கடவுள் உண்டா இல்லையா என்பது குறித்த உங்களின் கருத்து

இன்னும் ஒரு controversial title. இது குறித்து ஏற்கனவே அறுசுவையில் ஒரு சிறிய விவாதம் நடந்தது. வருகையாளர்களின் எண்ணங்களையும் தெரிந்துகொள்ள இதை வாக்கெடுப்பிற்கு விட்டிருக்கின்றோம். தங்களின் நம்பிக்கையை வாக்கெடுப்பில் மட்டும் தெரிவிக்காமல், காரணங்களை இங்கேயும் விளக்கினால், அது பலரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, பாபு போன்ற கடவுள் நம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள், ஆதாரப்பூர்வமான கருத்துக்களினால் பக்தி மார்க்கம் திசை திரும்ப வாய்ப்புகள் உள்ளது. அதிகப்படியான நம்பிக்கையினால், நஷ்டங்களை சந்தித்து வருவோர் தங்களைத் திருத்தி கொள்ளவும் இந்த விவாதங்கள் உதவலாம்.

இது கடவுள் என்ற பொதுவான சொல்லைக் கொண்டு விவாதம் செய்யப்பட வேண்டிய விசயம். இங்கே தனிநபர், மதம், ஜாதி, அரசியல் போன்ற விசயங்களை தவிர்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் தாக்கி செய்யப்படும் பதிவுகள் உடனே நீக்கப்படும். இருதரப்பினரும் தங்களது நம்பிக்கை சார்ந்த விசயங்களை தெளிவாக எடுத்துரைக்கலாம். இதனால் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களையும் அலசலாம். நல்லவற்றையும் பட்டியலிடலாம். யார் மனதும் நோகாமல் இந்த விவாதம் செல்லும் வரை அது ஆரோக்கியமானதாக இருக்கும். (இதைவிட செய்வதற்கு எனக்கு ஆயிரம் நல்ல வேலைகள் உண்டு என்று நினைப்பவர்கள், தயவுசெய்து இந்த பக்கம் வரவேண்டாம். அதை இங்கே தெரிவிக்கவும் வேண்டாம். நீங்கள் உங்களின் பணியில் கவனம் செலுத்தலாம்.)

சரியா சொன்னீங்க சாந்தா...இந்த நிஜம் புரியாம இங்கே எல்லாரும் அரைகுறைன்னு நினைச்சு பேசுறவங்கள என்னன்னு சொல்றது?

ஓஹ்ஹ்ஹ்..இது எதுவோ ட்ரேக் மாறி போற மாதிரி இருக்கு....கடவுளைப் பத்தி எல்லாம் விவாதிக்க முடியாது.இப்ப எழுத்தளவிலங்கரதால ப்ரச்சனை இல்ல..இதை நேர்ல யார்டயும் கேட்டுடாதீங்க....எழுத்துலயே இப்படின்னா நேர்ல அப்ரம் முடியைப் புடிச்சு ஆட்டி செவுத்துல அடிச்சு ..... தான்.....கடவுள் நம்பிகை இருக்கவங்க வணங்குவோம்..இல்லாதவங்க இல்லாட்டியும் ஊரோட ஒத்துப் போவ வனங்காட்டியும் பேசாம இருங்க.....உள்ள நுழையக் கூடாதுன்னு சொல்லிடு நானே நுழஞ்சுட்டேன்...ஆஅஹ் விது திட்டிடாதீங்க..எனக்கே பயமா இருக்கு...நல்ல டோஸ் விழுரதுக்கு முன்ன ஓரங்கட்டிக்குங்க...

ஹை நல்ல பிரியானி மணம் வருதுல்லன்னு நான் தோழிகிட்ட சொல்லி இல்லயே ஒரு மணமும் இல்லன்னு அவ சொன்னா என்ன பன்ன முடியும்??வாதாடினா ஜெயிக்கவா முடியும்..என் மூக்கை அறுத்து காமின்னு சொல்லிடுவா.....ஆஆஆஆ இனி இதுகுள்ள நுழைய மாட்டேன்..போயிடரேன்..விது வெளிய வாங்க கவனிச்சுக்கரேன்(த்ரெட்டை விட்டு:-D)

தளிகா:-)

தளிகா, எப்பிடியாவது எனக்கு ஒரு ஜோடி தீச்செருப்பு வாங்கிக் குடுங்க...மூளை கொதிக்குதோ இல்லியோ அட்லீஸ்ட் தண்ணி கொதிக்க வைக்கவாவது உதவுமான்னு பார்ப்போம்...

ஆனாலும் உங்களுக்கு என் மேல் ரொம்பத்தான் பாசம்...
எனக்கு டோஸ் விழுந்துமோன்னு(???!!!) எவ்வளவு பயம் உங்களுக்கு ;-) ரொம்ப தேங்க்ஸ்...

சகோதரர் பாபுவிற்கு,
//நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர், இந்த தொலைபேசி, பார்க்கும் டிவி, பறக்கும் விமானம் இவை எல்லாவற்றையுமே கடவுள்தான் படைத்தார். இது இன்னும் நூறு வருடங்கள் கழித்து இவை வேதத்தில் வேறுஏற்றப்பட்டுவிடும்//

இதை தாங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று விளக்கமளிப்பீர்களா? எந்த காலகட்டத்தில் எந்தெந்த விசயங்கள் வேதத்தில் ஏற்றப்பட்டது என்பதை தாங்களால் கூற முடியுமா? பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள கையெழுத்துப் பிரதியிலிருந்து நவீன கால குறுந்தட்டு வரை ஒரு எழுத்து கூட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாமல் பாதுகாப்பாகவே உள்ளது சகோதரரே. தாராளமாக தாங்கள் ஆராயலாம்.

