கடவுள் உண்டா இல்லையா என்பது குறித்த உங்களின் கருத்து

இன்னும் ஒரு controversial title. இது குறித்து ஏற்கனவே அறுசுவையில் ஒரு சிறிய விவாதம் நடந்தது. வருகையாளர்களின் எண்ணங்களையும் தெரிந்துகொள்ள இதை வாக்கெடுப்பிற்கு விட்டிருக்கின்றோம். தங்களின் நம்பிக்கையை வாக்கெடுப்பில் மட்டும் தெரிவிக்காமல், காரணங்களை இங்கேயும் விளக்கினால், அது பலரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, பாபு போன்ற கடவுள் நம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள், ஆதாரப்பூர்வமான கருத்துக்களினால் பக்தி மார்க்கம் திசை திரும்ப வாய்ப்புகள் உள்ளது. அதிகப்படியான நம்பிக்கையினால், நஷ்டங்களை சந்தித்து வருவோர் தங்களைத் திருத்தி கொள்ளவும் இந்த விவாதங்கள் உதவலாம்.

இது கடவுள் என்ற பொதுவான சொல்லைக் கொண்டு விவாதம் செய்யப்பட வேண்டிய விசயம். இங்கே தனிநபர், மதம், ஜாதி, அரசியல் போன்ற விசயங்களை தவிர்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் தாக்கி செய்யப்படும் பதிவுகள் உடனே நீக்கப்படும். இருதரப்பினரும் தங்களது நம்பிக்கை சார்ந்த விசயங்களை தெளிவாக எடுத்துரைக்கலாம். இதனால் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களையும் அலசலாம். நல்லவற்றையும் பட்டியலிடலாம். யார் மனதும் நோகாமல் இந்த விவாதம் செல்லும் வரை அது ஆரோக்கியமானதாக இருக்கும். (இதைவிட செய்வதற்கு எனக்கு ஆயிரம் நல்ல வேலைகள் உண்டு என்று நினைப்பவர்கள், தயவுசெய்து இந்த பக்கம் வரவேண்டாம். அதை இங்கே தெரிவிக்கவும் வேண்டாம். நீங்கள் உங்களின் பணியில் கவனம் செலுத்தலாம்.)

எனக்கு தெரிந்த கருவியல் பற்றி குர் ஆன் விஞ்ஞானம் (இப்ப கண்டுபிடிக்கப்பட்ட்ட உன்மை)இடயே உள்ள ஒற்றுமை பற்றீ சொல்கிரேன்..
ஆண் உயிரணுவும் பெண் சினை முட்டையும் சேர்ன்து என்னும் புதுசெல் உருவாகிரது.இது கரு உருவாதல் எனப்படும்.மனிதக் கருவின் ஆரம்பம் இன்த சைக்கோடிலிருன்து ஆரம்பிக்கிரது..உயிரண்க்களிண் இனைவால்தான் சைக்கோட் உருவாகிரது என்பதை என்பவர்1875ஆம் ஆண்டு முதன் முத்லில் இன்த அறிஉலகுக்கு தெரிய வைத்தார்.அதற்கு முன்புவரை யாரும் இதை அறிந்து இருக்கவில்லை
ஆனால் குரான்(நுத்ஃபதுல் அம்ஷாஜ்) அதாவது கலப்பான இந்திரியமென கூறியுள்ளது.சைக்கோட் என்னும் செல் மைடாசிஸ் என்னும் மிகுதல் பிரிகைக்கு ஆளாகி மென்மேலும் பெர்குகிரது.ஒரு செல் இரண்டாகி இரண்டு நான்காகி,4 எட்டாகி, 8பதினாறாகி, இப்பொது சிறிய பன்துருன்டை போல் ஆகிரது,இது நகர்து கருப்பை நோக்கி செல்கிரது.இது 7நாளில் நடைபெறும்.
இந்த கருப்பந்து,கருபையை அடைந்த உடன் கர்ப்பபையியின் உள்ளே வரிச்சவ்வில் ஊன்ட்ரி கொள்கிரது.இது மிக முக்கியமான நிலை.இதை கருநடவு என்பர்
மண்ணில் நாற்று ந்டவு செய்யப்படுவதுபோல தாயின் கருப்பை உட்ச்சுவரின்கருநடவு நிகழ்கிரது.மனித விதையானது பண்படுத்தி உரமிடப்பட்ட கரிப்பை என்னும் வலமான நிலத்தில் நடப்படுகிரது.ஒரு விதை எப்படிமண்ணிலிருந்து சத்தை சாப்பாடக எடுத்து கொள்கிரதோது அது போல தாய் வயிற்றில் உட்சுவரில் ஊன்ட்ரி கொன்டு சப்பாட்டை தாயிடமிருந்து எடுத்து குழந்தயாக
வயிற்று உள்ளெ வடிவமாகிரது
உன்கல் மனைவியர் உங்கள் விளைநிலங்கல் ஆவரென் குரான்(2:233)குரிப்பிடுவது சிந்திப்பிர்குரியது..
10நாளில் கர்ப்பந்து என்னும் வடிவம் முZஉதும் காணாமல் போய்விடுகிரது. இப்போதுள்ள வடிவத்தை குரான் அலக் என கூற்கிரது.குரானுடன் நவீன கருவியல் விஞ்ஞானிகள் கொண்டுள்ள தொடர்பை பார்போம்.
20ம் நூற்றாண்டின் சிற்ந்த கர்வியல் விஞ்ஞானிகள் கூறும் கருவியல் உன்மைகள் என்ன கருதுகின்ட்ரனர்
உடற்கூற்றியல்,கருவியல் நிருபரான உலக புகழ் பெற்றவர் டாக்டர் கெயித் மூர் ஆவார் கனடா நாட்டிலுள்ள டொரான்டொ பல்கழைகழகத்தில் உடற்கூற்றியல் தலைவராக 11ஆண்டுகள் ப்ணியாற்றீயவர். மருத்துவ துறையின் அடிப்படை விஞ்ஞானதில் 8ஆண்டுகள், ,டீன்., ஆகவும் பணிபுரிந்துள்ளார்.கனடாவில் உள்ள ராயல் மெடிகல் அசோஷியேஷனில் மெம்பராக இடம் பெற்றுள்ளார்.
பல அகில உலக கருது அரங்குகளில் கலந்து பல விருதுகளை வாங்கி உள்ளார்.உடற்கூற்றியல்,கருவியல் குறித்து இவர் எழுதிய பல நூல்கள் பல மொழியில் உள்ளது..இவருடய 8நூல்கல் மருத்துவ கல்லூரியில் பாட நூலாஹ இடம் பெற்றுள்ளன..
சில ஆண்டுக்கு முன்னர் சவூதியின் தலை நகர் ரியாத் நகரில் ஒரு சிலர் ஒருங்கிணைந்நு மனித கருவியல் வளர்ச்சி குறித்து குரான் கூறும் வசனங்களை திரட்டினர்..அவர்கலுக்கு குரான் கருவியல் பற்றி கூற்ம் வசனங்கள் மொழி பெயர்து காட்டப்பட்டது
அதை ப்ற்றி விளக்குமாறு கேட்டுக் கொன்டனர்..குரான் கூறும் கருதுக்களை படித்து மூர் ஆச்சர்யப்பட்டு போனார்.குரானைப் பார்த்து கருவியல் பற்றிய புத்தகங்கலில் திருத்தங்கள் செயிது மரு பதிப்பு வெளிய்ட்டார்..
நாம் பிரக்கும் முன்பு என்னும் புக்கில் 2ம் பதிப்பில் குரான் குரான் கூறும் செயிதிகளை சேர்த்து வெளியிட்டார்.ஒரு டெலிவிஷன் நிகழ்சிக்காக நான் மூர் அவர்களை சந்தித்தேன். பல உண்மைகலை எடுத்துச் சொன்னார்
நிழற்படம் ஷ்லைடு உத்வியால் பல அரிய த்கவல்கலை சொன்னார்.
மனித கரு வளர்ச்சி குரித்து நிரய்ய அரிய தகவல்கல் கூறுகிரது.குறிப்பக அலக் என்னும் சட்டத்தை குரான் கூற்யுள்ளது மிக உண்மை.இது பற்றீ விங்ஙானிகள் யோசிசசது இல்ல.குரானை வழி காட்டியாக கொண்டு தீவிரமாக ஆராயிந்தேன்..இன்தக்
கட்டத்திலிள்ள குரான் பயன் படுத்தும் அலக் என்னும் சொல் மிக உன்மைஎன அறிடெது வியன்தேன்..அதை குரித்து கொன்டேன்.
பிறகு விலங்கியல் துரையிக்கு சென்றுஒரு அட்டை பூச்சியின் படத்தை வாங்கி அலக் என்னும் நிலயிலுள்ள மனித கருவை போல்வே இருப்பதை ஒப்பிட்டு காட்டினார்.அலக் என்னும் சொல்லுக்கு அட்டை பூச்சி என்னும் சொல் உள்ளது.
அலக் என்றால் அட்டை பூச்சி போல் தொங்க்கும் பொருள்,,இரத்தக்கட்டி,,என பொருளுன்டு
கருவள்ர்ச்சி குரித்து நம் கண்முன்னே உள்ள ஷ்லைடுகலும்,ஃபிலிம் படங்கலும் நம் முன்னெ படம் எடுக்கப்பட்டவை.14நூறறாண்டுக்கு முன் கரடு முரடான அறுவை சிகிச்சை செஇது கருவின் வளர்சி நிலையை கண்டு இருத்தால் கோட அவர்களால் தெலிவாக காண் முடியாதுமனித கண்ணால் இதைகாண் முடியாது,மைக்க்ரோச்கோப் 200வருடத்துக்கு முன்புட்தான் கன்டுபிடிக்கப்பட்டது..
அப்படியானால்14 நூற்றாண்டுகளுக்கு முன்புஎப்படி ஒருவரால் இவ்வலவு துல்லியமாக சொல்ல முடியும்..நிச்சயமாக இது அனைத்தும் அறிந்த இறைவனிடமிருந்துதான் அருளப் பட்டு இருக்க வேன்டும் என மனம் திரந்து கூறினார் விஞ்ஞாநி கெயித் மூர்

