வெங்காய ஊத்தப்பம்

தேதி: September 30, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 4 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் - 2 கப்
பொடியாக அரிந்த பச்சைக்கொத்தமல்லி -
தோசை மிளகாய்ப் பொடி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய்


 

பச்சரிசியை தனியாக ஊற வைக்கவும்.
உளுத்தம்பருப்பையும், வெந்தயத்தையும் ஒன்றாக ஊற வைக்கவும்.
2 மணி நேரம் ஊறியதும் அரிசி, உளுந்து, வெந்தயம் (உளுந்து, வெந்தயம் இரண்டையும் ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து) மூன்றையும் அரைக்கவும்.
வெண்ணையாக மாவு அரைந்ததும் எடுத்து உப்பு போட்டு கலந்து மூடி வைக்கவும்.
காலையில் தோசை வார்க்க வேண்டுமானால் முதல் நாள் மாலையிலேயே அரைத்து வைக்க வேண்டும்.
மாவு சற்றுப் புளித்தால்தான் ஊத்தப்பம் நன்றாக இருக்கும்.
தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றிக் கல் காய்ந்ததும் மாவை வட்டமாக ஊற்றிப் பரத்தி அதன் மேல் பொடியாக அரிந்து வைத்த வெங்காயம், கொத்தமல்லியைக்கலந்து தூவவும்.
இட்லி மிளகாய்ப் பொடியை மேலே அவரவர் விருப்பத்திற்கேற்ப தூவி நல்லெண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.
தேங்காய் சட்னியும், வெங்காய சாம்பாரும் அருமையான காம்பினேஷன்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மாமி இன்று காலை டிபனுக்கு வெங்காய ஊத்தப்பம் செய்தேன். நான் எப்பொழுதும் பொடி சேர்க்காமல் செய்வேன். இன்று பொடி சேர்த்து செய்தேன். நன்றாக இருந்தது.

சவுதி செல்வி

ஏற்கனவே நான் அரைத்த தோசைமாவில் உங்கள் வெங்காய ஊத்தப்பம் செய்து என் மகனுக்கு கொடுத்தேன்.சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

திருமதி. அதிரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த ஊத்தப்பத்தின் படம்

<img src="files/pictures/aa101.jpg" alt="picture" />