கடவுள் உண்டா இல்லையா என்பது குறித்த உங்களின் கருத்து

இன்னும் ஒரு controversial title. இது குறித்து ஏற்கனவே அறுசுவையில் ஒரு சிறிய விவாதம் நடந்தது. வருகையாளர்களின் எண்ணங்களையும் தெரிந்துகொள்ள இதை வாக்கெடுப்பிற்கு விட்டிருக்கின்றோம். தங்களின் நம்பிக்கையை வாக்கெடுப்பில் மட்டும் தெரிவிக்காமல், காரணங்களை இங்கேயும் விளக்கினால், அது பலரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, பாபு போன்ற கடவுள் நம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள், ஆதாரப்பூர்வமான கருத்துக்களினால் பக்தி மார்க்கம் திசை திரும்ப வாய்ப்புகள் உள்ளது. அதிகப்படியான நம்பிக்கையினால், நஷ்டங்களை சந்தித்து வருவோர் தங்களைத் திருத்தி கொள்ளவும் இந்த விவாதங்கள் உதவலாம்.

இது கடவுள் என்ற பொதுவான சொல்லைக் கொண்டு விவாதம் செய்யப்பட வேண்டிய விசயம். இங்கே தனிநபர், மதம், ஜாதி, அரசியல் போன்ற விசயங்களை தவிர்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் தாக்கி செய்யப்படும் பதிவுகள் உடனே நீக்கப்படும். இருதரப்பினரும் தங்களது நம்பிக்கை சார்ந்த விசயங்களை தெளிவாக எடுத்துரைக்கலாம். இதனால் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களையும் அலசலாம். நல்லவற்றையும் பட்டியலிடலாம். யார் மனதும் நோகாமல் இந்த விவாதம் செல்லும் வரை அது ஆரோக்கியமானதாக இருக்கும். (இதைவிட செய்வதற்கு எனக்கு ஆயிரம் நல்ல வேலைகள் உண்டு என்று நினைப்பவர்கள், தயவுசெய்து இந்த பக்கம் வரவேண்டாம். அதை இங்கே தெரிவிக்கவும் வேண்டாம். நீங்கள் உங்களின் பணியில் கவனம் செலுத்தலாம்.)

நிச்சயமாக வணக்கதுக்குரியவன் ஒருவன்ந்தான்...பல கடவுள் இருந்தால் உல்கம் பெரும் குழப்பத்தை சன்திக்கும்..ஒவொருவரும் ஆளாளுக்கு ஒரு சட்டத்தை போடுவார்கள்..அப்ரம் மனிதன் வாழ முடியாது..நல்ல மன்னன் ஒரு நாட்டை ஆளுகிரான். மக்கள் ஒரு குரைஉம் இல்லாமல் மிஹ நிம்மதியாக வாழ்ராங்க..அவர்கள் குழப்பம் உள்ள ஜனநாயக ஆட்சியை விரும்புவாரகளா? இதிலிருன்தே அரிந்து கொள்ளூங்கள்...நிசச்யமாக உலகத்தை ஆழுவது ஒரு இறைவன்தான்
நீங்கள் உருவான விதத்தை கவனிக்க வில்லயா?ஒன்ட்ருமே இல்லாமல் இருன்த உங்களை ஒரு துளி தண்ணீர்லிருந்து படைத்தான்..உஙககளை அறிவான மேன்மயான மனிதனாக உருவாக்கியது யார்?
வானத்தை பாருங்கள் எந்த தூணும் இல்லாமல் எப்படி நிற்கிரது.பூமி மனிதன் வாழ்வத்ற்கு ஏற்ப சமதளமாக விரிச்சது யார்?வானத்தை போல பூமியை மேக மூடமாக காற்று இல்லாமல் ஆகிருன்தால் நம்மால் வாழ முடியுமா?குறிப்பிட்ட உயரம் வரை காற்றை உன்கலால் நிருத்தி வைக்க முடிஉமா?சுவாசிக்க முடிஆவிட்டால் நாம் இற்ந்து விடுவோம் பிரகு ஏன் மனிதன் மரனம் வருகிரது..அவ்னது உயிரை யார் கைப்பற்றுவது?
இரும்பு மனிதனுக்கு எவ்வலவு விதத்தில் பயன் படுகிரது,,மறுக்க முடிஉமா? அது பூமியில் உருவாக வில்லை விஞ்ஞானிகள் இப்போதுதான் கண்டு பிடிதார்கள்...அது வானத்திலிருன்து பூமியில் விழுகிரது..அதை குறிப்பிட்ட் நேரத்திர்க்கு,, தடுத்து கொஞச்ம் கொஞ்ச்மாக வருவது எப்படி?அதை யார் பாதுகாப்பது?அதை யார் பூமியில் சரியான இடத்தில் எறிவது? மக்களின் தலையில் விழுந்தா என்னாகும்?
ஒவ்வொரு உயிரினமும் உணவை சேர்த்து வைப்பதில்லை..மனிதன் தவிர அந்த 5அறிவு உயினம் தனது உணவை எப்படி தேடிக்கொள்கிரது..?
இன்னும் நிரய்ய இருக்கிரது...உங்கலுடய கேள்வியை இப்பதான் பார்தேன்.. இன்னும் நான் உஙகளுக்காக நோன்பு திற்க்கமல் பதில் எழுதுரேன்..அண்ணா உன்களுடய ஆர்வம் ஆரோக்யமானது..நிரய்ய புக் படீங்க எது உன்மயான,,நேரான வழி சொல்லுதுன்னு நிச்சயம புரியும்...அறுசுவை டீம்,க்காக நானும் நிரய்ய படிசு எழுதுரேன்...spelling mistake mannikkaum

mub

நிச்சயமாக வணக்கதுக்குரியவன் ஒருவன்ந்தான்...பல கடவுள் இருந்தால் உல்கம் பெரும் குழப்பத்தை சன்திக்கும்..ஒவொருவரும் ஆளாளுக்கு ஒரு சட்டத்தை போடுவார்கள்..அப்ரம் மனிதன் வாழ முடியாது..நல்ல மன்னன் ஒரு நாட்டை ஆளுகிரான். மக்கள் ஒரு குரைஉம் இல்லாமல் மிஹ நிம்மதியாக வாழ்ராங்க..அவர்கள் குழப்பம் உள்ள ஜனநாயக ஆட்சியை விரும்புவாரகளா? இதிலிருன்தே அரிந்து கொள்ளூங்கள்...நிசச்யமாக உலகத்தை ஆழுவது ஒரு இறைவன்தான்
நீங்கள் உருவான விதத்தை கவனிக்க வில்லயா?ஒன்ட்ருமே இல்லாமல் இருன்த உங்களை ஒரு துளி தண்ணீர்லிருந்து படைத்தான்..உஙககளை அறிவான மேன்மயான மனிதனாக உருவாக்கியது யார்?
வானத்தை பாருங்கள் எந்த தூணும் இல்லாமல் எப்படி நிற்கிரது.பூமி மனிதன் வாழ்வத்ற்கு ஏற்ப சமதளமாக விரிச்சது யார்?வானத்தை போல பூமியை மேக மூடமாக காற்று இல்லாமல் ஆகிருன்தால் நம்மால் வாழ முடியுமா?குறிப்பிட்ட உயரம் வரை காற்றை உன்கலால் நிருத்தி வைக்க முடிஉமா?சுவாசிக்க முடிஆவிட்டால் நாம் இற்ந்து விடுவோம் பிரகு ஏன் மனிதன் மரனம் வருகிரது..அவ்னது உயிரை யார் கைப்பற்றுவது?
இரும்பு மனிதனுக்கு எவ்வலவு விதத்தில் பயன் படுகிரது,,மறுக்க முடிஉமா? அது பூமியில் உருவாக வில்லை விஞ்ஞானிகள் இப்போதுதான் கண்டு பிடிதார்கள்...அது வானத்திலிருன்து பூமியில் விழுகிரது..அதை குறிப்பிட்ட் நேரத்திர்க்கு,, தடுத்து கொஞச்ம் கொஞ்ச்மாக வருவது எப்படி?அதை யார் பாதுகாப்பது?அதை யார் பூமியில் சரியான இடத்தில் எறிவது? மக்களின் தலையில் விழுந்தா என்னாகும்?
ஒவ்வொரு உயிரினமும் உணவை சேர்த்து வைப்பதில்லை..மனிதன் தவிர அந்த 5அறிவு உயினம் தனது உணவை எப்படி தேடிக்கொள்கிரது..?
இன்னும் நிரய்ய இருக்கிரது...உங்கலுடய கேள்வியை இப்பதான் பார்தேன்.. இன்னும் நான் உஙகளுக்காக நோன்பு திற்க்கமல் பதில் எழுதுரேன்..அண்ணா உன்களுடய ஆர்வம் ஆரோக்யமானது..நிரய்ய புக் படீங்க எது உன்மயான,,நேரான வழி சொல்லுதுன்னு நிச்சயம புரியும்...அறுசுவை டீம்,க்காக நானும் நிரய்ய படிசு எழுதுரேன்...spelling mistake mannikkaum

mub

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. எங்கள் மன கஷ்டங்களை சொல்லி முறையிட ஒருவர் வேண்டும், அவர்தான் கடவுள். நாங்கள் சோர்ந்திருக்கும்போது நம்பிக்கை தரும் மருந்தாக ஒருவர் வேண்டும். அவர்தான், கடவுள். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நன்றி சொல்ல ஒருவர் வேண்டும். அவர்தான் கடவுள்.ஒருவர் இதற்கெல்லாம் கடவுள் தேவையில்லை நானே பார்த்துக்கொள்வேன் என்றால் அதையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

மக்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டதே மதங்களாக இருக்குமோ? எல்லா மதத்திலுள்ள கடவுளும் போதிப்பது நன்நெறிகளைத்தான். அதன்படி நாம் மற்றவர்களுடைய மனதைக்கூட புண்படுத்தாமல் வாழ்கிறோமா என்பதுதான் முக்கியம். கடவுளை வணங்குபவர் அனைவரும் நல்லவர் அல்ல, கடவுளை நம்பாதவர் கெட்டவரும் அல்ல.
நான் நாகூர் தர்காவிற்கும் போயுள்ளேன். வேளாங்கன்னி அன்னையையும் தரிசித்துள்ளேன். கடவுளை நம்பாதோர் சிலரும் என் நண்பர்கள்தான். அனைத்து மதங்களையும் அறிந்து கொள்ள எனக்கு ஆசைதான். அதற்காக மற்ற மதங்களை தாழ்த்தி பேசி, இதனால்தான் என் மதம் உயர்ந்தது, என்று யாரேனும் சொன்னால், அவர் பேசுவதை கேட்க நான் தயாராயில்லை. அதேபோல், கடவுள் நம்பிக்கை அற்றவரும்(சில அரசியல்வாதிகளைப்போல) கடவுளை நம்புவோரின் மனது புண்படும்படி பேசாதிருத்தல் நலம். அவரவர் விரும்பிய பாதையை தேர்ந்து எடுத்துக்கொள்ள அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. போகும் பாதை சரியானதுதானா என்பதுதான் முக்கியம்.

அதனால் கடவுளை காரணம் காட்டி மற்றவர் மனதை புண் படுத்தாமல், மனிதர்களை மனிதர்களாக நேசிக்க கற்று கொள்வோம்.

before start this world there is only one coummunity who beleive only one god. days are running then people imagine about god. they were giving importance their own wishes and they want to do, for that they created so many gods in this world. every generation have new thoughts and wishes.even it was bad activity. but people dont like truth so they denied greatest god.they follow the peoples like, someone did any tricks they beleive it.that tricks contain their own wishes.so they disbeleive the god. god never create difference. god gave so many evidence in this world to belive him. if we search it deeply mean we should know about gods grace.

//கடவுள்,மதம் எனும் போர்வையில் நிகழும் கொடுஞ்செயல்களுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?
இதை எல்லாம் கடவுளா செய்ய சொன்னார்?//

கடவுள் எதையும் யாரிடமும் வந்து நேரடியாகச் சொல்லவில்லையே...அதுதானே இங்கு பேசப்படும் ப்ரச்சனையே....

தீயது செய் என்று கடவுள் யாரிடமும் சொல்லவில்லை,அதுபோல நல்லது செய் என்று மட்டும் யாரிடமாவது நேரில் வந்து சொல்லியிருக்கிறாரா?... சொல்லுங்கள்.

எந்தக் கடவுள் எந்த மதத்தைப் படைத்தார்? கடவுள் என்பவர் ஆணா, பெண்ணா? எந்தக் கடவுளுமே சொல்லாமல் மனிதன் ஏன் இப்படி மதம் மதம் என்று மதம் பிடித்து அலையவேண்டும்? மதத்தின் பேரில் செய்யப்படும் படுகொலைகள் யாரை,எந்தக் கடவுளை சாந்தப்படுத்தும்? இப்படி ஆயிரம் கேள்விகள்.

மனித இனம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்று எண்ணி முந்தைய தலைமுறையினர் பின்னால் வரும் தலைமுறைக்கு எழுதிவைத்துச்சென்ற மிச்சங்கள் தானே இன்று வேதங்களாகவும் இதிகாசங்களாகவும் நாம் பாதுகாத்துவரும் பொக்கிஷங்கள்?

கற்கால மனிதன் மழை,மின்னல்,இடி,காற்று,கடல் அலை இவை எல்லாமே அற்புத ஆவிகள் என்றும், அவற்றின் கோபமே மழை வெள்ளமாகவும், அலையின் சீற்றமாகவும் வெளிப்படுவதாகக் கருதியதாகப் படித்திருக்கிறோம்.அதனால் அவற்றையே கடவுள்களாகக் கருதி வணங்கியதாகவும் அறிகிறோம்.

வானமென்னும் ஆண் தெய்வமும் பூமியாகிய பெண் தெய்வமும் சேர்ந்து இந்த பூமியைச் சூழ்ந்திருக்கும் வாயுமண்டலத்தையும் இன்ன பிறவற்றையும் படைத்ததாக ஒரு கற்கால, கற்பனைக்கதை கூடப் படித்திருக்கிறேன்.இவ்வாறு படிப்படியாக வந்த பரம்பரைக் கதைகள் தான் நாம் நம்பும் பல உண்மைகளாக இருக்கின்றன...

ஆனால் மனித வாழ்க்கையில் நம்பிக்கை மிகவும் அவசியம் தான். மனிதன் முதலில் தன்னை, தன் திறமையை, தன் உழைப்பை நம்பி மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாதவனாய் வாழ்ந்தாலே போதுமே... இறுதியில் கிடைக்கும் என்று சொல்கிறீர்களே அந்த சொர்க்கம் இப்போதே வந்து விடுமே...

அப்புறம் பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்குப் பிறகு எந்த வளர்ச்சியும் இல்லையே என்று வருத்தப்பட்ட சகோதரிகளே, முன்பெல்லாம் மனிதர்களை இயற்கை சீற்றங்களும் ,இனம் புரியாத நோய்களும் வந்து கூட்டம் கூட்டமாக அழித்தது. அனால் இப்போது ஆந்தராக்ஸ், அணுகுண்டு, ஓடும் ரயிலில் வெடிகுண்டு,சமைக்கும் குக்கர் வெடிகுண்டு என்று விதம் விதமாக மனிதனே அழிக்கும் தொழில் செய்யப் புறப்பட்டிருக்கும் இந்த்ப் பரிணாம வளர்ச்சி உங்கள் கண்ணில் படவில்லையா என்ன???

அமாங்க, கடவுள பத்தி பேச கூப்பிட்டா,மதங்கள் பதி பேசறீங்க. சரி பேசுங்க. பேசுங்க.

உலகத்துல எத்தனை எத்தனை கடவுள்கள், இருக்காங்க தெரியுமா. மதம் வேணான்னு சொல்றவங்க யாருக்கும் மதம் பிடிக்கலங்க. மதம் மதம் சொல்லிக்கிட்டு இருக்காங்களே, அவங்களூக்கு தான் மதம்ங்கற மதம் பிடிச்சிருக்கு:-)

ஆமா, இத்தனை கடவுள்ல ஒரே ஒரு கடவுள், அவர் தான் சுபீரியர்னு காட்டலாமில்ல. அவர் அவ்ளவு உயர்த்தவரா இருந்தா. கடவுள்னு ஒருத்தர் இருந்தா தானே அதுல எந்த கடவுள், உயர்ந்தவர், எந்த மதம் உயர்ந்த மதம்னு சொல்ல.

கடவுள் இருந்தா, நல்லது செய்றவங்களுக்கு நல்லது செய்யலாமே. அப்படி செஞ்சா, "ஓ நல்லது பண்ணா, நாம சதோஷமா இருக்கலாம்"னு நம்மல்ல பல பேர் கெட்டது செய்ய மாட்டாங்க இல்ல. அட்லீஸ்ட் கெட்டது பண்ரவங்கள தண்டிக்கலாம் இல்ல. அதுவும் இங்க நடக்கறதில்ல. அப்போ கடவுள், இருக்காறன்னு கேட்டா. இருக்காங்க. நம்ம தாய், தந்தை. அவங்க தான் முதற் கடவுள்.
தாயும் தந்தையும் இல்லனா, நீங்களூம் இல்ல. கடவுள் வந்து உங்கள, உங்க தாய் வயித்துல வெச்சிடல. தந்தைன்னு ஒருத்தர் வந்து, அவங்க ஒண்ணு சேர்ந்தா தான் குழந்தை. புரியுதுங்களா. யாராவது ஒருத்தர் சொல்லட்டும், அப்பா இல்லாம கடவுளே கொண்டு வந்து குழதையை தரார்னு.

விது, சொன்னது மாதிரி, வேதங்களும், கீதைகளூம், குரான், பைபில் எல்லாமே மனிதனால் உருவாக்கப்பட்டவை தான். காரணம், மனிதன், ஒருவனை ஒருவன் கொன்று வாழந்த காலம் அது. அப்போது, மனிதன் இப்படி தான் வாழ வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை தான் அவை. உலகின் ஒவ்வொரு மூலையில், ஒருவர் ஒவ்வொரு விதமாக எழுதினார்.