இது ஒரு துளிதான் நிர்ய்ய உன்மைகள் உள்ளன...spelling mistake, mannikkaum

mub

சகோதரி அஸ்மா அவர்களுக்கு மட்டும் ஒரு சிறிய விளக்கம் கொடுக்க விரும்புகின்றேன்.

//சில நேரங்களில் டைப் பண்ணக்கூடிய சிரமத்தை மிச்சப்படுத்த, தேவையான தளங்களிலிருந்து கருத்துக்கள் எடுக்கும்போது, அதை அப்படியே COPY பண்ணி, PASTE செய்ததால் வந்த சிறு தவறு, இதைப் போய் ஒரு பேச்சு என்று பேசுகிறீர்களே? //

நீங்கள் இணையத்தில் இருந்து எடுத்ததை தவறு என்று யாரும் சொல்லவேயில்லை. நான் இன்று எல்லாவற்றிற்குமே இணையத்தில்தான் தேடுதல் நடத்துகின்றேன். அப்படி இருக்கையில் அதை தவறு என்று மனதால் கூட நினைக்க மாட்டேன்.

நீங்கள் எந்த தளத்தில் இருந்து அந்த உதாரணத்தை எடுத்தீர்களோ அந்த தளத்தில், அந்த ஒரு பக்கத்தில் 'ஜயறிவு' என்னும் வார்த்தை 4 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தது. நான்கு இடங்களிலும் அதே ஸ்பெல்லிங். எனக்கு அதை முதல்முறை படித்தபோது ஏதோ ஒரு புது வார்த்தை என்றுதான் தோன்றியது. இவர்கள் புதிதாக ஒரு அறிவை பற்றிப் பேசுகின்றார்கள் என்றுதான் நினைத்தேன். அதன்பிறகு யோசித்ததில்தான் தெரிந்தது ஐயறிவு என்பதைத்தான் அப்படி சொல்லியிருக்கின்றார்கள் என்று.

