எலுமிச்சங்காய் ஊறுகாய் - 1

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலுமிச்சம்பழம் - 6
மிளகாய்ப்பொடி - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு துண்டு
கடுகு - அரை தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 8
வெந்தயம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் கிழங்கு - ஒரு துண்டு
உப்பு - முக்கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - அரை தேக்கரண்டி


 

எலுமிச்சம்பழத்தை சுத்தம் செய்து எட்டாக நறுக்கி அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி, உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து மூழ்கினாற் போல் வேகவைக்கவும்.
முக்கால் அளவு வெந்ததும் இறக்கிவைக்கவும். அதில் தண்ணீரை வடிக்காமல் வைக்கவும்.
அடுத்த நாள் வாணலியில் மஞ்சள் கிழங்கையும் வெந்தயத்தையும் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கடுகு, பெருங்காயம் போட்டு வெடித்தவுடன் மிளகாய்பொடியையும் போட்டு ஒரு நிமிடம் கிளறி எலுமிச்சம்பழத்தின் மீது கொட்டவும்.
பச்சைமிளகாயை நறுக்கி சிறிது எண்ணெயில் வதக்கி அதையும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.


மேலும் சில குறிப்புகள்