கறிவேப்பிலை பொடி - 3

தேதி: October 6, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

இளசான கறிவேப்பிலை - 2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
புளி - சுண்டைக்காய் அளவு.
உப்பு - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்


 

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி,கொத்தமல்லி விதை போட்டு வறுக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அதில் போட்டு லேசாகப் பிரட்டவும்.
அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும்.
காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மாமி, இந்தப் பொடி வெள்ளியன்று செய்தேன். என்னவர், விரும்பிச் சாப்பிட்டார். நான் அரைத்த அன்று சாப்பிட்டுப் பார்த்ததோடு சரி, அவருக்குப் பிடித்திருந்ததால் எனக்குச் சாப்பிடவே மனம் வரவில்லை. நேற்று உளுத்தம் பொடி அரைத்த பின்பு தான் இந்தப்பொடியை விட்டார்.
நன்றிகள் பல...............

அன்புடன்:-)..........
உத்தமி:-)

உத்தமி நன்றி. பேருக்கு ஏற்றாற்போல் இருக்கிறீர்கள். நீங்களும் சாப்பிட்டு உடம்பை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள். சக்தி இல்லையேல் சிவன் இல்லை.
அன்புடன்
ஜெயந்தி மாமி