கடாரங்காய் இனிப்பு ஊறுகாய்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய மஞ்சள் நிற கடாரங்காய் - 3
மிளகாய்த்தூள் - 6 மேசைக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறு அரைநெல்லிக்காய் அளவு
வெல்லம் - 3 கப்
நல்லெண்ணெய் - ஒன்றரை கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி


 

கடாரங்காயை கழுவி சிறு துண்டுகளாக செய்து அதில் உள்ள விதைகளை சுத்தமாக எடுத்து விடவும்.
வாய் அகலமாக உள்ள வாணலியை அடுப்பில் வைத்து பாதி நல்லெண்ணையை அதில் ஊற்றி சூடாக்கவும்.
கடாரங்காயை எண்ணெயில் போட்டு தீயை மிதமாக வைத்து வதக்கவும்.
காய்கள் வெந்து, குழைந்ததும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் சிறிது சிறிதாக எண்ணெயையும் விட்டு வதக்கவும்.
வாணலியில் எண்ணெயை விட்டு வெந்தயத்தையும் பெருங்காயத்தையும் வறுத்துப் பொடி செய்து வைக்கவும்.
காய்கள் நன்றாக வெந்தவுடன் உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் வெல்லத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
காய்கள் வதங்கி எண்ணை மிதக்கும் போது பொடியைத்தூவிக் கலந்து இறக்கவும்.
கடாரங்காய்களின் புளிப்புத்தன்மைக்கு ஏற்ப மிளகாய்த்தூளை கூட்டி, குரைத்து கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்