ஆலு பனீர் சப்ஜி

தேதி: September 30, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 3
பனீர் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 3
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
என்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கவும்.
பனீரையும், வெங்காயத்தையும் நறுக்கவும்.
எண்ணெயைக்காய வைத்து சீரகம், ஏலக்காய் தாளித்துப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத் தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பனீர், உருளை, உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
வெந்ததும் கரம் மசாலா தூள், மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்