கூட பெரும்பாலானவற்றிற்கு இருக்கிறது. இன்று விடை இல்லாதவற்றிற்கு நாளை விடை கிடைக்கலாம்.

ஆரம்பத்தில் உயிர் எப்படி தோன்றியது என்பதற்கு சகோதரிகள் சொன்னதுபோல் கோட்பாடுகள்தான் இருக்கின்றன. ஆனால் இப்போதும் உருவாகிக் கொண்டிருக்கும் உயிர்கள் எப்படி உருவாகின்றன என்பதற்கு விதிகளும், விளக்கங்களும் அறிவியலில் இருக்கின்றன. 100 வருடங்களுக்கு முன்பு இல்லாத வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் இன்று அதிகம். இது நாளை இன்னமும் அதிகரிக்கும். வளர்ச்சியை என்னால் பார்க்க முடிகின்றது. உணர முடிகின்றது. அனுபவிக்க முடிகின்றது. 30 வருடங்களுக்கு முன்னால் எத்தனை பேர் செல்போன் உபயோகித்தீர்கள், கம்ப்யூட்டர்கள் உபயோகித்தீர்கள்? இன்று நான் பயன்படுத்தும் அனைத்துமே விஞ்ஞானத்தின் விளைவுகள். வளர்ச்சிகள். விஞ்ஞானம் கடவுளை வைத்து வளரவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட கோட்பாடுகளையும், விதிகளையும் வைத்துதான் வளர்ந்தது. அந்த வளர்ச்சியைப் பார்க்கின்ற என்னால் இதைத்தான், இதை மட்டும்தான் நம்ப முடியும். கடவுளை நம்புங்கள் என்பதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் ஒவ்வொன்றாக பொருள் இழந்து வருவதை நான் உணர்ந்துதான், கண்ணில் தெரியும் வளர்ச்சிக்கு காரணமாய் இருப்பதை மட்டும் நம்புகின்றேன்.

நிறைய விளக்கங்கள், நிறைய உதாரணங்கள், சான்றுகள் கொடுத்து அறிவியலை விளக்க எனக்கு மிகவும் ஆசையாக இருக்கின்றது. ஆனால், நடைமுறையில் அதை செய்ய இயலாது. எனக்கு மற்ற பணிகள் நிறைய இருக்கின்றன. அவ்வபோது இது போன்ற பதிவுகளில் எனக்கு தெரிந்த சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றேன். தற்காலிகமாக கொஞ்சம் விடை பெறுகின்றேன். மீண்டும் இன்று சர்வர் தடைசெய்வது பற்றி நோட்டீஸ் வந்துவிட்டது. கொஞ்சம் அந்த பிரச்சனையை கவனிக்கின்றேன். மற்றவர்கள் தொடருங்கள்.

நடைமுறையில் இந்த நம்பிக்கையினால் உண்டாகும் பிரச்சனைகளைப் பற்றியும் அலசுங்கள். அப்போதுதான் குறைகளை கலைந்து கொள்ள முடியும். ஏமாந்தவர்கள் விழிப்புணர்வு கொள்ள முடியும். விவாதம் அப்படி போகையில் சிலருக்கு அது உபயோகமாக இருக்கும். மீண்டும் சந்திக்கலாம்.

மேலும் சில பதிவுகள்