தாய் ஃபிஷ் கிரேவி

தேதி: October 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

அறுசுவையில் ஏராளமான சமையல் குறிப்புகள் கொடுத்துவரும் <a href="experts/1377" target="_blank"> திருமதி. செய்யது கதீஜா </a>அவர்களின் தயாரிப்பு இந்த தாய் பிஷ் கிரேவி. சுவையான இந்த க்ரேவியை செய்து பார்த்து உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

புளி - ஒரு எழுமிச்சை அளவு
தக்காளி - பாதி (பெரியது)
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - பாதி (பெரியது)
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து
கறிவேப்பிலை - சிறிது
மசாலாதூள் - 2 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
சீரகத்தூள் - 1 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - சிறிது
கடுகு - சிறிது
வெள்ளை பூண்டு - 3 பல்
பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

முதலில் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும். பூண்டை சிறியதாக நறுக்கி வைக்கவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் எடுத்து வைக்கவும்.
பின் அடுப்பில் ஒரு தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு நன்கு பொரிய விடவும்.
அதன்பிறகு நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி, இஞ்சி,பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, தக்காளி, பச்சைமிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.
எல்லாம் நன்கு வதங்கியதும் உப்பு மற்றும் எல்லா தூள்களையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் கரைத்துவைத்துள்ள புளி கரைசலை ஊற்றி நன்கு கொத்திக்கவிடவும்.
கொதித்ததும் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.
சிறிது நேரம் கழித்து நறுக்கிய மீன் துண்டுகளை போடவும்.
இப்போது தீயை மிதமாக வைத்து மூடி போட்டு வேகவிடவும்.
மீன் நன்கு வெந்து கிரேவி போல் ஆனதும் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பறிமாறவும். இது சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண் உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

செய்யதுகதீஜா,

தேவையான பொருட்கள்ல மீன் எவ்வளவு amount தேவைன்னு போடவே இல்ல:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அன்புள்ள ஹர்ஷினி நலமாக இருக்கிறீர்களா. மீனின் அளவை குறிப்பிடாமல் இருந்ததுக்காக மன்னிக்கவும்.
மீன் படத்தில் உள்ளதை போல 1 முளுமீன் தான் வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
நன்றி.

இந்த குழம்புக்கு எந்த மீண் தேவை. நன்றி

அன்புடன்
சங்கீதா

Dear Kathija,
Today I tried ur Thai fish gravy with Tilapia fish.For Masala thool,I used Shakthi Masala fish curry masala..Its very easy to make with less spices...My husband liked it..Thanx for this recipe...

best regards,
anu pandian.

Be the best of what you are and the Best will come to you :)

Portia Manohar
what is tilapia fish

Portia Manohar