சிந்தி பாஜி

தேதி: October 6, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பசலைக்கீரை -- 1 கட்டு ( சுத்தம் செய்து கையாலே கிள்ளி வைக்கவும்)
வெந்தயக் கீரை -- 1 கட்டு ( சுத்தம் செய்து தனியாக வைக்கவும்)
கத்தரிக்காய் -- 2 என்னம் (நீளநீளமாக நறுக்கவும்)
கேரட் -- 1 என்னம் (சிறியதாக இருந்தால்)இல்லை பாதி போதும்) பொடிதாக வெட்டிக் கொள்ளவும்
உருளைக் கிழங்கு -- 1 என்னம் ( தோலுடன் சதுரசதுரமாக வெட்டிக் கொள்ளவும்)
இஞ்சி -- 1 அங்குலம்
பூண்டு -- 3 என்னம் ( தோலுரித்து பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் -- 1 கப் (நறுக்கியது )
கடலை பருப்பு -- 1/2 கப் ( வேகவைத்தது)
பச்சை மிளகாய் -- 3 என்னம் ( நீளமாக கீறியது)
தக்காளி -- 1 என்னம் (நறுக்கியது)
நெய் -- 4 ஸ்பூன்
உப்பு -- ருசிக்கு தகுந்தவாறு


 

பசலைக் கீரையை 3 நிமிடம் வேகவைக்கவும். ஆறவைத்து அரைக்கவும்.வாணலியில் நெய் ஊற்றி பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கி வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் வெந்தயக்கீரையை சேர்க்கவும்.
1 நிமிடத்திற்குப் பிறகு இஞ்சி,பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் கேரட்,கத்தரிக்காய்,உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் பாலக்கீரை,கடலை பருப்பு சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும்.
எல்லாம் நன்றாக கலந்து 15 நிமிடம் சிம்மில் வைத்து சமைக்கவும்.
சிந்தி பாஜி ரெடி.


சுவையான சத்தான சிந்தி பாஜி அனைவருக்கும் பிடிக்கும்.
காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்