தக்காளி ரசம் (ஈஸியான முறை)

தேதி: September 29, 2007

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பெரிய தக்காளி - மூன்று
புளி - மூன்று டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ரசப்பொடி - ஒன்றரை டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு
பூண்டு - இரண்டு லேசாக தட்டியது
கறிவேப்பிலை - மூன்று ஆர்க்
பெருங்காயம் - ஒரு பின்ச்
கொத்தமல்லி - சிறிது மேலே தூவ


 

தக்காளியை மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் மூன்று விசில் விடவும்.
வெந்த தக்காளி ஆறியதும் ஒரு சட்டியின் மேல் பெரிய அகலமான கண் வடிகட்டியை வைத்து வடிகட்டவும். கையால் நன்கு பிசைந்து விட வேண்டும். வேண்டுமென்றால் கூட கால் டம்ளர் தண்ணீர் விட்டு பிசைந்து அந்த ஜூஸையும் ஊற்றிக் கொள்ளுங்கள்.
இப்போது தக்காளி ஜூஸில் உப்பு, புளி தண்ணீர், ரச பொடி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியில் சட்டியை காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு பூண்டு சேர்த்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தக்காளி ரசத்தில் கலக்கவும்.
கொத்தமல்லி தூவி நெய் ஊற்றி இறக்கவும்.
சூப்பர் ஹெல்தி ரசம் ரெடி.


வயிற்றுக்கு இதமான சூப்பர் தக்காளி ரசம்
தக்காளி ரசத்திற்கு பீட்ரூட் பொரியல் (அல்லது) உருளைக்கிழங்கு வறுவல், அப்பளம் சூப்பர் காம்பினேஷன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலா,

என்ன சொல்ல????????????????

உங்க தக்காளி ரசம் செய்வதற்கு எளிமையாகவும், சுவையாகவும் இருந்தது...வாழைப்பூ வடையுடன் சூப்பர் காம்பினேஷன்....இனி அடிக்கடி செய்வேன்..குறிப்புக்கு நன்றி...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

iItried tomato rasam.its very tasty.thank you very much.

வா அலைக்கும் அஸ்ஸலாம் அன்பு சகோதரி ஆயிஷா (அருமையான பெயர்)

செய்து பார்த்து பதில் போட்டதற்கு ரொம்ப நன்றி.

ஒரே புளி ரசமும் சாப்பிட கூடாது ரத்ததில் புளி அதிக மாக சேர்ந்துவிடும். ஆகையால் புளிரசம்,லெமென் ரசம்,தேங்காய் பால் ரசம், தக்காளி ரசம்ம், மோர் குழம்பும் என்று சேர்த்துக்கொள்ளனும்.
இதில் தக்காளி ரசம் ரொம்ப நல்லது.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா நானும் இப்படிதான் ரசம் வைப்பேன்.னன்ட்ராக இருக்கும்.தக்காளியை ம்ய்க்ரவய்வ் ஒவெனில் 2 நிமிடம் வைத்து தோல் உரித்து கரைத்து விட்டால் இன்னும் எளிதகவும் ருசியகவும் இருக்கும்.ஒரு முறை முயர்சித்து பாருஙள்.உங்கள் குறிப்புக்கள் எல்லம் அருமை.பாராட்டுக்கள்

Today is a new day.

ஜலீலாக்கா உங்க தக்காளி ரசம் செய்தேன்.சுவை அசத்தலாக இருந்தது. என் குழந்தையும் விரும்பி சாப்பிட்டாள். என் கணவரிடமிருந்தும் பாராட்டுக்கள். தனியாக டம்ளரில் ஊற்றி வேறு குடித்தார்.மிகவும் சுலபமாக செய்ய முடிந்தது.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

திவ்யா அருன் நல்ல இருக்கீறீங்களா?
ரொம்ப நாளா உஙக்ளை கானும்.
தக்காளி ரசம் நல்ல இருந்ததா?
எங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த ரசம் மட்டும் எவ்வளவு வைத்தாலும் மிஞ்சாது.

உங்கள் குழந்தையும் விரும்பி சாப்பிட்டது ரொம்ப சந்தோஷம்.
உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

ஜலீலா

Jaleelakamal

Vanakkam akka...takkaaliyeh 3 damlar tannir vittu kotikka vaikka sollirukkirgal, kothitta intha tanniraiyum serthu samaikka venduma?

nandri,
indra..

முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் இரண்டு மூன்று விசில் விட்டு இரக்கிடனும்,பிறகு மசித்து வடிகட்டி செய்யனும்

Jaleelakamal