சகோதரிகளுக்கு,
இங்கு ஏதோ மதப்பிரச்சாரம் செய்வது போலவும், மற்ற மதங்களை இழிவுபடுத்துவது போலவும் ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தாதீர்கள். எந்த சகோதரியும் அக்கருத்துப்பட சொல்லவில்லை. ஒருவர் எந்தக் காரணத்தால் கடவுள் கொள்கையை ஆதரிக்கிறார்? அல்லது எந்தக் காரணத்தால் கடவுள் கொள்கையை மறுக்கிறார் என்பதை விளக்குவது எப்படி?ஒருவர் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டாரோ அல்லது மறுக்கிறாரோ அதை வைத்து தானே சொல்ல முடியும்? அவரின் நம்பிக்கைக்கு காரணமே வேதம் தான் என்றால் எப்படி பதிலளிப்பது? மற்றபடி இங்கு யாரும் எந்த மதத்தைப்பற்றியும் உயர்வு தாழ்வு கற்பிக்கவில்லை. புரிந்துக்கொள்ளுங்கள் சகோதரிகளே.

அட்மினுக்கு,
தங்களின் நம்பிக்கையை வாக்கெடுப்பில் மட்டும் தெரிவிக்காமல், காரணங்களை இங்கேயும் விளக்கினால், அது பலரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. இரு தரப்பினரும் தங்களது நம்பிக்கை சார்ந்த விசயங்களை தெளிவாக எடுத்துரைக்கலாம் என்று அனுமதி அளிப்பது போல் அளித்துவிட்டு இங்கே வேதங்களப்பற்றி எல்லாம் பேசக்கூடாது என்றும் உத்தரவிட்டிருக்கிறீர்களே. அட்மின், உங்கள் புத்திசாலித்தனத்தை பாராட்டுகிறேன். ஏன் அப்பொழுதான் உங்கள் கருத்துக்கு ஆதரவு அதிகமாக இருக்கும் என்றா? :-)) இது எப்படி இருக்கிறது தெரியுமா? வாயையும், கையையும் கட்டிபோட்டுவிட்டு வயிறு நிறைய சாப்பிடு என்று சொல்வதைப்போல்.
//அதிகப்படியான நம்பிக்கையினால், நஷ்டங்களை சந்தித்து வருவோர் தங்களைத் திருத்தி கொள்ளவும் இந்த விவாதங்கள் உதவலாம்.நடைமுறையில் இந்த நம்பிக்கையினால் உண்டாகும் பிரச்சனைகளைப் பற்றியும் அலசுங்கள். அப்போதுதான் குறைகளை கலைந்து கொள்ள முடியும். ஏமாந்தவர்கள் விழிப்புணர்வு கொள்ள முடியும்.//
இதிலும் கலந்து கொள்ள ஆசை தான். ஆனால் நான் இதிலும் வேதத்தைப்பற்றி சொல்ல வேண்டி வருமே. என்ன செய்வது?
என்ன கொடுமை சகோதரா இது.(நன்றி ஹேமா):-) நன்றி இதற்கும் சேர்த்து தான்.:-))

சகோதரி விதுபா,
ஒரு பக்கம் கடவுள் யார் என்கிறீர்கள்? மறுபக்கம் வாசலில் கோலமிட்டு, வீட்டில் விளக்கேற்றி என்கிறீர்கள். (வழிபடுவதை தானே சொன்னீர்கள். எல்லோர் வீட்டிலும் ஏற்றும் விளக்கல்லவே!) அது போலவே என்னுடைய கடவுள் கருத்துகளைக் குழந்தைகளிடம் திணிக்கபோவதில்லை என்கிறீர்கள். ஆனால், குழந்தைகளுக்கு ஸ்லோகம் சொல்லிக் கொடுக்கிறேன் என்கிறீர்கள். நம் அட்மினைப்போல் (ஆன்மீகத்தின் மீது நம்பிக்கையில்லாமல் ஆன்மீகத்திற்கு என்று ஒரு பதிவு வைத்திருப்பது போல்) ஏன் இந்த முரண்பாடு? :-))
// முன்பெல்லாம் மனிதர்களை இயற்கை சீற்றங்களும் ,இனம் புரியாத நோய்களும் வந்து கூட்டம் கூட்டமாக அழித்தது. அனால் இப்போது ஆந்தராக்ஸ், அணுகுண்டு, ஓடும் ரயிலில் வெடிகுண்டு,சமைக்கும் குக்கர் வெடிகுண்டு என்று விதம் விதமாக மனிதனே அழிக்கும் தொழில் செய்யப் புறப்பட்டிருக்கும் இந்த்ப் பரிணாம வளர்ச்சி உங்கள் கண்ணில் படவில்லையா என்ன???//
ஓ… இவை தான் பரிணாம வளர்ச்சியா? உடல் வளர்ச்சியும், உடல் அமைப்பில் ஏற்படும் மாறுதலும் தான் பரிணாம வளர்ச்சி என்று சொல்கிறார்கள் என நான் நினைத்திருந்தேன்.
// ஒரு செல் உயிராயிருந்து பல செல் உயிர்களாய்ப் பகிர்ந்து பரிணாம வளர்ச்சியில் பிறந்தது தான் மனித இனம்//
இதுவும் தங்களின் பதிவு தான். மீண்டும் முரண்பாடு. :-))
//கற்கால மனிதன் மழை,மின்னல்,இடி,காற்று,கடல் அலை இவை எல்லாமே அற்புத ஆவிகள் என்றும், அவற்றின் கோபமே மழை வெள்ளமாகவும், அலையின் சீற்றமாகவும் வெளிப்படுவதாகக் கருதியதாகப் படித்திருக்கிறோம்.அதனால் அவற்றையே கடவுள்களாகக் கருதி வணங்கியதாகவும் அறிகிறோம்.//
//பூமித்தட்டுகள் இடித்துக்கொள்வதால் பூகம்பம் உண்டாகிறது. மேகங்கள் உரசிக்கொண்டால் மின்னல் வருகிறது. வெற்றிடத்தை நோக்கி காற்று நகர்கிறது. பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்கிறது. இதெல்லாம் இயற்கை. இதற்கு இறைவன் என்று பெயரிட்டு மகிழ்ந்தது மனிதனின் இனிய கற்பனை.//
மிக அழகாக சொன்னீர்கள் சகோதரி. இவை எல்லாம் இறைவனால் படைக்கப்பட்டவையே. இவற்றிற்கெல்லாம் எந்த சக்தியும் இல்லை என்பதே என் கருத்தும்.

சகோதரி ஹர்ஷினி,
//கடவுள் வந்து உங்கள, உங்க தாய் வயித்துல வெச்சிடல. தந்தைன்னு ஒருத்தர் வந்து, அவங்க ஒண்ணு சேர்ந்தா தான் குழந்தை. புரியுதுங்களா. யாராவது ஒருத்தர் சொல்லட்டும், அப்பா இல்லாம கடவுளே கொண்டு வந்து குழதையை தரார்னு.//
அப்படிங்களா?!… இதுவரை குழந்தை இல்லைன்னு சொல்றவங்களாம் இன்னும் ஒண்ணு சேரலையா?எ.கொ.ச.இ. ;-)எங்களுக்கு ஒரு குறையும் இல்லை. ஆனாலும், இன்னும் குழந்தை உருவாகவில்லை என்று நம் அறுசுவையிலேயே சகோதரிகள் தங்கள் கவலைகளை பதிவு செய்துள்ளார்களே? அப்போ அவங்களெல்லாம் …… :-).புரியுதுங்களா?

சகோதரி ரீட்டா,
//வேதங்களை கடவுள்தான் அனுப்பினார் என்பதற்கு என்ன ஆதாரம் ?//
அந்த வேதம் தான் ஆதாரம். அதில் சொல்லப்பட்ட கருத்துகள் தான் ஆதாரம்.

//எந்தக் கடவுள் எந்த மதத்தைப் படைத்தார்? கடவுள் என்பவர் ஆணா, பெண்ணா?// //மொத்தம் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்?//
இந்தப்பதிவு கடவுள் உண்டா? இல்லையா? என்ற கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவே. அதனால் நாம் இந்தப்பதிவில் இதைப்பற்றி விவாதிக்க முடியாது. அட்மின் அனுமதித்தால் வேறொரு பதிவின் மூலம் நாம் விரிவாக இதை பற்றி அலசலாம். அட்மின் அனுமதிப்பாரா? :-))

இறை நம்பிக்கையுள்ள சகோதரிகளே, தாங்களும் வேதத்தின் அடிப்படையில் இறைவனை நம்பினால் தாங்களும் தாராளமாக பகவத்கீதையிலிருந்தோ, பைபிளிலிருந்தோ, அல்லது தாங்கள் வேதம் என்று நம்பப்படும் நூல்களிலிருந்தோ மேற்கோள் காட்டலாம். நாங்களும் அதை வரவேற்கிறோம். அது நம் (கடவுள் உண்டு என்று சொல்லும்) அணிக்கு வலுவூட்டவே செய்யும். :-)
எது எப்படியோ இதுவரை கருத்து சொன்னவர்களில் ஒருவரைத்தவிர, ஏதோ நம்மை மீறின சக்தி என்றோ, மனம், பெற்றோர் என்றோ, உள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ளார்கள். நன்றி சகோதரிகளே. :-)

மீண்டும் நினைவூட்டுகிறேன். யாருடைய மதத்தையும் யாரும் தவறாக விமர்சிக்கவில்லை. அது போன்ற மாயையை ஏற்படுத்தாதீர். புரிந்துக்கொள்ளுங்கள்.

சகோதரி ஜானு,

நான் என்ன பதில் உரைப்பது என்றே தெரியவில்லை. எப்படி இவ்வளவு புத்திசாலித்தனமாக வாதாடுகின்றீர்கள். நானும் சிறிது என் வேலையைப் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன். மாற்றி மாற்றி விடமாட்டேன் என்கின்றீர்கள்.

//தங்களின் நம்பிக்கையை வாக்கெடுப்பில் மட்டும் தெரிவிக்காமல், காரணங்களை இங்கேயும் விளக்கினால், அது பலரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. இரு தரப்பினரும் தங்களது நம்பிக்கை சார்ந்த விசயங்களை தெளிவாக எடுத்துரைக்கலாம் என்று அனுமதி அளிப்பது போல் அளித்துவிட்டு இங்கே வேதங்களப்பற்றி எல்லாம் பேசக்கூடாது என்றும் உத்தரவிட்டிருக்கிறீர்களே. அட்மின், உங்கள் புத்திசாலித்தனத்தை பாராட்டுகிறேன். ஏன் அப்பொழுதான் உங்கள் கருத்துக்கு ஆதரவு அதிகமாக இருக்கும் என்றா? :-)) இது எப்படி இருக்கிறது தெரியுமா? வாயையும், கையையும் கட்டிபோட்டுவிட்டு வயிறு நிறைய சாப்பிடு என்று சொல்வதைப்போல்.//

அய்யோ அய்யோ, இதற்கு நான் எத்தனை முறை விளக்கம் கொடுப்பது. பொருள் புரியாமலே எவ்வளவு நாட்களுக்குதான் வாதம் செய்வீர்கள்?! அம்மா.. தாய்க்குலமே.. கடைசியாக சொல்கின்றேன் கேட்டுக்கோங்க... உங்களை வேதத்தில் இருந்து விளக்கங்கள் எடுத்து கொடுக்க வேண்டாம்னு நான் சொல்லவே இல்ல. நிறைய எடத்துல சொல்லிட்டேன் நீங்க எங்க இருந்து வேணும்னாலும் ஆதாரத்தை எடுத்துட்டு வாங்க. வேதம்னு பொது வார்த்தை நீங்க யூஸ் பண்றதை கூடாதுன்னு நான் சொல்லவேயில்லை. வேதங்கிற வார்த்தை எல்லா மதத்துக்கும் பொதுவானது. வேதம்னா குர்ரான் மட்டும் இல்ல. அதனாலத்தான் அந்த வார்த்தையை அனுமதிச்சேன். நான் சொல்ற விசயம், வேதம், மதம், கடவுள் இதோட பெயர்களை பயன்படுத்தாம, அதாவது குர்ரான், இஸ்லாம், அல்லா ன்னு சொல்லாம, பொது வார்த்தைகளான, வேதம், மதம், கடவுள்னு சொல்லுங்க அப்படிங்கிறதுதான்.

