தேவையான பொருட்கள்
- கறி -- 1/2 கிலோ (கொத்துக்கறியாக கொத்தி வாங்கிக் கொண்டால் நல்லது )
- பெரிய வெங்காயம் -- 2 ( நறுக்கியது)
- முட்டை -- 1
- இஞ்சி,பூண்டு விழுது -- 1 டேபிள்ஸ்பூன்
- கார்ன் ஃப்ளார் -- 150 கிராம்
- மஞ்சள்பொடி -- 1/2 ஸ்பூன்
- பச்சரிசிமாவு -- 200 கிராம்
- மிளகுத்தூள் -- 1 டீஸ்பூன்
- சோயா சாஸ் -- 1 ஸ்பூன்
- தக்காளி சாஸ் -- 1ஸ்பூன்
- அஜினோமோட்டோ -- 2 சிட்டிகை
- உப்பு -- தே.அ
- எண்ணைய் -- தே.அ
|
செய்முறை
- கறியை உப்பு,மஞ்சள்தூளுடன் சேர்த்து வேகவிடவும்.
- வாணலியில் எண்ணைய் ஊற்றி இஞ்சி,பூண்டு விழுது சேர்த்துவதக்கவும்.
- அடுத்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- இதனுடன் கறி, சோயா சாஸ்,தக்காளி சாஸ் சேர்த்து சுண்ட வதக்கவேண்டும்.
- சோளமாவு,பச்சரிசி மாவுடன் முட்டை, மிளகுத்தூள் ,அஜினோமோட்டோ சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- தோசைக்கல்லில் சிறு சிறு தோசைகளாக ஊற்றி 10 லிருந்து 15 தோசைகள் ஊற்றிக்கொள்ளவும்.
- ஒவ்வொரு தோசைக்குள்ளும் வதக்கிய காய்கறி கலவைகளை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து ரோல் செய்து இரண்டு ஓரங்களையும் மாவு கொண்டு ஒட்டவும்
- இந்த ரோல்களை எண்ணையில் போட்டு பொரித்தெடுத்து உண்ணலாம்.
- மட்டம் ஸ்ப்ரிங் ரோல் ரெடி
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
45 நிமிடம் |
55 நிமிடம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
5 நிமிடங்கள் 7 நொடிகள் முன்பு -
10 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 19 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 36 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 42 நொடிகள் முன்பு -
42 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
48 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -