வறுத்த உருளை குருமா

தேதி: September 30, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

வறுக்க :
உருளைக்கிழங்கு - 2 (சதுர துண்டங்களாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாவர எண்ணெய் - ஒரு கப்
வதக்க:
சீரகம் - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
இரண்டாக கீறிய பச்சை மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
நறுக்கிய தக்காளி - ஒன்று
ஊறவைத்து அரைத்த முந்திரிப்பருப்பு - 10
கொத்தமல்லி இலை - சிறிதளவு


 

உருளைக்கிழங்கில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 30 நிமிடம் கழித்து இளம் சிவப்பாக எண்ணெயில் வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த எண்ணெயில் இருந்து 3 தேக்கரண்டி எண்ணெயை வேறு வாணலியில் ஊற்றி காயவைத்து சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொன்னிறமாக வதக்கவும்.
பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து தக்காளி போட்டு கிளறவும். தக்காளி மசிந்ததும் உப்பும், தேங்காய்ப்பாலும், வறுத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்ததும் அரைத்த முந்திரி பேஸ்ட்டை போட்டு கொதிக்கவிட்டு குருமா இறுகி கெட்டியாகும்.
அதில் கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கவும்.சுவையான வித்தியாசமான குருமா தயார்.


பூரி, சப்பாத்தி, நாண், பரோட்டா, ப்ரெட் முதலியவற்றிற்கு தொட்டுக்கொள்ள ஏற்ற குருமா வகை இது. நிச்சயமாக சுவை அருமையாக இருக்குமென்பதில் சந்தேகமே இல்லை.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு ருபினா, எப்படிமா இருக்க? ரீமாவும், உள்ளே இருக்கும் செல்லக் குட்டியும் நலமா? இன்னைக்கு வறுத்த உருளை குருமா செய்தேன்.ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.அபாரமான சுவை.அசத்தலா இருந்தது.என் கணவரும் மிகவும் விரும்பி சாப்பிட்டார்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

ஹாய் திவ்யா நான் நல்லா இருக்கேன் என் மகள் மற்றும் குட்டியும் நல்லா இருக்காங்க.இது நானும் கைரளியில் சமையல் நிகழ்ச்சியில் பார்த்து செஞ்சது..அந்தம்மா எது சமச்சாலும் செம்ம அருமையா இருக்கும் உடனே ஓடி போய் செய்யும் விதமா கவரும் விதமா செய்வாங்க.ஒன்னு சொல்ல மறந்துட்டேன் திவ்யா இதற்கு உருளையை பொரியலுக்கு நறுக்குவது போல நறுக்கனும் குட்டி சதுரங்களா...மகள் எப்படி இருக்கிராங்க?நம்பவே முடியல எல்லாம் சீக்கிரம் வளர்ந்துட்டே இருக்காங்க.

படிக்கவே ஆசையாக உள்ளது.வெள்ளி செய்ய போகிரேன்.ஒரு சந்தேகம்.உருளை அப்படியே chips மாதிரி எண்னையில் பொரிக்கனுமா?எண்ணை அதிகமாக உறியாது??

Anbe Sivam

Anbe Sivam

ஹாய் சுடர் சிப்ஸ் போல இல்லை..குட்டி குட்டி சதுரமா பொடிமாஸ் செய்ற மாதிரி இல்லை நினைத்த அளவுக்கு உறியவில்லை ஆனால் சுவை நன்றாக இருந்தது

தளிகா இப்பதான் சப்பாத்திக்கு இந்த குருமா செய்தேன். ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. அவருக்காக கூட காத்திருக்காம சாப்பிட்டுடுவேன்னு தோணுது :). நன்றி தளி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!