வெண்டைக்காய் தயிர் பச்சடி

தேதி: October 3, 2007

பரிமாறும் அளவு: 3 பேர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய் - 50 கிராம்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தயிர் - 1/2 கப்


 

வெண்டைக்காயை கழுவி மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெண்டைக்காயை போட்டு வதக்கவும்.
வெண்டைக்காய் நன்கு வெந்து முறுகி சிவந்ததும், இறக்கவும்.
தயிரில் உப்பு போட்டு கலந்து வெண்டைக்காயை அதனுடன் சேர்த்து கிளறி எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வெண்டைக்காய் தயிர் பச்சடி மிகவும் நன்றாக இருந்தது. நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்