மட்டன் பிரியாணி (கல்யாண பிரியாணி) சமையல் குறிப்பு - 5459 | அறுசுவை


மட்டன் பிரியாணி (கல்யாண பிரியாணி)

food image
வழங்கியவர் : Jaleela Banu
தேதி : Sat, 29/09/2007 - 15:37
ஆயத்த நேரம் : 25 நிமிடம்
சமைக்கும் நேரம் : 1 ம்ணி நேரம்
பரிமாறும் அளவு : 7 நபர்களுக்கு

 

 • மட்டன் - 1 கிலோ
 • அரிசி - 1 கிலோ
 • எண்ணெய் - 100 கிராம்
 • டால்டா - 150 கிராம்
 • பட்டை - இரண்டு அங்குல துண்டு இரண்டு
 • கிராம்பு - ஐந்து
 • ஏலக்காய் - மூன்று
 • வெங்காயம் - 1/2 கிலோ
 • தக்காளி - 1/2 கிலோ
 • இஞ்சி - 3 டேபிள் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்
 • பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்
 • கொத்தமல்லி தழை - ஒரு கட்டு
 • புதினா - 1/2 கட்டு
 • பச்சை மிளகாய் - 8
 • தயிர் - 225 கிராம்
 • சிவப்பு மிளகாய் தூள் - 3 1/2 டீஸ்பூன்
 • மஞ்சள் போடி - 1 பின்ச்
 • ரெட் கலர் பொடி - 1 பின்ச்
 • எலுமிச்சை பழம் - 1
 • நெய் - ஒரு டீஸ்பூன்

 

 • முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணெயும், டால்டாவையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் ஒரு விரல் அளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும்.
 • அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி போடவும்.
 • நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும்.
 • ஓவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியேதான் வைக்க வேண்டும்.
 • அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறவும்.
 • அதன் பின் தக்காளி பச்சை மிளகாய் போடவும்.
 • இரன்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேக விடவும்.
 • நன்கு எண்ணெயில் எல்லா பொருட்களும் வதங்கியவுடன் மட்டனை போடவும். போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக மூன்று நிமிடம் கிளறவும்.
 • பிறகு தயிரை நல்ல ஸ்பூனால் அடித்து ஊற்றவும்.
 • அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேக விடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணெய் மேலே மிதக்கும்.
 • அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும். ஊற வைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணெயும், எலுமிச்சை பழமும் பிழியவும். வெந்ததும்
 • நல்ல பதமாக பார்த்து ஓவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடித்தால் போதும். உடனே சிம்மில் வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் கொட்டவும். கொட்டி சமப்படுத்தி சட்டிக்கு கீழே தம் போடும் கண் தட்டு (அல்லது) டின் மூடி வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில் விடவும்.
 • ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு ரெட்கலர் பொடியை அந்த சுடு கஞ்சி இரண்டு டேபிள் ஸ்பூனில் கரைத்து தூவிவிடவும்.
 • அதன் பின் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும்.
 • பிறகு பத்து நிமிடம் புழுங்க விட்டு மேலிருந்து கீழாக நல்ல உடையாமல் பதமாக கிளறி சூடாக பரிமாறவும்.
இது சென்னை நியூ காலேஜ் மற்றும் இதர மண்டபங்களிலும் செய்யும் முறை. நாமும் வீட்டில் விஷேச நாட்கள் மற்றும் ஈது பெரு நாட்களிலும் செய்யலாம். தொட்டுக்கொள்ள எண்ணெய் கத்திரிக்காய், தயிர் சட்னி, கேசரி, மிட்டாகானா முதலியவை. மிட்டாகானா அடுத்த குறிப்பில் கொடுக்கிறேன். வீட்டில் சாதாரணமாக செய்யும் போது டால்டாவின் அளவை குறைத்து கொண்டு எண்ணெயை சேர்த்து கொள்ளலாம். கறியின் அளவும் குறைத்துக் கொள்ளலாம். விரிவாக எழுதி உள்ளேன். மெதுவாக படித்து புரிந்து கொண்டு செய்து பார்க்கவும். நம்மால் முடிந்தால் தக்காளி ஹல்வா, கேரட் ஹல்வா, பீட்ரூட் ஹல்வா செய்து கொள்ளலாம். இந்த ஈது பெரு நாளுக்கு டிரை பண்ணி பாருங்கள்


விட்டு விட்டீர்கள்

ஜலீலா எனக்குப் புரிந்தது..இருந்தாலும் எங்கே எண்ணையை சேர்ப்பது என்பதை விட்டு விட்டீர்கள்
2)தயிரை ஊற்றங்கரது இரண்டு முறை வந்திருக்கு

தளிகா

அது

அது ஆபிஸில் டைப் பண்ணது இரண்டு தடவை கட் ,பேஸ்ட் பண்ணி விட்டேன். அது ஒரு தடவை தான் ஒரு தடவை இந்த பிரியாணி செய்து ந்ல்ல வந்து விட்டால் மற்றது பிடிக்காது.
மட்டன் போட்டு ஐந்து நிமிடம் கிளறி பிறகு தயிரை ஊற்ற வேண்டும்.பிறகு எல்லாம் வேக இருபது நிமிடம் ஆகும். சிம்மில் வைத்து விடவேண்டும். சிம்மில் வைத்து செய்தால் அடிபிடிக்காது

Jaleelakamal

தளிகா
எண்ணையை சட்டி காய்ந்ததும் முதலில் ஊற்றவேண்டும் ரொம்ப சாரி.

Jaleelakamal

Hi Jaleela,could you please

Hi Jaleela,

Could you please post Mittakhana recipe.

கூடிய விரைவில் அனுப்புகிறேன் (9டிய சுஜாதா)

டியர் சுஜாதா
மிட்டாகானா ரெசிபி கூடிய விரைவில் அனுப்புகிறேன் டைம் இல்லை இடை இடையில் பத்து நிமிடம் தான் கிடைக்கிறது.

ஜலீலா

Jaleelakamal

Thanks

Jaleela,

Thanks for your response, not in a hurry take your time.

மிட்டாகானா (சுஜாதா)

சுஜாதா மிட்டாகானா ரெசிபி கொடுத்து விட்டேன் பிறகு என்ன செய்து பார்த்து எப்படி இருந்தது என சொல்லுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

instead of dalda,v can add

instead of dalda,v can add ghee

it will greater taste

ஹ்ல்லொ

ஹ்ல்லொ மேடம், உங்க குறிப்பு செய்தேன் .நல்லா வந்தது.நன்றி மேடம்.எனக்கு 2 சந்தேகம். 1. 1/2 அல்லது 1/4 கில்லோ பிரியாணி செய்யும் போது எவ்வளவு பட்டை, கிராம்பு,ஏலம் சேர்க்கனும்.2.இதில் கரம் மசாலா தூள் இல்லியே?. பிளிஸ் என் டவுட்ஸ் க்ளியர் பண்ணுங்க மேடம். ஒரு ரிக்வஸ்ட். கடையில் செய்யும் ப்ளென் ப்ரியாணி [கறி அல்லது காய் சேர்க்காமல் ] சைவ ப்ரியரும் சாப்பிடக் கூடிய பிரியாணீ சொல்லுங்க மேடம்.மிக்க நன்றி .

வெஜ் பிரியாணி (டியர் ரதி )

டியர் ரதி கண்டிப்பாக இதேமாதிரி வெஜ் பிரியாணி கரெக்டாக சொல்கிறேன், சாரி பா இது முதல் முதல் கொடுத்த குறிப்பு இதுல் பட்டை ஏலம் சரியா சொல்ல வில்லை இப்பதான் பார்க்கிறேன்
இப்போது சேர்த்து விடுகிறேன், சரியா டைப்பண்ண தெரியாத போது அடித்த இது
ஜலீலா

ஜலீலா

Jaleelakamal