மெக்சிகன் சாலட்

image

வழங்கியவர் : Jaleela Banu

தேதி : ஞாயிறு, 07/10/2007 - 10:54

ஆயத்த நேரம் : ஐந்து நிமிடம்

சமைக்கும் நேரம் : இருபது நிமிடம்

பரிமாறும் அளவு : ஆறு நபர்களுக்கு

5
1 vote
Your rating: None
 

 

  • காராமணி - அரை கப் (முளைக்கட்டியது)
  • பச்ச பயறு - அரை கப் (முளைக்கட்டியது)
  • ராஜ்மா - அரை கப்
  • சின்ன வெங்காயம் - அரை கப் (பொடியாக நறுக்கியது)
  • உருளைக்கிழங்கு - அரை கப் (வேக வைத்தது)
  • லெட்யூஸ் லீஃப் - அரை கப் (பொடியாக நறுக்கியது)
  • பேஸ்டாக்கி கொள்ள:
  • டொமேடோ சாஸ் - மூன்று டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - மூன்று டேபிள் ஸ்பூன்
  • மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
  • சர்க்கரை - அரை டீஸ்பூன்
  • உப்பு - அரை டீஸ்பூன்

 

  • முதல் நாள் இரவே காராமணி, பச்ச பயறு ஊற வைத்து முளைக்கட்டி எடுத்து வைத்து கொள்ளவும். ராஜ்மாவையும் ஊற வைக்கவும்.
  • மூன்று பயிரையும் பசையாகாமல் உதிரியாக வேக வைத்து கொள்ள வேண்டும்.
  • வெந்த பயறில் உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம், தக்காளி, லெட்டியூஸ் எல்லாவற்றையும் போட்டு மிக்ஸ் பண்ண வேண்டும்.
  • இப்போது டொமேடோ சாஸில், எலுமிச்சை, உப்பு, மிளகு தூள், சர்க்கரை கலவையை பேஸ்டாக்கி பயறு கலவையில் போட்டு நன்றாக மிக்ஸ் பண்ணவேண்டும்.

Note:

கொஞ்ச சாலடுக்காக முளை கட்ட முடியாது ஆகையால் தனித்தனியாக ஒரு ஒரு கப் அளவுக்கு முளை கட்டி வேக வைத்து கொண்டால் தேவைக்கு எடுத்து கொண்டு மீதியை ஒரு நாள் சுண்டலும் செய்யலாம் (அ) இதே சாலடும் செய்யலாம்.இல்லை பொரியாலிலும் சேர்க்கலம்.