சைவ கொத்து சப்பாத்தி

தேதி: October 5, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சப்பாத்தி -- 4 என்னம் ( மிகவும் பொடித்தாக நறுக்கிக் கொள்ளவும்)
மிளகுத்தூள் -- 1 டீஸ்பூன்
சீரகத்தூள் -- 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -- 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -- 1 டீஸ்பூன்
உப்பு -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு (மிகவும் பொடிதாக நறுக்கியது)
கடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் -- 1 1/2 என்னம் (மிகவும் பொடிதாக நறுக்கியது)
தக்காளி -- 1 1/2 என்னம் (மிகவும் பொடிதாக நறுக்கியது)


 

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.
வெங்காயத்தை போட்டு 1 நிமிடம் வதக்கி பின் தக்காளி போடவும்.
நன்றாக வதக்கி பேஸ்ட் போல் ஆகும் போது, சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் , மிளகாய் தூள் ஆகியவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
நறுக்கிய சப்பாத்தியில் தண்ணீரை ( 2 கை அளவு ) தெளித்து எல்லா சப்பாத்தி பீஸீன் மீது படும் படி கலந்து விடவும். ( இது சப்பாத்தி சாப்பிடும் போது மெதுவாக இருக்க உதவும்)
வாணாலியில் உள்ள கலவையிலும் ஒரு கை தண்ணீர் தெளித்து நறுக்கிய சப்பாத்தியை போடவும்.
உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கி சூடாக பறிமாறவும்.(ஆறினால் நன்றாக இருக்காது).
யம்மி யம்மி கொத்து சப்பாத்தி ரெடி.


எப்படியும் முதல் நாள் செய்து மீந்து போனவைகளுக்குத் தான் நான் கூறிய இந்தமுறை சரியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்