மரக்கறி டாகோ (Taco)

தேதி: October 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கார்ன் ரோர்டியா - 5 (Corn tortilla)
சோயா மீட் (சோயா உருண்டைகள்)- 1/4 கப்
கறுப்பு பீன்ஸ் (Black beans) - 1/4 கப்
வெட்டிய வெங்காயம் - 1/4 கப்
உருளைக்கிழங்கு - 2
லெட்டூஸ் - 1 இலை
உள்ளி- 3 பல்லு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித்தூள் - 1 மேசைக்கரண்டி
ஒரெகானோ - 1 மேசைக்கரண்டி
உப்பு
செடார் சீஸ் - 1/2 கப்
எண்ணெய்


 

சோயா மீற்றை கொதிதண்ணீரில் ஊறவைத்து சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, மிளகாய்தூள் பிரட்டி வைக்கவும்.
உருளையை உப்பு போட்டு அவித்து மசித்து வைக்கவும்.
கறுப்பு பீன்ஸை ஊறவைத்து உப்பு போட்டு அவித்து வைக்கவும்.
லெட்டூஸை மெலிதாக அரிந்து வைக்கவும்.
உள்ளியை நசித்து வைக்கவும்.
எண்ணெயை கொதிக்க வைத்து அதனுள் ரோர்டியாவின் ஒரு பாதியை இடுக்கியால் பிடித்துக்கொண்டு மறு பாதியை பொரிக்கவும்.
பின்னர் பொரித்த பாதியை பிடித்துக்கொண்டு மற்றைய பாதியை பொரிக்கவும் (Basket மாதிரி வரும்)
இவ்வாறு ஏனைய ரோர்டியாகளையும் பொரிக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு அதனுள் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பின்னர் கறுப்பு பீன்ஸ், உள்ளி, சோயா மீற்றைப் போட்டு வதக்கவும்.
பின்னர் உருளைய போட்டு கிளறவும்.
பின்னர் 1/2 கப் தண்ணீர், தூள் வகைகள், உப்பு, ஒரெகானோவை போட்டு மூடி அவிய விடவும்.
கறி வற்றி நன்கு தடிப்பானதும் இறக்கவும்.
பின்னர் பொரித்த ரோர்டியாவினுள் இந்த கறியை அடைத்து அதன் மேல் செடார் சீஸ் தூவி மேலே லெட்டூஸ் இலை தூவவும்.
சுவையான மரக்கறி டாகோ தயார். இதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது தக்காளி கெட்சப், சோஸுடன் சாப்பிடலாம்.


இதில் பாவிக்கப்பட்ட தூள் வகைகளுக்கு பதிலாக கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் டாகோ ஸீஸனிங்கையும் (Taco seasoning) போடலாம்.

மேலும் சில குறிப்புகள்