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கில் இருவகை இருக்கின்றது. நாம் வேகமாக டைப் செய்யும்போது கவனக்குறைவால் வரும் தவறுகள். மற்றொன்று அதற்கு சரியான ஸ்பெல்லிங் தெரியாமல் அதுதான் சரி என்று நினைத்து கொடுப்பது. கவனக்குறைவால் வரும் எழுத்துப் பிழைகள் எனக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு வரும். ஆனா, அது ஓரிரு இடங்களில்தான் இருக்கும். பயன்படுத்தியிருக்கும் அனைத்து இடங்களிலும் இருக்காது. அப்படி இருந்தால் அதற்கு என்ன ஸ்பெல்லிங் என்பதே தெரியவில்லை என்றுதான் பொருள்.

அந்த முழு உதாரணத்தின், பெரிய விளக்கத்தின் அர்த்தத்தை, தீர்ப்பை சொல்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை அது. ஏதோ சாதாரண வார்த்தை அல்ல. அதை அவர்கள் சரியாக குறிப்பிடவில்லை. அதை எடுத்து கையாண்ட தாங்களும் அதை திருத்தம் செய்து வெளியிடவில்லை. எனவேதான் அதை சுட்டிக் காட்ட வேண்டியிருந்தது. அது உங்களது தவறு அல்ல, நீங்கள் எடுத்து வெளியிட்ட இணையத்தில் செய்யப்பட்ட தவறு என்ற தகவலைத் தெரிவிக்கவும் நான் "இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது" என்று குறிப்பிட்டேன்.

இந்த விவாதம் அஸ்மா, பாபு இருவரில் யார் நல்ல திறமையாக வாதம் புரிபவர்கள் என்பது அல்ல. பொது விவாதம். இதற்கு நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆதாரம் எடுத்து கொண்டு வரலாம். எல்லாமே உங்கள் கருத்தாய் இருக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், அவற்றை மதம், கடவுள், வேதம் இவற்றின் பெயர் குறிப்பிடாமல் சொல்லுங்கள் என்பது மட்டும்தான் எனது வேண்டுகோள். ஏன் என்ற காரணத்தை நான் ஏற்கனவே விளக்கிவிட்டேன்.

இதற்குமேலும் நீங்கள் எங்கள் மதத்தை, எங்கள் வேதத்தை அடையாளம் காட்டித்தான் கடவுள் உண்டு என்பதை எங்களால் நிரூபிக்க முடியும் என்று பிடிவாதம் செய்தால் நான் இனி தடுக்க போவதில்லை. அதற்கு யாரேனும் தாக்கி பதில் கொடுத்தால் அதற்கு முழுப் பொறுப்பினையும் நீங்கள்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும். நான் அந்த பதிவுகளையும் நீக்க மாட்டேன்.

தயவுசெய்து இங்கே மதப் பிரச்சாரம் செய்வதை நிறுத்துங்க...

மதம் எனும் தளையை விட்டு கொஞ்சம் வெளியே வந்து உங்க மனதைத் திறந்து கடவுள் எனும் கருத்தைப் பற்றி மட்டும் பேசுங்க...எங்களிலும் நிறைய்ய பேருக்கு இஸ்லாமைப் பற்றியும், கிறிஸ்துவம் பற்றியும் கூடத் தெரியும்.

"கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்"என்று சொல்வார்கள்.நிறையப் படித்து நிறைய்ய யோசித்தால் மட்டுமே இது பற்றிய சிக்கலான விஷயங்களுக்கு விடை தேட முடியும்.

அதை விட்டுவிட்டு எங்கள் மதம் இதைச் சொல்கிறது,அதைச் சொல்கிறது என்று மதத்துக்கு விளக்கம் தராதீர்கள். இதைவிட அற்புதமான கீதையின் கருத்துக்கள் இங்கு நிறைய பேருக்குத் தெரியும். ஆனால் மத விளக்கங்களை இங்கு வெளியிட விரும்பாததே காரணம். கொஞ்சம் புரிஞ்சு எழுதுங்க எல்லாரும். ப்ளீஈஈஈஈஈஈஸ்...