நீங்க சொல்ல வர்ற கருத்துதான் இங்க முக்கியம். அது குர்ரான்ல இருந்தா என்ன, குப்பையில இருந்து எடுத்த காகிதத்தில் இருந்தா என்ன? குர்ரான்ல இருக்கு குர்ரான்ல இருக்குன்னு சொல்றதால, ஆஹா, குர்ரான்லேயே சொல்லி இருக்கா, அப்படின்னா உண்மையாத்தான் இருக்கும்னு நம்பிடப்போறோமா என்ன? இல்லை குப்பையில கிடந்த பேப்பர்ல இருந்ததுதானே, அந்த கருத்தை எடுத்துக்க முடியாதுன்னு அலட்சியப்படுத்தப் போறோமா என்ன? சகோதரி எழுதியிருந்தாங்களே. அது எங்கிருந்து வருகின்றது என்பது முக்கியமல்ல, என்ன கருத்து என்பதுதான் முக்கியம். கருத்து என்னவோ அதை சொல்லி, அதற்கான விளக்கத்தை சொல்லுங்க..

வானத்துல இருந்து யார் மண்டையிலும் விழாம இரும்பு பூமிக்கு வருதுன்னு உங்க குர்ரான்ல இருந்துச்சுன்னா, அதை குர்ரான்ல இருக்குன்னு சொல்லாம, பொதுப் பேரா வேதத்தில இருக்குன்னு சொல்லி, எப்படிங்கிற ஆதாரத்தை சொல்லுங்க. அது போதும். இதுக்கு குர்ரான்ல இந்த அத்தியாயத்துல இந்த எண்ணில இருக்குன்னு சொல்ல வேண்டியதில்லை.

ஏன் அப்படி பேர் குறிப்பிட்டு சொல்ல வேண்டாம்னு சொல்றேன்ங்கிறதுக்கு ரெண்டு மூணு முறை விளக்கம் கொடுத்துட்டேன். இதை எல்லா மதத்தை சேர்ந்தவங்களும் பார்க்கிறாங்க. இப்படி பொதுவா குறிப்பிடுறதுனால பெரிய பிரச்சனைகள் எதுவும் வராது (குறிப்பா எனக்கு, அறுசுவைக்கு). இந்த மாதிரி சீரியஸ்ஸான பதிவுகள்ல தனிநபர்கள், தனிமதம், தனிக்கடவுள் தாக்குதல் இருக்காது. சினிமாக்கள் கேவலம்னு சொன்னா மக்கள் பெரிசா கோபப்படமாட்டங்க. ஆனா, சிவாஜி படம் கேவலமா இருக்குன்னா அவ்வளவுதான். ரசிகர்கள் பொங்கி எழுந்துடுவாங்க. நான் மதங்கள் பொய்யின்னு சொன்னா, நீங்க அவ்வளவு கோபப்படமாட்டீங்க. இதையே நான் இஸ்லாம் பொய்யின்னு சொன்னா, உங்களுக்கு எந்த அளவிற்கு கோபம் வரும். பேசுற நானும் ஒரு சார்பா பேசுற மாதிரி தோற்றம் வந்துடும். அதனாலத்தான் சொல்றேன். இந்த கடவுள், இந்த மதம், இந்த வேதம்னு குறிப்பிட்டு பெயர் சொல்லாம, பொதுப்பெயர்ல வாதம் செய்ங்க. பொதுப்பெயர்ல வாதம் செய்ங்க, பொதுப்பெயர்ல வாதம் செய்ங்க...

இதுக்கு மேலேயும் அட்மின் வாயை கட்டிட்டாரு, வயித்தை கட்டிட்டாருன்னு சொன்னீங்கன்னா, உங்களுக்கு பொதுவான மன்றங்களில் வாதம் பண்ண திறமை இல்லேன்னு அர்த்தம்.

//ஆன்மீகத்தின் மீது நம்பிக்கையில்லாமல் ஆன்மீகத்திற்கு என்று ஒரு பதிவு வைத்திருப்பது போல்//

எனக்கு சமையல்கூடத்தான் தெரியாது. சமையல்தளத்தை நடத்தவில்லையா?! ஆன்மீகம் பகுதி பாபுவிற்காக தொடங்கப்பட்டது என்று உங்களுக்கு யாரேனும் சொன்னார்களா? சகோதரி, அறுசுவை இணையத்தளம் ஒரு வியாபாரத்தளம். வாடிக்கையாளர்கள் என்னவெல்லாம் விரும்புகின்றார்களோ அதையெல்லாம் கொடுக்கவேண்டியது எனது கடமையல்ல என்றாலும் இயன்றளவு கொடுப்பது புத்திசாலித்தனம். தலையில் முடி இருப்பவன் தான் சீப்பு விற்க வேண்டும் என்று சொல்வீர்களா? இதை விரும்பி கேட்டார்கள். கொடுத்திருக்கின்றேன். இது வெறும் மன்றத்தில் ஒரு சிறிய பகுதி. இன்னும் ஆன்மீகத்திற்கென்றே தனியே ஒரு பெரிய பிரிவே கொண்டும் வரும் எண்ணம் இருக்கிறது. அதற்கு என்ன சொல்ல போகின்றீர்கள்:-)