ஒரே மதத்தில் உள்ளவர் தான் கடவுள் என்றால் ஏன், உலகில் உள்ள அனைத்து மக்களையும், தன் மதத்திற்க்கு மாற்றும் சக்தி அவருக்கு இல்லையா. அப்புறம், அவர் எப்படி எல்லாருக்கும் அப்பார்பட்ட சக்தி ஆவார்:-)

என்னோட அம்மா சொன்னாங்க, கடவுள் இருக்காங்க ன்னு. நானும் அதை நம்பிகிறேன் அவர்களுக்காக:-) (அப்பாக்கு அந்த நம்பிக்கை இல்ல:-), என்னோட கணவருக்கும் நம்பிக்கை இல்ல:-))எங்க வீட்ல நான் கோவிலுக்கு போவேன். வருவேன். ஆனா கடவுளுக்காக அல்ல. என் குடும்பத்தினர்க்காக. இதுவரைக்கும் கடவுள் கிட்ட
எதுவுமே கேட்டது இல்ல. ஆனா நான் சந்தோஷமாக தான் உள்ளேன். நம்முடன் யாரும் இல்லாதபோது, பயப்படாமல் இருக்க, நமக்கு ஒரு பொய்யான துனை தேவைப்படுகிறது. அப்போது நாம நம்மக்கூட ஒருதன்ங்க இருக்காங்ன்னு நம்ம மனசுல சொல்லிகறதால பயம் குறையுது. அது தான் positive energyனு சொல்றோம். தீபம் ஏற்றினா கூட அந்த சக்தி கிடக்கிறது. அதனால் தான் தீபம் ஏற்றுகிறோம்.

தீபம் ஏற்றும் போது, கற்பூரம் ஏற்றும் போதும் நம் மனதிற்க்கு அந்த பாஸிடிவ் சக்தி கிடைக்கிறது. அதை கடவுள் என்றோ, வேறு ஒன்று என்றோ அழைத்துக்கொள்ளலாம்:-) ஆனால் அதை வைத்து எங்கள் மதம் தான் மேலானது, உயர்வானது என்று சொல்லும் போது, எந்த மதத்தில் கடவுள் வந்து உங்களீடம் பேசுவார், உங்கள் கண்ணுக்கு தெரிகிறார் என்றூ சொல்லுங்க்கள். நான் இக்கணமே, அந்த மதத்திற்க்கு மாற தயாராக இருக்கிறேன்:-)

ஒன்னு சொல்லனும். ஒவ்வொருத்தரும் கடவுளோட அவதாரம் தான் இவ்வுளகிலே:-) ஒவ்வொரு மனிதனும், ஏதோ ஒன்றை invent செய்றான்:-) முன்மே இருந்ததை கண்டுபிடிக்கவில்லை. புதிதாக நமக்கு தருகிறான்:-) நல்லது செய்றவங்கள கடவுள்ன்னு சொல்லலாம்:-) ஏன் சும்மா audience போல இருந்து அடிச்சுக்கோங்க, புடிச்சுக்கோங்க சொல்ற ஒருத்தர், இருக்கார்னு வேற சொல்லி, அதுக்காக கடவுளாகியா பல மனிதர்களை அவமதிக்கனும்:-)

எனக்கொரு சந்தேகம். கெட்டது மட்டுமே பண்ரவனை கடவுள் எப்படி இவ்ளவு சந்தோஷமா வெச்சுக்காறார். நல்லது மட்டும் பண்ரவங்களுக்கு மட்டும் கடவுள் ஏன் எப்பவுமே கஷ்டத்தை கொடுக்கறார்:-)

நான் கவனிச்ச ஒன்னு என்னனா. நாம தப்பு பண்ணி, அப்ப கடவூளே காப்பாத்துன்னு வேண்டி உருகி, நாம எதுலயும் மாட்டிக்கலன்னு வெச்சுக்கோங்க, அப்ப, நம்ம மனசுல ஓ கடவுள் காப்பாத்தி இருக்கார் நம்மன்னு தோணி, இனி கடவுள கும்பிட ஆரம்பிச்சிடறாங்க. அதுவும், அப்ப புதுசா அவதரிச்சவரா இருந்தா கூட, அவர் கடவுள் ஆயிடறார்:-)இதில ஒரு விஷேஷம் என்னனா, அதுக்கப்புறம் அவங்க நல்லது செய்றாங்களன்னா இல்ல. திரும்பவும் கெட்ட வேலை மட்டுமே செய்றாங்க:-)எதிரிகள அழிக்கறதுக்கு ஹோமம் பண்ராங்க. எதுக்குமே நல்லது யோசிக்கறதே இல்ல.

இதெல்லாம் விட்டுட்டு, நம்ம மனசு நல்லதா இருந்தா, நாம தான் கடவுள் னு நினச்சு பாருங்க. நாம நிஜமாவே கடவுள் ஆகிவிடலாம்:-) கெட்டது நினைக்காம நல்லது மட்டுமே நினக்கற மனசு தான் கடவுள். அப்படி எத்தனை பேர் இருக்காங்க. ஒருத்தர் இருந்தா சொல்லுங்க. அவர் தான் கடவுள்னு சொல்லலாம்:-)

ஷமீ,
நீங்க சொல்லி இருக்கீங்கல்ல, இவங்க சொல்வாங்க, அவங்க கேட்பாங்கன்னு, ஆமா கேட்கறோம். கடவுள் இருந்தா பதில் சொல்லனும் இல்ல. கேட்கரர்த்துக்கு தானே அவர் இருக்கார். சும்மா பாக்கரதுக்கு அவரு எதுக்கு சொல்லுங்க. நாமலஏ அது தானே பண்றோம்:-) ஆசிரியரா இருந்தா கூட கேள்வி கேட்டா பதில் சொல்லனும், தெரியுமா?????கேள்வியையே பதிலா தரக்கூடாது!!!!!!

