சொதி

தேதி: October 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முருங்கைகாய் -- 2 என்னம் (3 அங்குலம் அளவு நறுக்கியது)
உருளைக்கிழங்கு -- 3 என்னம் (தோலுடன் சதுர சதுரமாக வெட்டியது)
முட்டைகோஸ் -- 100 கிராம் ( நீள நீளமாக நறுக்கியது)
பாசிபருப்பு -- 1/2 கப் (வறுத்துக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் -- 5 என்னம் (நீளமாக கீறியது)
இஞ்சி -- 2 அங்குலத்துண்டு (தட்டி சாறு எடுக்கவும்)
சின்ன வெங்காயம் -- 25 என்னம் (உரித்து நீளமாக நறுக்கியது)
பூண்டு -- 5 பல் ( ஒரு பூண்டை இரண்டாக கீறிக்கொள்ளவும்)
தேங்காய் -- 1 மூடி
எலுமிச்சை -- 1 என்னம் ( சாறு எடுக்கவும்)
உப்பு -- தே.அ


 

தேங்காயைத்துருவி ஒரு கப் தண்ணீர் சேர்த்து கெட்டிப் பால் ஒரு முறை எடுத்து தனியாகவும் , 2 ,3 வது பாலை ஒன்றாகவும் வைக்கவும்.
வாணலியில் நறுக்கிய வெங்காயத்துடன் எல்லா காய்கறிகளையும் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் பாசிப்பருப்பை போட்டு பச்சை மிளகாய் , பூண்டை சேர்த்து வேகவிடவும்.
பாசிப்பருப்பு மலரும் சமயம் எல்லா கய்கறிகளையும் போட்டு 2,3வதாக எடுத்த பாலை ஊற்றி வேகவிடவும்.
கொதிவரும் சமயம் இஞ்சிசாறு ஊற்றி அடிபிடிக்காதவாறு கிளறி விடவும்.
கொதித்தவுடன் முதல் தேங்காய் பால் விட்டு கொதி வரும் சமயம் இறக்கி கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறுதியாக எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
சொதி ரெடி.


இது சாதம் ,சப்பாத்தி,பூரி, இட்லி,தோசை என எதற்கும் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்