இந்த விவாதம், கடவுள் இருக்கிறரா இல்லையா என்று ஆரம்பித்து, பகுத்தறிவு, மூட நம்பிக்கை, வாழ்க்கையின் எதார்த்தம், விஞ்ஞானம், மதம், வேதம் என்று பல கோணங்களில் செல்கிறது. மனோகரி அவர்களும் மற்றும் சிலரும் எதிரொலித்த "வாழ்க்கையின் எதார்த்தங்களில் கடவுளுக்கென்ன வேலை?" என்ற கேள்வி என்னை மிகவும் பாதித்த ஒன்று. எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை "வாழ்க்கையில் சில ஏன்-களுக்கு பதிலே இல்லை" என்று எழுதியிருந்தார். அந்த "ஏன்"-கள்தான் என்னை சிந்திக்க தூண்டியவை. நாம் ஒரு செயலைப் பல முறை செய்யும்போது, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விடைகிடைக்கிறது. செய்பவரும் மாறுவதில்லை, செய்கின்ற செயலும் மாறுவதில்லை. கிடைக்கும் விடை மட்டும் மாறுகிறது. இதேபோல், சமதிறமையும் சமமுயற்சியும் கொண்ட இருவரின் முன்னேற்றமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இதற்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. ஒருவேளை "Human errors" என்றோ, "இயற்கை" என்றோ பதில் கிடைத்தால் "இறைவன்" என்றே நம்ப விரும்புகிறேன். இதனால் சில சமயம் எனக்கு நாம் இயங்குகிறோமா, இயக்கப்படுகிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

பகுத்தறிவைப் பற்றி சில பதிவுகள் இதில் இருப்பதால், அதைப் பற்றி என் எண்ணங்கள் சில வார்த்தைகளில் ....

பகுத்தறிவு என்பது நாம் கற்றவற்றை பகுத்து (divide into small problems) ஆராய்தல் (ie research the smaller pieces of original problem). நண்பர் பாபுவின் பதிவுகள் அவரின் பகுத்தறிவையும், மனோஹரி அவர்களது வாழ்க்கையின் எதார்த்தங்களை நம்புவதாகக் கூறிய பதிவு அவரின் பகுத்தறிவையும் காட்டுகிறது. நான் அலசி ஆராய்ந்து நம்பும் இறை நம்பிக்கையும் பகுத்தறிவுதான். ஆனால், கடவுள் இல்லை என்று சொல்வதே பகுத்தறிவு என்று யாரேனும் நம்பினால் அது மூடநம்பிக்கையேயன்றி பகுத்தறிவல்ல. பகுத்தறிவு என்பது இன்று நேற்று நமக்கு சொந்தமானது அல்ல. சில நூறு வருடங்களுக்கு முன்பு சிவவாக்கியர் என்ற சித்தர் சொன்ன கருத்துக்களும் பகுத்தறிவுதான். அவற்றில் சில,

.....
பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டிருக்குதோ?
.....
சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம்
பூதவாசல் ஒன்றலோ, பூதம் ஐந்தும் ஒன்றலோ?
காதில் வாளி, காரை, கம்பி, பாடகம் பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?
.......
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?
....

இதுமட்டுமல்ல, கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸும் ஒரு பகுத்தறிவுவாதிதான். அவர் கூறினார், "I am wiser than this man: Neither of us probably knows anything that is really good, but he thinks that he has knowledge, when he does not, while I, having no knowledge, do not think that I have." என்று.

சில மாதங்களுக்கு முன் Edger Cayce என்ற ஒரு அமெரிக்க கிறிஸ்துவர் பற்றிப் படித்தேன் (http://en.wikipedia.org/wiki/Edgar_Cayce). Edger Cayce is an American mystic and modern psychic who is called sleeping prophet. இவரின் காலம் 1877-1945. இவர் மயக்க நிலையில் (hypnotized stage) முற்றிலும் வேறுபட்ட குரலில் பல நோயாளிகளின் நோய்களுக்கு சிகைச்சையும், பலரது துன்பங்களுக்கு விடையும் கொடுத்துள்ளார். இவர் தான் "Akashik Records"-ஐப் (Note: Akashik is a Sanskrit word) படித்து கூறுவதாகக் கூறியுள்ளார். YouTube-ல் உள்ள இந்த Video-ஐ பாருங்கள் : http://www.youtube.com/watch?v=y1W2AfaD7lk . இது எவ்வளவு பழைய Video என்று எனக்குத் தெரியாது. இந்த Video, Cacey-ன் எகிப்திய பிரமிடுகளைப் பற்றிய கூற்று உண்மையாகியிருப்பதைப் பற்றி கூறுகிறது. இப்படி நடக்கும் சில பிரமிப்புகளுக்கு யாரேனும் அறிவியல் விளக்கம் கொடுக்கமுடியுமா? எனக்கு பதில் கிடைக்காததால், என் இறை நம்பிக்கை இன்னும் அதிகமே ஆகிறது.

"வாழ்க்கையின் எதார்த்தங்களில் கடவுளுக்கென்ன வேலை?" என்ற கேள்வி முடியாமல் என்னுள் தொடருவது இது போன்ற புதிர்களினால் தான்.