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

தங்களின் சிந்தனைக்கும் புலன்களுக்கும் எட்டாதவற்றையெல்லாம் கடவுளாக்குவதுதான் பகுத்தறிவா?//

எங்களின் சிந்தனைக்கு எட்டாதவைதான் கடவுள் என்று நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னோமா? சிந்தித்து சந்தேகத்திற்கிடமின்றி கடவுளின் உள்ளமையை உணர்ந்துதான் நம்பியிருக்கிறோம்.

//இப்படித்தான் அது என்னவென்றுகூட பொருள் பாராமல், தம்மை சார்ந்தவர்கள் எது சொன்னாலும் அதை அப்படியே யோசிக்காமல் எடுத்துக் கொள்கின்றீர்கள்//

சில நேரங்களில் டைப் பண்ணக்கூடிய சிரமத்தை மிச்சப்படுத்த, தேவையான தளங்களிலிருந்து கருத்துக்கள் எடுக்கும்போது, அதை அப்படியே COPY பண்ணி, PASTE செய்ததால் வந்த சிறு தவறு, இதைப் போய் ஒரு பேச்சு என்று பேசுகிறீர்களே? ஆமா........., இணையத்திலிருந்து எடுத்தீர்கள்..இணையத்திலிருந்து எடுத்தீர்கள்....என்று சொல்கிறீர்களே? நமக்கு மட்டுந்தான் நல்ல கருத்துக்கள் தோன்றும், நாம் மட்டும்தான் விவாத திறமையோடு பேசுவோம் என்று நினைப்பவர்கள் வேண்டுமானால் அடுத்தவர்களின் நல்ல கருத்தை எடுத்துக்கொள்ளாமல் இருக்கலாம். பொதுவாக விவாத அரங்கில் பங்கேற்பவர்கள் கூட, அவரவர்களுக்கு தேவையான கருத்துக்கள் கொண்ட ஏடுகளோடு வருவது சகஜம்! அதுபோலத்தான், எனக்கு தேவையான நல்ல கருத்துக்கள் கிடைத்ததை இதில் சேர்த்திருந்தேன். ஏன், உங்களை ஒரு புத்திசாலி என்று நம்பியிருக்கிறோம்.( கடவுள் கொள்கையில்....... ? ஊம்ஹூம்.......) எப்போதோ நீங்கள் சொன்ன நாலு நல்ல கருத்துக்களை தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளக்கூடாதா? இது தவறென்று சொல்லவில்லையே என்று நீங்கள் சொல்லப்போவதாக இருந்தால், தேவையில்லாமல் அதை இங்கு சுட்டிக்காட்டி கமெண்ட் அடித்திருக்கவும் தேவையில்லை!

//உங்கள் உதாரணத்தில் வைக்கப்படும் நம்பிக்கை கண்ணில் காட்டாத உணவுகளின் மீது வைக்கப்படும் நம்பிக்கை அல்ல. அந்த அழைப்பு விடுக்க நிஜத்தில் மானிடராய் வந்தாரே, கண்ணால் காணப்பட்ட அந்த நபர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை.//

இதைத் தானே நாங்களும் சொல்கிறோம். உதாரணத்தை சொன்னால் பளிச்சென்று புரிந்துக் கொள்வீர்கள் என்று நினைத்தோம். சரி, பரவாயில்லை! அதாவது, அழைப்பு விடுக்க நிஜத்தில் மானிடராய் வந்தாரே, கண்ணால் காணப்பட்ட அந்த நபர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை என்பது, மானிட உலகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் மீது கொண்ட நம்பிக்கைக்கு உதாரணம்! கண்ணில் காட்டாத உணவுகளின் மீது வைக்கப்படும் நம்பிக்கையும், அந்த விருந்து உண்டு என்று நம்புவதும் மரணத்திற்கு பிறகு உள்ள மறுமை வாழ்க்கை மீதும், அந்த மறுமையில் தீர்ப்பு சொல்ல காத்திருக்கும் ஒரே அரசனான அந்த கடவுள் மீதும் கொள்ளும் நம்பிக்கை! அந்த உதாரணம் இப்போது புரிந்ததா? அல்லது அதற்கும் ஏதாவது கமெண்ட் அடித்து திசை திருப்புவீர்களா?

//திட்டுவதில்தான் அதிக வார்த்தைகளை செலவழிக்கின்றீர்களே தவிர, விளக்கத்தில் ஒன்றையும் காணோம். தலைப்பில் மட்டும் தான் விளக்கங்களும், ஆதாரங்களும் இருக்கின்றன.//

நாங்கள் யாரையும் திட்டவுமில்லை, அப்படி திட்டிதான் கடவுளை நம்பவைக்கவேண்டும் என்ற அவசியமுமில்லை. கடவுளின் உள்ளமையை சொல்வோம். நம்புபவர்கள் நம்பட்டும், நம்பாதவர்கள் நம்பாமலேயே இருக்கட்டும் ( கடவுள் அவர்களுக்கு நேரான வழியைக் கொடுக்கும் வரை)!

அதே சமயம், "ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு அறிவியலைக்கூட நம்பிக்கையில்லாமல் படித்து வந்திருக்கின்றீர்கள்", "உங்களுக்கு கடுகளவிற்குகூட அறிவியல் தெரியவில்லை", "ஒரு சிறிய அறிவியல் உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை" என்றெல்லாம் நீங்கள் மட்டும் கூறுவீர்கள்! வாதம் என்று வந்தால் கல்லடிக்கும் மீறிய (உங்களின் சொற்களைப் போன்ற) சொல்லடிகளையெல்லம் வாங்கித்தான் ஆகவேண்டும் என்று நாங்கள் பொறுத்துக் கொள்வோம். (உங்களுக்காக அல்ல, கடவுளுக்காக!) திட்டுகிறார்களே..பேசினால்தான் சுயரூபம் தெரியும் என்றெல்லாம் உங்களைப் போன்று நாங்கள் புலம்புவதில்லை!

