சென்ற வார மன்றம் - 5 (23-09-07 ல் இருந்து 29.09.07 வரை)

கடந்த வாரம் (23.09.2007 - 29.09.2007) மன்றத்தில் வெளியான பதிவுகளின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட சிறப்பு பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்த வாரத்திற்கான பட்டங்களை அறுசுவை உறுப்பினர்  திருமதி. தேவா அவர்கள் தேர்வு செய்துள்ளார். இவரும் சில புதிய பட்டங்களைத் நேயர்களுக்கு கொடுத்துள்ளார். மிகக்குறுகிய காலத்தில், அவரது வேலைப் பளுவுக்கிடையில், கடந்த ஒரு வாரத்துப் பதிவுகள் அனைத்தையும் பார்வையிட்டு இந்த பட்டங்களை தேர்வு செய்துள்ள தேவா அவர்களுக்கு ஒரு 'ஓ' போடுவோமாக.

அதிக பதிவுகள் கொடுத்து இந்த வாரம் அறுசுவை அரசி பட்டத்தினை தட்டிச் செல்பவர் -

திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ் (50 பதிவுகள்)

அடுத்த இடங்களில்

2. தளிகா - 45
3. கவி சிவா - 41
4. வின்னி (வானதி) - 34

சிறந்த தலைப்பு கொடுத்து டைட்டில் ராணி பட்டத்தை தட்டி செல்பவர்,

திருமதி வானதி. அவர் கொடுத்த தலைப்பு - " அனைவரும் அறிந்த ரகசியம்"

http://www.arusuvai.com/tamil/node/5303

நகைச்சுவையான பதிவு கொடுத்து நகைச்சுவை ராணி பட்டத்தினை பெறுபவர் திருமதி. கவி சிவா அவர்கள்.

பதிவு: "கலியுக தருமி"

http://www.arusuvai.com/tamil/node/5359

தெளிவான தமிழில் எழுதுவதால் தமிழரசி பட்டம் திருமதி. விதுபா.

நகைச்சுவை டைட்டில் திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ் பதிவு - சாலமன் பாப்பா

http://www.arusuvai.com/tamil/node/5376

கடி ராணி திருமதி. திவ்யா அருண் - திக் திக் நிமிடங்கள்
http://www.arusuvai.com/tamil/node/5376

தத்துவ ராணி திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ் - "ஆணுக்கு ஒரு நீதி,பெண்ணுக்கு ஒரு நீதி,இது இந்த உலகத்தின் நியதி."
http://www.arusuvai.com/tamil/node/5355

ஐடியா ராணி திருமதி. ஹர்ஷினி - காய்கறி கீரை குல்பியாக மாற்றினது
http://www.arusuvai.com/tamil/node/5303

பயனுள்ள பதிவு திருமதி. நர்மதா - ஸ்டாக் மார்கெட் கேள்விக்கு பதில்
http://www.arusuvai.com/tamil/node/5247

வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேர்ந்தது. சதம், மூன்று பட்டங்கள். சபாஷ் சுபா
பட்டம் பெற்ற அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி

வெற்றி பெற்ற வீரிகளுக்கு/
வீராங்கனைகளுக்கு(வீரர்களுக்கு எதிர்ப்பால்)
எனது வாழ்த்துக்கள்!!!!!!

ஜமாய்ங்க!!!

நன்றி மீண்டும் சந்திப்போம்:-))

இந்த வார மன்றத்தில் பட்டம் பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். அதிலும் மூன்று பட்டங்கள் பெற்ற சுபாவுக்கு சிறப்பு பாராட்டு,
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

தேவா,
எப்படி இருக்கீங்க? உங்க உடம்பு இப்ப எப்படி இருக்கு:-)

எனக்கொரு பட்டம் தந்ததுக்கு ரொம்ப தேங்ஸ்:-)

நீங்க எங்கோ எழுதி இருந்தீங்க "Stress Eating". அது அப்பொ புரியல. இப்ப புரியுது, இந்த வாரம் முழுக்க என்னமோ தெரியல, பசி போலவே இருக்கு(எவ்வளவு சாப்பிட்டாலும்):-) இதுக்கு பேர் தான் அதுவா:-)நானும் எதேதோ, சாப்ப்டிட்டு இருக்கேன்:-) பயமா வேற இருக்கு. குறச்ச வெயிட் திரும்பவும் gain பண்ணிடபோறேன்னு:-) ஏதாவது வழி இருந்தா சொல்லுங்கப்பா:-)

பட்டம் வாங்கின அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்:-)

அன்புடன்
ஹர்ஷினி :)

அன்புடன்
ஹர்ஷினி :)

அன்புள்ள அண்ணா ,
இது அலாரமடிக்கும் நேரம்....
செ.வா.ம (30.09.07 லிருந்து 06.10.07) எப்போ???
விரைவில் செல்வியம்மாவிடம் இருந்து ரிப்போர்ட் வந்து விடும் என நம்பி உங்கள் வேலைப்பளுவுக்குமிடையில் மறக்காமல் இருக்கவுமே இந்த அலாரம். முழிச்சிக்கோங்க!!!!!!!!!

சென்ற வாரம் பட்டம் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஒரே நாளில் ( ஒரே இரவில்) அனைத்தையும் படித்து இரவு 2 மணி வரை விழித்திருந்து தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டு , 3 நாட்களாக வெளியூருக்கு சென்று விட்டதால் யாருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. என்னால் பாபு அவர்களுக்கு சிரமம் வேறு ( ரொம்ப அவசரத்தில் இந்த வார தலைப்புகளையும் தேதிகளைப் பார்க்காமல் முதலில் அனுப்பி விட்டேன்.). பிறகு அவர் குறிப்பிட்டு சொன்னபோதுதான் சொன்ன வேலையை சரியாக செய்ய முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஒரு வழியாக அனைத்தையும் படித்து செலெக்ட் செய்து அனுப்பினேன். மனோஹரி மேடம் எப்படித்தான் பதிவுகளின் எண்ணிக்கை வரை சரியாக சொன்னாரோ?