மற்றபடி, மனித துர்குணங்களையும் கடவுள் நம்பிக்கையையும் குழப்பத் தேவையில்லை என்று நினைக்கிறேன். கோபம், பொறாமை, ஆதங்கம், அழுகை, வெறுப்பு என்பவை மனிதனின் துர்குணங்கள். அவையெல்லாம், இறைத்தன்மை கொண்ட ஒரு சக்திக்கும் இருக்கும் என்று யாரேனும் நம்பினால், அவர்களது தேடல் முற்றுப்பெறாமலேயே போக வாய்ப்புள்ளது. மதம் என்பதிலும் கோட்பாடு என்பதிலும் தப்பில்லை. ஆனால், மதவெறி என்ற பெயரால் நடக்கும் வன்முறை என்பது இப்படிப்பட்ட துர்க்குணங்களின் வெளிப்பாடே என்பது என் தாழ்மையான எண்ணம். இப்படிப்பட்ட சம்பவங்களினால் மதமே தப்பு என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

என் உள்மனசில் இதுவெல்லாம் இருந்தது..எப்படி எழுதன்னு தெரியல..அழகாக அருமையாக மன்றத்தில் எதற்காக இப்படி ஒரு த்ரெட் தொடங்கப் பட்டதோ அதன் பயன் இப்ப கிடைச்ச மாதிரி ஒரு மகிழ்ச்சி...சபாஷ்

தளிகா:-)

சகோதரி ஜானு அவர்களுக்கு
//ஒரு பக்கம் கடவுள் யார் என்கிறீர்கள்? மறுபக்கம் வாசலில் கோலமிட்டு, வீட்டில் விளக்கேற்றி என்கிறீர்கள். (வழிபடுவதை தானே சொன்னீர்கள். எல்லோர் வீட்டிலும் ஏற்றும் விளக்கல்லவே!) அது போலவே என்னுடைய கடவுள் கருத்துகளைக் குழந்தைகளிடம் திணிக்கபோவதில்லை என்கிறீர்கள். ஆனால், குழந்தைகளுக்கு ஸ்லோகம் சொல்லிக் கொடுக்கிறேன் என்கிறீர்கள்.//

வாசலில் கோலமிடுவதும், வீட்டில் விளக்கேற்றுவதும் தமிழர் பண்பாடு. முதலில் கலாச்சாரம், பண்பாட்டையும் கடவுள் கொள்கையையும் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். தமிழ் நாட்டில் மதம் சாராத விழாக்களில் கூட குத்துவிளக்கேற்றும் நடைமுறை உண்டு. தெரியுமா உங்களுக்கு?

அதுமட்டுமன்றி, எனக்கு மீன் உணவு பிடிக்கவில்லை என்றால் அதை என் கணவரும் குழந்தைகளும் சாப்பிடக்கூடாது என்று நான் சொல்லமுடியுமா? அதுபோலத்தான், கடவுள் என்று ஒருவர் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதை எப்படி என் குடும்பத்தில் திணிக்கமுடியும்?

என் பிள்ளைகளுக்குப் பிடித்திருக்கிறது அதனால் அவர்களுக்கு ஸ்லோகம் கற்றுத்தருகிறேன். உணவு உட்பட எதையுமே வலுக்கட்டாயமாகப் புகட்டினால் அதன் மீது வெறுப்பு தான் வரும் சகோதரி... அதனால் அவர்களும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பிறகு தெளிவடையும் சுதந்திரத்தை நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். இது தான் சரி என்பது என் எண்ணம்.

// முன்பெல்லாம் மனிதர்களை இயற்கை சீற்றங்களும் ,இனம் புரியாத நோய்களும் வந்து கூட்டம் கூட்டமாக அழித்தது. அனால் இப்போது ஆந்தராக்ஸ், அணுகுண்டு, ஓடும் ரயிலில் வெடிகுண்டு,சமைக்கும் குக்கர் வெடிகுண்டு என்று விதம் விதமாக மனிதனே அழிக்கும் தொழில் செய்யப் புறப்பட்டிருக்கும் இந்த்ப் பரிணாம வளர்ச்சி உங்கள் கண்ணில் படவில்லையா என்ன???//

பரிணாம வளர்ச்சி பற்றிய என் இந்தக் கருத்து அறியாமையால் எழுதப்பட்டதில்லை.அதைப்பற்றி எற்கெனவே எழுதிய கருத்துக்களைப் புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் வந்து விழுந்த வார்த்தைகள் அவை.

பரிணாம வளர்ச்சி என்பது ஒன்றிரண்டு வருடங்களில் ஏற்படக்கூடிய உடனடி வளர்ச்சியில்லையே...அப்படி ஒரு மாற்றம் ஏற்படப் பல நூறு ஆண்டுகள் ஆகலாம்.

இப்போதிருக்கும் நிலையைப் பார்த்தால் வருங்காலத்தில் மனிதனுக்கு தலையில் இரண்டு கொம்புகளும், வாயில் வெளியே துருத்திய இரண்டு கோரைப் பற்களும் தோன்றினாலும் சந்தேகப் படுவதற்கில்லை.(ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள உபயோகமாக இருக்குமே!!!!)

மேலும் நான் இயற்கை என்று சொல்லும் விஷயங்களை நீங்கள் இறைவன் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு நான் என்ன செய்யமுடியும்? அது உங்கள் சுதந்திரம்...

இன்னமும் ஏதேனும் சந்தேகமிருந்தால் கேளுங்கள் சகோதரி...பதில் தரக் காத்திருக்கிறேன்.

சகோதரர் உதயபாஸ்கர் அவர்களுக்கு, உங்களுடைய அருமையான கருத்துக்களுக்கு நன்றி. பகுத்தறிவு குறித்த உங்கள் விளக்கம் அருமை.

நண்பர் உதயபாஸ்கர் அவர்களுக்கு,

இந்த விவாதத்தை மதித்து, உடன் உங்கள் பெயரை பதிவு செய்து, தாங்கள் இங்கு வந்து பதில் கொடுத்து இருக்கின்றீர்கள். அதற்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களின் முந்தைய பதிவிற்கே பதில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். பிறகு நான் மட்டுமே எதிர்வாதம் செய்வது போல் இருந்திடவே, மற்றவர்கள் கொஞ்சம் தொடரட்டும் என்று விட்டுவிட்டேன்.

