வேர்க்கடலைச் சுண்டல்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை வேர்க்கடலை - ஒரு கப்
நறுக்கின வெங்காயம் - அரை கப்
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

இட்லி அவிக்கும் பானையில் தண்ணீர் ஊற்றி வேர்க்கடலையை போட்டு, அதனுடன் உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிக்கட்டவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்த பிறகு கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
பிறகு அதில் பொடியாக நறுக்கின வெங்காயத்தைக் கொட்டி நன்கு வதக்கவும்.
நறுக்கின மிளகாய், கறிவேப்பிலை, வேக வைத்த நிலக்கடலை அனைத்தையும் அத்துடன் சேர்த்து நன்கு பிரட்டி வேக விடவும்.
தேவையானால் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம். சிறிது எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்