மீன் புட்டு

தேதி: October 7, 2007

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முள்ளில்லாத மீன் - 500 கிராம்,
துருவிய தேங்காய் - 1 மூடி,
வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 1,
இஞ்சி - சிறு துண்டு,
பூண்டு - 5 பல்,
மிளகு - 20,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கொத்தமல்லி தழை - 2 மேஜைக்கரண்டி,
எலுமிச்சம் பழ சாறு - 3 ஸ்பூன்,
எண்ணெய் - 2 கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

மீனை சுத்தப்படுத்தி, தண்ணீரில் வேக வைத்து எடுக்கவும்(ஆவியிலும் வேகவைக்கலாம்).
வெந்த பின்பு, உதிர்த்து முள் நீக்கி (இருந்தால்) உதிர்த்து, சிறிது மஞ்சள் தூள் கலந்து பிசிறி வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிளகை தூளாக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கியவற்றைப் போட்டு வதக்கவும்.
உதிர்த்து வைத்த மீனையும், மிளகு,உப்புத்தூளையும் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கிய பின், தேங்காய் துருவலை தூவி, எலுமிச்சம் பழசாறு பிழிந்து இறக்கி கொ.தழை தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்