//இந்த விவாதம், கடவுள் இருக்கிறரா இல்லையா என்று ஆரம்பித்து, பகுத்தறிவு, மூட நம்பிக்கை, வாழ்க்கையின் எதார்த்தம், விஞ்ஞானம், மதம், வேதம் என்று பல கோணங்களில் செல்கிறது.//

இந்த கோணங்களைத் தொடாமல் இவற்றை விவாதிக்க முடியாது என்பது எனது கருத்து. இவற்றையெல்லாம் தொடாமல் பேச வேண்டுமென்றால் ஒரே வார்த்தையில் ஆம், இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஆனால், தனிப்பட்ட மதத்தையோ, கடவுளையோ குறிப்பிட்டு சொல்லாமல் பொதுவில் சொல்லி வாதத்தை கொண்டு செல்வது எளிது. இருப்பினும் அதை செய்வதற்குதான் ஏனோ தயங்குகின்றார்கள்.

//எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை "வாழ்க்கையில் சில ஏன்-களுக்கு பதிலே இல்லை" என்று எழுதியிருந்தார். அந்த "ஏன்"-கள்தான் என்னை சிந்திக்க தூண்டியவை. //

நான் எனது 8 வயதில் இருந்து அவரது எழுத்துக்களை படித்து வருகின்றேன். அவருடைய எழுத்துக்களில் எனக்கு நிறைய விடைகள் கிடைத்து இருக்கின்றது. நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறு சில 'ஏன்' கள் குறித்து அவர் எழுதியிருக்கலாம். எனக்கு முழுவதும் நினைவில்லை. ஆனால் கீழே கொடுத்துள்ள

//நாம் ஒரு செயலைப் பல முறை செய்யும்போது, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விடைகிடைக்கிறது. செய்பவரும் மாறுவதில்லை, செய்கின்ற செயலும் மாறுவதில்லை. கிடைக்கும் விடை மட்டும் மாறுகிறது.//

இந்த 'ஏன்' னை அவரா கேட்டார்? அல்லது தங்களுக்கு தோன்றியா 'ஏன்' ஆ அது? அவர் அதை கேட்டிருந்தால் அது எந்த புத்தகத்தில் என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள். அவருக்கு இந்த சந்தேகம் வந்திருக்க வாய்ப்பில்லை என்றே நம்புகின்றேன்.

கொஞ்சம் இங்கே விளக்கம் காணலாம். முதல் கேள்வி, செயல்கள் ஒன்றாய் இருந்தாலும் விடைகள் மாறுவதேன். ஒரு செயல் நடைபெறுவதில் influence of other factors எவ்வளவு அடங்கியுள்ளது என்பதை முதலில் நீங்கள் கவனிக்க வேண்டும். இதற்கு அறுசுவையில் இருந்தே ஒரு உதாரணம் எடுத்துக் கொள்ளலாம். எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம் இது. ஒரு முறை தயாரிக்கும் குழம்பு மறுமுறை செய்யும்போது அதே போல் வருவதில்லை. இது ஏன்? விடை எளிது. எங்கோ வித்தியாசம் இருந்திருக்கின்றது. ஒரு குழம்பு வைப்பதில் எவ்வளவு விசயங்கள் இருக்கின்றன என்பது நமக்கு தெளிவாக வேண்டும். எடுத்துக் கொள்ளும் பொருட்கள் அதே போன்று இருக்க வேண்டும். அப்போதும் இரண்டு வெங்காயம், இப்போதும் இரண்டு வெங்காயம் என்று சொன்னால் மட்டும் போதாது. அதே அளவு இரண்டு வெங்காயமாக இருக்க வேண்டும். அதே காரம், சுவை கொண்ட வெங்காயங்களாக இருக்க வேண்டும். இப்படியே ஒவ்வொரு பொருளும் இருக்கவேண்டும். கத்தரிக்காய் என்றால் இரண்டு முறை எடுத்துக்கொள்ளப்படும் கத்தரிக்காய்களும் texture, taste, size, weight என்று அனைத்திலும் ஒன்றாய் இருக்க வேண்டும். சரி இப்போது ஒரே மாதிரி பொருட்கள் தயார். அடுத்து தயாரிப்பு, முதல்முறை எந்த பாத்திரத்தில் செய்தீர்களோ அதே பாத்திரத்தில் செய்ய வேண்டும். பாத்திரம் மட்டும் அதே பாத்திரமாக இருந்துவிட்டால் போதுமா.. நெருப்பின் வெப்ப அளவும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். வெப்ப அளவு ஒரே நிலையில் இருந்துவிட்டால் மட்டும் போதாது. அறை வெப்பம் முன்பு செய்யும்போது என்ன நிலையில் இருந்ததோ அதே நிலையில் இருக்க வேண்டும். அடுத்து பொருட்கள் சேர்க்கும் வரிசை. முன்பு கடுகை முதலில் போட்டு, அடுத்து உளுந்தைப் போட்டிருந்தால், அதே போல்தான் செய்யவேண்டும். வதக்கும் நேரம், கொதிக்க வைக்க நேரம் இப்படி affecting factors எல்லாமே மிகத்துல்லியமாக ஒத்து வருகின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இருமுறை அல்ல, ஆயிரம் முறை செய்தாலும் விடை ஒன்றாய்தான் வரும். எல்லாம் மிகச்சரியாய் வந்தும் நீங்கள் ருசி பார்க்கும் போது வித்தியாசம் தெரியலாம். உங்கள் நாக்கும் நீங்கள் முதல் குழம்பினை ருசித்த போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கவேண்டும். நாக்கு மட்டுமல்ல, உங்கள் மனநிலையும் சரியாய் அதே போன்று இருக்க வேண்டும். நான் நிறைய factors ஐ குறிப்பிடவில்லை. ஒரு சாதாரண குழம்பிற்கே எத்தனை விசயங்கள் உள்ளன. யோசித்துப் பாருங்கள். வாழ்க்கையின் நமது ஒவ்வொரு செயல்களுக்கும், other factors என்பது நிறைய இருக்கின்றது. எல்லாமே ஒத்துவந்தால், ஒன்று போல் அமைந்தால் கண்டிப்பாக எத்தனை முறை நீங்கள் முயன்றாலும் விடை ஒன்றாய்தான் இருக்கும். இது அறிவியல். கணினிப் பொறியாளராகிய உங்களுக்கு தெரியாதது அல்ல. கம்ப்யூட்டர் ப்ராஸ்ஸசர்கள், இதர சிப்புகள், ஏராளமான எலக்ட்ரானிக் சமாச்சாரங்கள் தயாரிப்புக்கு இந்த விதிதான் பயன்படுகின்றது. அதனால்தான் கோடிகோடியாய் உற்பத்தி செய்தாலும் அவை அத்தனையும் ஒரே மாதிரி இருக்கின்றன. இயந்திரங்களின் பயன்பாடுகள் உள்ள இடங்களில் அதிகம் தவறுகள் நடப்பதில்லை. அங்கு ஒரு ஒழுங்குமுறை கொண்டு வருவதும் எளிது. மனிதர்கள் வாழ்வு என்று வரும்போது எல்லாமே எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அப்படி 100 சதவீதம் இருக்கும் பட்சத்தில் விடைகள் ஒன்றுதான்.

"செய்பவரும் மாறுவதில்லை. செய்யும் செயலும் மாறுவதில்லை. கிடைக்கும் விடை மட்டும் மாறுகின்றது." அடுத்த முறை எல்லா factors ஐயும் யோசித்து அவை எல்லாமே மிகச்சரியாய் இருக்கின்றவா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படியும் மாறினால் மாறும் விசயத்தை எனக்கு தெரியப்படுத்துங்கள். நான் காரணம் கண்டறிந்து சொல்கின்றேன்.:-)

//இதேபோல், சமதிறமையும் சமமுயற்சியும் கொண்ட இருவரின் முன்னேற்றமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.//
இதற்கும் அதே பதில்தான். நாம் மட்டும் முடிவு செய்து தயாரிக்கும் ஒரு கத்தரிக்காய் குழம்பிற்கே எத்தனை விசயங்கள் அதை முடிவு செய்ய வேண்டியதாயிருக்கின்றது. இதுவே வாழ்க்கை, முன்னேற்றம் என்று வரும்போது எத்தனை, எத்தனை விசயங்கள் அதை முடிவு செய்கின்றன என்று யோசியுங்கள். ஒரு சிறிய பிஸினஸ் போன்ற செயல்களுக்கே ஆயிரம் factors இருக்கும். அதிலும் மற்ற மனிதர்களும் சம்பந்தப்பட்ட விசயம் என்கின்றபோது, விடை ஒரே மாதிரி அமைதல் மிகவும் கஷ்டம். விடை அமையவில்லையென்றால், மாற்றங்களோ, பிழையோ எங்கேயோ நடந்திருக்கின்றது என்றுதான் பொருள். இதற்கு இயற்கை, இறை என்றெல்லாம் பெயரிட்டுக்கொள்ளுதல் உங்கள் விருப்பம். ஆனால், இவை விடை காண முடியாத கேள்விகள் அல்ல.

இதைப் பற்றி பேசும்போது probabilty of actions and results பற்றியும் குறிப்பிட வேண்டும். ஒரு செயல் நடப்பதற்கான வாய்ப்புகள், செயலின் விடைகள், அவை நம்முடைய கட்டுப்பாட்டினை தாண்டி இருக்கின்ற விசயம் இது. தெரிந்த உதாரணம், லாட்டரி சீட்டு. பத்து பேர் பெயரை எழுதிப் போட்டு குலுக்கல் நடப்பதாக வைத்துக்கொள்வோம். விடை என்ன வரும் என்பது யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியாது. யூகங்கள் கொடுக்கலாம். வரும் விடைகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், குலுக்கப்பட்ட அந்த பத்தில் ஒன்றுதான் பரிசு வெல்லும். பரிசு வென்ற பிறகுதான் அவர் அதிர்ஷ்டசாலியா, அல்லது துர்அதிர்ஷ்டசாலியா என்று தீர்மானித்து சொல்ல முடியும். இந்த அதிர்ஷ்டம் என்பதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விசயங்கள் அல்ல. இதேபோல்தான் எதிர்பாராத துக்க நிகழ்வுகளை விதி என்கின்றோம். இவை இரண்டுமே இறந்த காலத்தை அடையாளம் காட்ட பயன்படும் வார்த்தைகள்.

Nostradamus, Mother Shipton, Edgar Cayce போன்ற கணிப்பு சொல்பவர்களை பார்த்தா ஆச்சரியப்படுகின்றீர்கள்!! நெட்டில் இன்னும் தேடிப் பாருங்கள். வரிசையாக ஆட்கள் கிடைப்பார்கள். இதில் ஒரு விசயத்தை மட்டும் நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும். அவர்கள் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். எப்போதுமே இறந்தவர்களைப் பற்றி பேசும்போது மிகைப்படுத்தி பேசுவது மனிதன் இயல்பு. நாம் சென்று பரிசோதிக்கவா முடியும். இப்போதும் உயிருடன் இருக்கின்றவர்கள் யாரும் அத்தகைய அபரிமித சக்தியுடன் இருப்பதாக இருந்தால் சொல்லுங்கள். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்தித்து வருவோம். (எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள ஒரு ஊரில் ஓலைச்சுவடி வைத்து உங்கள் பெயர், ஜாதகம், நடந்தவை, நடக்கப்போறவை சொல்வேன் என்று கதை கட்டும் கூட்டம் ஒன்று இருக்கின்றது. சோதனைக்காகவே சென்றோம். எதிரே அமர்ந்திருப்பவனை எந்த அளவிற்கு மடையனாக நினைத்துக்கொண்டு ஏமாற்றுகின்றார்கள் தெரியுமா? )

மீண்டும் உரையாடலாம்.

மேலும் சில பதிவுகள்