என்ன சுபா, இந்த வாரம் எத்தனை பட்டம் வாங்குவதாக ஐடியா? எதுக்கும் உங்களுக்கும், தளிகாவுக்கும் ஒரு அட்வான்ஸ் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்.

இந்த பக்கம் அதிகம் வர முடியரதில்ல...நேரம் பத்தலைன்னு சொல்ரதை விட நான் நேரத்தை ஒதுக்கலைன்னு நல்ல பிள்ளையா சொல்லிடரேன்:-D..தேவா எப்படி தானோ ஒரு ராத்திரியில் பட்டம் கொடுதீங்க??நல்ல கஷ்டபட்டிருபீங்க..ரொம்ப நன்றி தேவா..பையன் நலமா?வேலை இன்னும் எப்பவும் இருக்குமா?இல்ல இவ்வளவு நாள் கழிச்சு ஃப்ரீ ஆயிவேன் அப்படி இருக்கா?

தளிகா:-)

ஹாய் தேவா
ரொம்ப நன்றி
உண்மையிலேயே ஒரு நாளில் இப்படி கஷ்டப்பட்டு நைட் ட்யூட்டி பார்த்து செலக்ட் பண்ணி பட்டம் தந்ததற்கு ஒரு பாராட்டு.

தளிகா, சுபா என்ன இது என்னை நைட் வாட்ச்மேன் ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க. எனக்கு இதுமாதிரி ராத்திரி பிசாசு மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கறது பழகிப் போச்சு. தளிகா, இனி கிறிஸ்துமஸ் வரை முடிக்க வேண்டிய புராஜக்டுகளை சீக்கிரம் முடிக்கணும். ஆனாலும் இங்கே 8.30 - 5.00 மணி வேலை என்றால் அந்த 5 மணியோடு அதனை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். நான் 5.05 க்கு கிளம்பினால் கூட நான் தான் ஆபிசிலிருந்து கடைசியாக கிளம்பும் ஆளாக இருப்பேன். அதனால் ஆபிஸ் கவலை ஆபிசோடு. மேலும் எனக்கு ஒரு வேலை என்றால் அதனை பெண்டிங் வைப்பது பிடிக்காது. அது அந்த நிமிஷமே முடிக்க வேண்டும் என்று அதிலேயே மூழ்கி விடுவேன். இப்படி உடனடியா முடிச்சுடறதால வேலை சேர்ந்துவிடாது. இது ஆபிசுக்குன்னு இல்லை வீட்டிலும் இதே கதைதான்.

பையன் நல்லா இருக்கான். ஆனால் இன்னும் இருமல் மட்டும் குறையவேயில்லை. நானும் எனக்குத் தெரிந்த அத்தனை வீட்டு வைத்தியமும் பார்த்து விட்டேன். அலோபதி மெடிசனும் சைடில் கொடுத்துட்டு இருக்கேன். அப்படியும் இன்னும் சரியாகல. அறுசுவையில் அத்தனை பேரின் வீட்டு வைத்தியமும்கூட ட்ரை பண்ணிட்டேன். இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு. விடியற்காலையில் மட்டும் இருக்கு. யாருக்காவது இன்னும் எதாவது வீட்டு வைத்தியம் தெரிஞ்சா சொல்லுங்க. நான் மஞ்சள் பால்(மிளகு,சுக்கு,பனக்கற்கண்டு,காய்ந்த திராட்சை, மல்லி,தேன்,மஞ்சள்தூள்) போட்டு ஒரு முறை கொடுக்கிறேன். அப்புறம் தேங்காய் எண்ணெயில் சூடம் போட்டு காய்ச்சி நெஞ்சில் தேய்த்து விடுகிறேன். வெற்றிலை வைத்தியமும் பார்த்தாகிவிட்டது.

இனி வேலைக்கு நடுவில் லஞ்ச் டைமில், நைட்டுன்னு அறுசுவைக்கு நேரம் ஒதுக்க வேண்டியதுதான். தளிகா உங்க பொண்ணு எப்படி இருக்கா? நீங்க கேட்ட டெய்லி ஸ்கின் கேரை விரைவில் எழுதறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். நீங்க வரைஞ்ச படங்களெல்லாம் நல்லா இருக்கு.

எப்படியிருக்கீங்க? வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு? (கஷ்டம் தெரிஞ்சும் கேள்வி வேறயான்னு கேட்கறது காதில விழுது). கவலைப்படாதீங்க தேவா, இந்த வருட வேலையெல்லாம் கிறிஸ்மஸோட முடிஞ்சிரும், அதுக்கப்புறம் ஃப்ரீ தான். பையன பத்திரமா பாத்துக்கோங்க. சில வேளைகளில் சளிக்காகவும் , இருமலுக்காகவும் கொடுக்கும் மருந்துகளின் சூட்டினாலேயே வரட்டு இருமல் இருக்கும். அதனால் இது போன்ற சூட்டு மருந்துகள் கொடுப்பதை கொஞ்சம் குறைத்து, ஜூஸ் அதிகமாக கொடுத்து பார்க்கவும்.(ஜூஸை கொஞ்ச நேரம் வெது வெதுப்பான் நீரில் வைத்திருந்து பின் எடுத்து தரவும்).
பி.கு. ஜன்னல் கண்ணாடி சரி பண்ணி விட்டீர்களா? :-)))
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்