முட்டைகோஸ் துவரம் பருப்பு கூட்டு

தேதி: October 3, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

முட்டை கோஸ் - கால் கிலோ
துவரம் பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
தனியா தூள் - அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தேங்காய் - கால் கப் (துருவியது)
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - மூன்று பல்
கொத்தமல்லி தழை - கொஞ்சம் மேலே அலங்கரிக்க


 

துவரம் பருப்பை மஞ்சள் தூள் போட்டு குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.
முட்டை கோஸ், வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோலுரித்து தட்டி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பின் தக்காளி, பச்சைமிளகாய், முட்டை கோஸ் போட்டு இரண்டு நிமிடம் மூடி போட்டு நன்றாக கிளறி மிளகாய் தூள், தனியா தூள் உப்பு போட்டு மூன்று நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
பிறகு வேக வைத்துள்ள துவரம் பருப்பை மத்தால் (அ) கரண்டியால் மசித்து அதில் போடவும். பிறகு கிளறி விட்டு தேங்காய் துருவலை போட்டு மீண்டும் கிளறி ஒரு கொதி கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.


காய் வகைகளில் முட்டை கோஸ் நோய் தீர்க்கும் அரு மருந்தாகும். டயட்டில் உள்ளவர்கள், சர்க்கரை வியாதிக்காரர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கேன்சர் வியாதிகாரர் களுக்கு இது ஒரு நல்ல டிஷ் ஆகும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலாக்கா!!
வழக்கமா செய்யறத விட்டு இந்த முறை உங்க குறிப்பின் படி செய்தேன்.. ரொம்ப அருமையா வந்தது... உங்க குறிப்புக்கு நன்றி!!!
பீட்ரூட் பொரியலுடன் சாப்பிட நல்லா இருந்தது

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

டியர் இலா முட்டைகோஸ் துவரம் பருப்பு கூட்டு ம்ம் சூப்பரா இருக்கும்.
இதே மாதிரி கடலை பருப்பு, கொத்து கறி சேர்த்து செய்து பாருங்கள் இன்னும் நல்ல இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal