உருளைக்கிழங்கு வறுவல்

தேதி: September 29, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

உருளைக்கிழங்கு - அரை கிலோ
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
ரெட் கலர் பொடி - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
பெருங்காயத் தூள் - ஒரு பின்ச்
எண்ணெய் - நான்கு டேபிள் ஸ்பூன்


 

உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி அரை டீஸ்பூன் உப்பு போட்டு ஒரு நிமிடம் ஊற வைக்கவும்.
இரும்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகாய்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், ரெட் கலர் பொடி, கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு ஊறவைத்த உருளைக்கிழங்கு, உப்பு போட்டு நன்கு இரண்டு மூன்று தடவை கிளறி விடவும்.
உருளைக்கிழங்கு மொறுகும் வரை கிளறவும். பிறகு எண்ணெய் தனியாக பிரிந்து நிற்கும்.
உருளைக்கிழங்கை அதிலிருந்து அரித்து எடுத்து விட்டு மீதி தங்கிய அந்த எண்ணெயிலேயே ரசம் கூட தாளித்துக் கொள்ளலாம்.


பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் முதல் வெஜிடபுள் இந்த உருளைக் கிழங்கு தான். இந்த முறையையும் ட்ரைப் பண்ணுங்களேன்.
இரும்பு வாணலியில் வறுத்தால் தான் நன்றாக இருக்கும் .எண்ணெய் அதிகம் விட்டால் செய்தால் மொறு மொறு என வரும். இந்த வறுவல் தயிர் சாதம்,சாம்பார் சாதம்,மோர் குழம்பு,லெமன் ரைஸ், தக்காளி சாதம் எல்லா வகை கூட்டுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலா அக்கா எப்படி இருக்கீங்க நேற்று உங்கள் உருளைகிழங்கு வறுவல் செய்தேன் நன்றாக இருந்தது.செய்வதற்க்கும் மிகவும் சுலபமாக இருந்தது.வெங்காயம்,தக்காளி இல்லாததால் வாயில் எதுவும் தட்டுபடாத்ததால் என் பையனும் விரும்பி சாப்பிட்டான் குறிப்புக்கு மிக்க நன்றி.

அன்புடன் கதீஜா.

டியர் கதிஜா நல்ல இருக்கீங்களா? ரொம்ப நாளாக ஆளைகாணும்.
உருளை கிழங்கு வருவல் செய்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.
இன்ஷாஃப் விரும்பி சாப்பிட்டாரா?
அப்படியே மைதா மாவு இனிப்பு தோசையும் சுட்டு கொடுங்கள்.
சூபாரா உள்ளெ போகும்.என் பசங்களுக்கு இது ரொம்ப பிடிக்கும்
ஜலீலா

Jaleelakamal