சில்லி ஃபிஷ் ஸ்டெவ்

தேதி: September 30, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முள்ளில்லாத பெரிய மீன் - 4 துண்டுகள்
தக்காளி - 6 (சின்னத்துண்டுகளாக வெட்டவும்)
வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கவும்)
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தக்காளிவிழுது - 1மேசைக்கரண்டி
வினிகர் அல்லது எலுமிச்சைச்சாறு - 1 மேசைக்கரண்டி
வெண்ணை - 2 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப் (250மி.லி)


 

முதலில் மீன் துண்டுகளை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பாத்திரத்தில் சூடு வந்ததும் வெண்ணையை போடவும்.சற்று உருகினதும் அதனோடு தக்காளி, வெங்காயம், மிளகாய் தூள், எலுமிச்சைச்சாறு அல்லது வினிகர், தக்காளி விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தண்னீரையும் உப்பையும் சேர்த்து 5 நிமிடம் வேகவிட்டு மீன் துண்டுகளை சேர்க்கவும். எண்ணை மிதந்ததும் மீனை திருப்பி போட்டு லேசான தீயில் 4 நிமிடம் வேகவைத்து இறக்கி வைக்கவும்.


இதை சாதம் அல்லது ரொட்டிகளோடு சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்