கறிவேப்பிலை துவையல்

தேதி: October 6, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

இளசான கறிவேப்பிலை - 2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
புளி - சுண்டைக்காய் அளவு.
உப்பு - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்


 

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கொத்தமல்லி விதை போட்டு வறுக்கவும்.
அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அதில் போட்டு லேசாகப் பிரட்டவும்.
அத்துடன் உப்பு, புளி, பெருங்காயத்தூள் சேர்த்து அரைக்கவும்.
புளியை 5 நிமிடம் ஊற வைத்தால் ஈஸியாக அரைக்க முடியும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

I have tried this recipe today and it came out very very well and I also added some coconut to this recipe under the advice of my mom and it added the taste to a greater extent. Thank you for this recipe.

இதுவும் கடந்து போகும்.

இன்று செய்தது கருவேப்பிலைத் துவையல், கொத்தமல்லி துவையல், புதினா துவையல். தோசைக்கு நல்ல பொருத்தம்.

அன்புடன்

சீதாலஷ்மி