திட்டுதல் என்ற உங்களின் வார்த்தைக்காக ஒன்ற சொல்லிக் கொள்கிறேன். ஒரு ஆசிரியரை ஆசிரியர் என்றுதான் சொல்வோம். மாணவனை மாணவன் என்போம். அதேபோல் திருடனை திருடன் என்றும் பொய்யனை பொய்யன் என்றும் சொல்வோம். நல்லதோ கெட்டதோ அந்த செயலை வைத்து ஒருவரைக் குறிப்பிடுவது அனைவருக்கும் தெரிந்த சாதாரண உண்மை! இதே போலத்தான், பகுத்தறிவுக்கு பொருந்தாத விஷயத்தை பேசும்போது, இது அறிவுடமையல்ல என்று நாங்கள் மட்டுமில்லை, நீங்களாக இருந்தாலும் சொல்லத்தான் செய்வீர்கள். இதில் திட்டுதல் ஒன்றுமில்லை!

//இப்படி மூன்று ஆங்கில வார்த்தைகளைப் போட்டுவிட்டால் எல்லோரும் பயந்து ஆஹா இது ஏதோ பெரிய விசயம் என்று எண்ணிவிடமாட்டார்கள்.//

இது நீங்கள் சொன்னதுபோல் உள்ள அந்த தளத்திலிருந்து, இருந்ததை கட் பண்ணாமல் போட்டதே தவிர, நீங்கள் கற்பனை பண்ணுவதுபோல் யாரையும் ஆங்கிலப் பூச்சாண்டி காட்டுவதற்கல்ல!

//உங்களைப் பொறுத்த மட்டில் அறிவியலாளர்கள் சொல்வது எல்லாம் பொய்.//

எந்த இடத்திலாவது நாங்கள் அப்படி சொல்லியிருக்கிறோமா? நாங்கள் சொல்லாததையெல்லாம் சொன்னதாக தயவு செய்து கூறவேண்டாம்!

"விஞ்ஞானம் என்பதில் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானமும் உண்டு, வெறும் அனுமானங்களான, நிரூபிக்கப்படாத விஞ்ஞானக் கோட்பாடுகளும் உண்டு. இந்த விஞ்ஞானக் கோட்பாடுகள்தான் பொய் என்றும் பின்னால் கூறப்படலாம், உண்மை என்று நிரூபிக்கவும் படலாம்" என்றுதான் சொல்லியிருந்தோம்.அதற்காக
அறிவியலாளர்கள் சொல்வது எல்லாம் பொய் என்று நாங்கள் சொன்னதாக அபாண்டமாக சொல்ல எப்படி மனம் வருகிறது? உங்களின் பார்வையில் சாதாரண அறிவியலைப் பற்றி கூட தெரியாத நாங்கள், விஞ்ஞானத்தைப் பற்றி பேசவந்துவிட்டோம் என்று கூட மட்டம் தட்டுவீர்கள் அறிஞரே!

//தலைப்பில் மட்டும் தான் விளக்கங்களும், ஆதாரங்களும் இருக்கின்றன.//
//என்னுடைய நிறைய கேள்விகளுக்கும் பதில் இல்லை. //

என்னுடைய பதிவின் இறுதியில், " இன்னும் உங்களுக்கு சொல்லவேண்டிய பதில்களும் ஆதாரங்களும் எவ்வளவோ காத்திருக்கிறது. அடுத்தடுத்த பதிவுகளில் சந்திப்போம்!" என்று குறிப்பிட்டிருந்தேனே, கவனிக்கவில்லை போலும்!

சரி, இதுவரை உங்களின் நக்கலான வாதத்திற்கு மட்டுமே பதில் கொடுத்து வந்தேன். இப்படியே போனால் உருப்படியான எந்த தகவல்களையும் சொல்ல முடியாது. அதனால் கடவுளின் உள்ளமையைக் காட்டும் சான்றுகளை கூறுகிறேன்.

அதற்கு முன்.......,

கடவுள் இருக்கிறார் என்று நம்பக்கூடிய எங்களுக்கு இருக்கக்கூடிய அற்புதம் வாய்ந்த ஒரே ஆதாரம் திருக்குர்ஆன் தான்! அந்த குர்ஆன் மற்றவர்கள் நினைப்பதுபோல், இஸ்லாமியர்களுக்கு மட்டும் அருளப்பட்டது அல்ல! அதைப் பின்பற்றுபவர்கள் வேண்டுமானால் இஸ்லாமியர்கள் என்று அழைக்கப்படலாம். ஆனால், உலக மானிடர்கள் அனைவருக்கும் அருளப்பட்ட ஒரு பொதுமறையே திருக்குர்ஆன்! அதனால் தனிப்பட்ட ஒரு பிரிவினருக்குள்ள வேதம் என்ற அடிப்படையில் இல்லாமல் நம் அனைவருக்கும் பொதுவான ஒரு வேதமாக, அதன் கருத்துக்களை இங்கே எடுத்துக் காட்டுகிறேன். தயவு செய்து கேளுங்கள்!

கடவுள் இருக்கிறார் என்று குர்ஆனை வைத்து எப்படி நம்புகிறோம்?

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு இறக்கியருளப்பட்ட அந்த வேதத்தில், இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடிக்கக்கூடிய அறிவியல் உண்மைகளை திருக்குர்ஆன் தன்னகதே கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றின் தலைப்புகளை மட்டும் உங்களுக்காக இங்கே தருகிறேன். அந்த தலைப்புகள் பற்றி நீங்கள் தேவைப்பட்டால் விளக்கம் கேளுங்கள், அவற்றை தருவதற்கு தயாராக இருக்கிறேன். ஏனெனில், ஒவ்வொன்றும் பக்கம் பக்கங்களாக பேசப்படவேண்டியவை. ஒரே சமயத்தில் கூறிவிட முடியாது. தேவைப்படும்போது ஒவ்வொன்றாக பேசுவோம்!

திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளில் சில:-

- பேரண்டத்தின் தோற்றம் பற்றியது
- மனித மூளை பற்றியது
- மலைகளைப் பற்றியது
- கடல்களைப் பற்றியது
- நவீன கருவியலைப் பற்றியது
- மேகங்கள் பற்றியது
- மனித படைப்பின் படிநிலைகள்
- கரு வளர்ச்சியின் படிநிலைகள்
- தோலில் வலி உணரும் நரம்புகள்
- வானவியல் பற்றிய உண்மைகள்
- வானிலிருந்து இறக்கப்படும் இரும்பை பற்றியது

இன்னும் எத்தனை எத்தனையோ!!!

ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல்வேறு துறைகளில் உள்ள விஞ்ஞானிகள், இந்த உண்மைகளை மென்மேலும் நிரூபிக்கும் வண்ணம் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வருகின்றனர். அப்படியானால், இத்தனை உண்மைகளையும், எழுதப் படிக்க தெரியாத ஒரு மனிதரான முஹம்மத் நபிக்கு 1400 வருடங்களுக்கு முன்பே, அதுவும் விஞ்ஞானமே வளர்ச்சியடையாத அந்த காலகட்டத்தில் கற்றுக் கொடுத்த, முன்கூட்டியே அறிவித்துக் கொடுத்த அந்த மகா சக்தி கொண்டவன் யார்? இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் நாத்திக நண்பர்களே! அன்பர்களே!

பொறுமையாக சிந்தியுங்கள்! கண்டிப்பாக உங்களுக்கு தெளிவு கிடைக்கும். பிறகு பதில் சொல்லுங்கள். prestige பார்க்காமல் நடுநிலையோடு சிந்தியுங்கள்! இந்த விவாதத்திற்கு நிச்சயம் ஒரு முடிவு கிடைக்கும் எனக்கூறி விடைபெறுகிறேன்.

(அட்மின் அண்ணனுக்கு ஒரு குறிப்பு:-
ஆதி மனிதன் படைத்தது முதல் மொழி இருந்துள்ளது என்பதற்கு சான்றுள்ளது என்று நான் கூறியிருந்தேன். அதற்கு சான்றுகளைக் கேட்டிருந்தீர்கள். திருக்குர்ஆனில் அதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. நீங்கள் விருப்பப்பட்டால் உடனே தருகிறேன்.)

என்னை பொருத்தவரையில் மனிதர்கள் கடவுளாக ஆராதிக்க வேண்டியவர்கள் முதலில் அவர்களை பெற்ற தாய், பிறகு தந்தை. ஒரு குழந்தையைப் பெற்று அது வளர்ந்து ஆளாகும் வரையில் எவ்வளவோ கஷ்டங்களை தாங்கி, தியாகங்களை செய்து தங்கள் வாழ்க்கையையே அந்த குழந்தைக்காக அர்பணிக்கும் அவர்களுக்கு தான் அந்த அருகதை உள்ளது.

மற்றபடி கடவுள் என்று வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் ஒரு பிரயோசனமும் இல்லாத, ஒரு விசயத்திற்கு கடவுள் என்ற பெயரையும் கொடுத்து, அதற்கொரு கூட்டத்தையும் சேர்த்து நேரத்தை வீணடிப்பதின் பெயர் தான் பக்தி என்பது என் கருத்து.

உண்மையிலேயே கடவுள் என்ற ஒரு சக்தி இருந்தால் சுனாமியால் இறந்த அப்பாவி மக்களின் முன் தோன்றி அனைவரும் மேடான இடங்களுக்கு ஓடிச் சென்று உயிர் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவித்திருக்கலாமே. கடவுள் இருக்கின்றார் என்று அதை பிரச்சங்கம் செய்பவர்களுக்குத் தான் அது ஒரு பிழைப்பாக இருக்கலாம், ஆனால் வாழ்கையின் எதார்த்தத்திற்கு இந்த கடவுள் நம்பிக்கை ஒத்துவராது என்பது என் கருத்து.

சிறு வயதை தவிர்த்து எனது இருபத்தைந்து வருட திருமண வாழ்க்கையில் நான் கோவிலுக்கு சென்றது ஓரிரு முறை தான் அது கூட குடும்பத்தாரின் வேண்டுகோளுக்காக மற்றும் தோழியின் வற்புருத்தலுக்காக ஒரு முறை அவ்வளவு தான். இதை எதற்கு கூறுகின்றேன் என்றால் கடவுளை வழிபட்டு விட்டு வருகின்றேன் என்று நேரத்தை வீணடிப்பவர்களுக்கும் எனக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை, என்பதை உணர்ந்த வகையில் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் படும் துன்பத்தையும், இழப்பையும் நானும் அனுபவிக்கின்றேன். அவர்களுக்கு கிடைக்கும் இன்பம் தான் எனக்கும் கிடைத்து வருகின்றது. இதில் கடவுளுக்கு என்ன வேலை என்று எனது அனுபவத்தில் தெரியவில்லை.

பிரச்சனைகள் நிறைந்தது தான் மனித வாழ்க்கை.அவ்வாறு பிரச்சனைகள் வந்தவுடன் இல்லாத ஒன்றை தேடி ஓடுவதை விட்டு விட்டு, பிரச்சனையை போக்க வழி காண வேண்டும்.குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால் அதற்கு தேவை மருந்தும் மருத்துவமும் தான்,கடவுள் இல்லை. குழந்தை சரியாக படிக்க வில்லையா அதற்கு தேவை கடவுள் இல்லை கல்வியை புகட்டும் நல்ல ஆசிரியரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் மாணவனும் தான். குடும்பத்தில் பணப்பிரச்சனையா அதற்கு தேவை கடவுள் இல்லை நல்ல திட்டமிட்டு செலவுச் செய்யும் வழிமுறைகள்கள் தான்.

மேலும் ஒரு பெண்ணிற்கு தன் கணவரின் வீட்டாரால் பிரச்சனை என்று தெரிந்தால் அவர் தரும் பிரச்சனைகளைப் போக்க கணவரையோ மற்றவர்களையோ ஆலோசனைக் கேட்பதை விட்டுவிட்டு நேரிடையாக பிரச்சனைக்குரியவரிடதில் பேசினால் சரியாகாத விசயம் என்று ஒன்றுமே கிடையாது.

ஆனால் முதலில் அவர்கள் நாடுவது அவர்கள் வணங்கும் கடவுளிடம் தான். கடவுளே என்னை காப்பாத்து என்பதற்கு பதில், மாமியாரே என்னை காப்பாத்து எனக்கு மன அமைதியைக் கொடு என்று அவர் காலில் விழுந்தால் தவிடு பொடியாகாத காரியங்களே கிடையாது. இவ்வாறு வாழ்க்கைக்கு உகந்த செயல்களை செய்யாமல் கடவுள் என்று கண்ணுக்கு புலப்படாத ஒன்றை நம்பிக் கொண்டு தேவையற்றச் செயலால் ஒரு தீர்வுக்கும் வரமுடியாமல் கடவுளிடம் முறையிட்டுக் கொண்டே தங்கள் வாழ் நாளைக் கழித்து விடுவார்கள்.

இவ்வாறு குடும்ப பிரச்சனைகள் அதிகமாக வளர்ந்து வருவது கூட கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் வீடுகளில் தான் என்று எனது அனுபவத்தில் பார்த்திருக்கின்றேன்.

அதேப் போல் வியாபாரம் செய்பவர்கள் தங்களின் வியாபாரம் எப்படி முன்னேற்றமான முறையில் நடக்க வேண்டும், என்பதை மட்டும் சிந்தித்து செயல் பட்டால் அங்கு தோல்விக்கு இடம் இருக்காது அதை விடுத்து தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்க முடியா விட்டாலும் கடவுளுக்கு காணிக்கை முதலில் செலுத்த வேண்டும் என்று கருதும் முதலாளியிடம் எந்த தொழிலாளியும் உண்மையானவனாக இருக்க மாட்டான்.

கடவுளை சந்தோசப்படுத்துவதற்கு பதில் தொழிலாளியை சந்தோசமாக வைத்திருந்தால் நிச்சயமாக அவர்கள் அடையும் நஷ்டம் மிகவும் குறைவாக தான் இருக்கும், ஆகவே ஒரு வியாபாரம் வெற்றிகரமாக இயங்க தொழிலாளியை மதித்து நடக்கும் நல்ல முதலாளி, முதலாளியின் நம்பிக்கைக்கு உகந்தவனாக நடக்கும் நல்ல தொழிலாளி, மற்றும் அவர்களின் உற்பத்தியை வரவேற்க்கும் நல்ல வாடிகைதாரர்கள் இருந்தால் போதும். ஆகவே அங்கு கடவுளுக்கு வேலையே இல்லை என்று தான் கூறுவேன்.

இவ்வுலகில் வாழும் பணம்படைத்த ஒவ்வொறுவரும் மனது வைத்தால் ஏழை எளியவரை பசி பட்டினியிலிருந்து காப்பாற்றலாம், பண வசதியில்லாமல் நலிந்து வாடும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கலாம், ஊனமாகப் பிறந்தவர்களுக்கு அவர்களுக்கு பொருளுதவி அளித்து அவர்களையும் வாழ வைக்கலாம்.இவ்வாறு மனிதர்களாக பிறந்து தங்களுக்குள் தாங்கள் உதவிகள் செய்வதை தவிர்ப்பதற்காக, அது தெய்வக் குற்றம் முன் பிறவியில் செய்த பாவம் என்று கூறி தங்களை தானே ஏமாற்றிக் கொள்வது தான் கடவுள் பக்தி என்று நான் நினைக்கின்றேன்.

இவ்வாறு இந்த உலகமே ஒருவருக்கொறுவர் நன்மை செய்து வாழ்ந்தாலே இந்த பூமியே ஒரு அமைதி பூங்காடாக மாறிவிடும் என்பது உறுதி. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க கடவுள் தேவையில்லை. மனிதர்களால் உண்டாக்கப் பட்ட நாம் மனிதர்களுக்காக வாழ்ந்து மாள்வது தான் வாழ்க்கை.

ஆகவே என்னைப் பொருத்தவரையில் உலகில் கடவுள் என்ற சக்தி எதுவும் கிடையாது. இவ்வாறு கடவுள் இருக்கின்றான் அவன் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வான் என்று என்னை நானே ஏமாற்றிக் கொள்ளாமல் வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை வரும் கஷ்ட நஷ்டங்களை எதிர் கொண்டு வாழ்க்கையை மிகவும் எளிதாக வாழ்ந்து வருவது மனதுக்கு நிம்மதி அளிக்கின்றது என்று கூறுவது கூட சந்தோசத்தை தான் அளிக்கின்றது.வாய்ப்பளித்த அட்மின் அவர்களுக்கு எனது நன்றி.

ஆஹா, என்ன ஒரு அருமையான விளக்கம் மனோகரி மேடம். நான் உங்க பதிவை தான் தேடினேன்:-) ஆனால காணோம். லேட்டா குடுத்தாலும், லேஸா குடுக்கல. அற்புதமா குடுத்திருக்கீங்க. வாழ்க்கைக்கு தேவையானது எதுங்கறது, புரிஞ்சு வாழ்ந்தா, நாமே நமக்கு கடவுள் தான்:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

டியர் ஹர்ஷினி ஊரிலிருந்து வந்துட்டீங்களா ரொம்ப சந்தோசம். ஆமாம், நீங்க கூறியதுப் போல் கொஞ்சம் லேட்டாகத் தான் எனது கருத்தை கூறியுருக்கின்றேன். காரண்ம் இதற்கு முன்புக் கூட ஒரு சில பதிவுகளில் கடவுளை பற்றிய எனது கருத்தை கூறியிருந்தேன்,ஆகவே மற்ற நேயர்களின் கருத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் பதிவுகள் பொதுவாகவே கடவுளைப் பற்றிய எல்லோருக்கும் தெரிந்த விசயமாக்வே வந்துக் கொண்டிருக்கின்றது. சொந்த கருத்துக்களை ஒரு சிலரைத் தவிர யாரும் விளக்கவில்லை. ஆகவே தான் இனியும் காத்திருக்க நேரமின்மையால் எனது கருத்தை கூறிவிட்டேன். எனது கருத்தை ஆதரித்தும், நான் ஒரு பக்கம் எழுதிய விசயத்தை ஒரே வரியில் விளக்கி தங்களின் கருத்தை மிகவும் அழகாக எடுத்துரைத்ததற்கும் மிக்க நன்றி.

மேலும் சில பதிவுகள்