பி.கு: என்னுடைய இந்தக் கருத்து எந்த இணையதளத்திலும் எடுக்கப்பட்டதில்லை என்று என்னால் உறுதி கூறமுடியும்

விதுவை நான் ஆதரிக்கிறேன்.
கடவுள் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர்.
உலகில் உள்ள அனைவரும் (ஒரு சிலரைத்தவிர) நமக்கும் மேல் ஒரு சக்தி உள்ளது என நம்புகிறோம்.
இதை பற்றி பேசாமல் பாரா பாராவா எழுதினா ஒண்ணும் புரிய மாட்டேங்குது பா!!
இத மாத்தி ஆதாரத்தை தேடி குடுத்து நம்ப வைப்பது நம் கடமை!!
அதற்கு இன,மத,மொழி சாயம் பூசாமல் பேசுவோம்.
இங்கு ஒருவர் மட்டுமே இல்லையே!!
நிறைய பேர் நிறைய விதமான மொழிகள் பேசுகிறோம்.வித வித மான மொழிகள் பேசுகிறோம்.
எதற்கு சண்டை!!!
புரிய வைப்போம்!! அவ்ளோ தான்!!

கடவுளுக்கு உன்மையிலேயே உருவமில்லைனாலும் எனக்கு சின்ன வயசுல இருந்தே கடவுள்னா ஒரு வயசான தாத்தா கைய்யில கைய்யில பெரீய்ய குச்சி வெச்சுட்டு காக்கி கலட் ட்ரெஸ் போட்டுட்டு 20 அடி உயரத்துல மேகத்து மேல உக்காந்திருப்பார் ,பாத்தா அழகா இருப்பார் ஆனா பயமா இருக்கும் ...இடது தோள் மேல ஒரு புறா ஒரு டயரியும்,வலது தோள் மேல உள்ள புறா ஒரு டயரியும் வெச்சுட்டு நான் செய்ர நல்லது கெட்டதை எழுதிட்டிருக்கரதா கற்பனை பன்னிக்குவேன்...உருவம் இல்லைன்னாலும் இப்பவும் அதே உருவம் தான் மனசில் வரும்....
எல்லாத்தையும் நாம உலகத்துல எப்படி என்னன்னு கன்டு பிடிச்சுட முடியாது....என்ன ஆராய்ச்சி பன்னினாலும் வானத்துக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை கன்டுபிடிக்க முடியாது....அது மாதிரி விஷயங்களை நமக்கு எட்ட முடியாத விஷயங்கள் தான் இறைவன்னு தான் நான் நம்பிட்டிருக்கேன்.

தளிகா:-)

நல்ல கற்பனை தளிகா, குழந்தைங்க பார்த்தா நிச்சயம் சந்தோஷப் படுவாங்க...நம்ம நெனைக்கிற மாதிரியே இந்த அக்கா இன்ன்ன்ன்ன்னமும் நெனச்சிட்டு இருக்கேன்னு...

விதுவும் அட்மினும் கடவுளை கின்டல் பண்ணினா தீயாலான செருப்பை போட்டுகிட்டு மூளை கொதிக்கப் போவுது பாருங்க

தளிகா:-)

தொடர்ந்து ஜோக் பண்ணிட்டே இருக்கீங்க...செம ஜாலி மூட்ல இருக்கீங்களா???

ஜோக்கா பயமே இல்லையா??அப்ப போங்க ஒரே குட்டைல வுழுந்த மட்டைக தான் ரெண்டு பேரும்

தளிகா:-)

விதுபா சொல்றமாதிரி, இங்கு அலசப்படும் விடயம் "கடவுள்" பற்றியதேயன்றி மதங்கள் பற்றியோ அல்லது அவற்றுக்குரிய புனித நூல்களைப் பற்றியதோ இல்லை.
ஒவ்வொரு மதங்களிலுமே தத்தமது இறைவனைப்பற்றியும் அதனை வழிபடுவோரின் வாழ்க்கை முறை பற்றியும் ஒன்றிரண்டல்ல ஓராயிரம் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன,
அவ்ற்றையெல்லம் ஒவ்வொருத்தரும் இங்கு வாதிட வந்தால் இது அறுசுவையாக இருக்காமல் அயோத்தியாக மாறிவிடும்.

நன்றி.

மேலும் சில பதிவுகள்