பனை ஓலை கொழுக்கட்டை

தேதி: October 4, 2007

பரிமாறும் அளவு: 20 கொழுக்கட்டை

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பனை ஓலை - 20 துண்டுகள்
பச்சரிசி மாவு - 1/2 கிலோ
கருப்பட்டி அல்லது வெல்லம் - 400 கிராம்
ஏலக்காய் தூள் - 2 ஸ்பூன்
சுக்கு தூள் - ஒரு ஸ்பூன்
தேங்காய்ப்பூ - 2 கப்
பாசிப்பருப்பு - 100 கிராம்


 

வாணலியில் மாவை சிறிது வறுத்து கொள்ளவும்.
வெல்லத்தில் சிறிது நீர் விட்டு, நன்கு பாகாக காய்ச்சவும். அதை அப்படியே சூட்டோடு மாவில் ஊற்றி கரண்டியால் கிளறவும்.
இதில் சுக்கு தூள், ஏலக்காய் தூள், தேங்காய்ப் பூ ஆகியவற்றை போடவும். பாசிப்பருப்பை வறுத்து கொட்டவும். எல்லாவற்றையும் ஒன்றாக கெட்டியாக கிளறவும்.
பனை ஓலையை ஆறு அங்குல துண்டுகளாக நறுக்கி கழுவவும். சிறிது மாவை கையிலெடுத்து ஒரு பிடி பிடித்து இலையில் வைத்து மூடி சுருட்டி வைக்கவும்.
இப்படியே எல்லாமாவையும் இலையில் வைத்து சுருட்டவும்.
பின்பு சுருட்டிய கொழுக்கட்டைகளை இட்லி பானையில் வைத்து வேக வைக்கவும்.(அரை மணி நேரம்). பின்னர் ஆறவிட்டு எடுக்கவும்.
ஓலையில் ஒட்டாமல் அழகாக வரும். இது 3 நாள் வரை கெடாமல் இருக்கும். மிகவும் சுவையாக இருக்கும்.


இது கன்னியாகுமரி மாவட்டத்தில் முஹரம் மாதத்தில் செய்வார்கள்.
பனைஓலை இல்லாமலும் சும்மா கையால் மாவை பிடித்து பானையில் வைத்து அவித்து எடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்