தேவையானப் பொருட்கள்
- காராமணி - அரை கப் (முளைக்கட்டியது)
- பச்ச பயறு - அரை கப் (முளை கட்டியது)
- ராஜ்மா - அரை கப்
- சின்ன வெங்காயம் - அரை கப் (பொடியாக நறுக்கியது)
- உருளை கிழங்கு - அரை கப் (வேக வைத்தது)
- லெட்யுஸ் லிஃப் - அரை கப் (பொடியாக நறுக்கியது)
- பேஸ்டாக்கி கொள்ள
- **********************
- டொமேடோ சாஸ் - மூன்று டேபுள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - மூன்று டேபுள் ஸ்பூன்
- மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
- சர்க்கரை - அரை டீஸ்பூன்
- உப்பு - அரை டீஸ்பூன்
செய்முறை
- முதல் நாள் இரவே கராமணி, பச்ச பயறு ஊற வைத்து முளைக் கட்டி எடுத்து வைத்து கொள்ள்வும்.
- ரஜ்மாவையும் ஊற வைக்கவும்.
- மூன்று பயிரையும் பசையாகாமல் உதிரியாக வேகவைத்து கொள்ள வேண்டும்.
- வெந்த பயறில் உருளை கிழங்கு ,சின்ன வெங்காயம், தக்காளி,லெட்டியுஸ் எல்லாவற்றையும் மிக்ஸ் பண்ண வேண்டும்.
- இப்போது டொமேடோ சாஸில்,எலுமிச்சை,உப்பு, மிலகு தூள், சர்க்கரை கலவையை பேஸ்டாக்கி
- பயறு கலவையில் போட்டு நன்றாக மிக்ஸ் பண்ணவேண்டும்.
-
-
-
-
குறிப்பு
கொஞ்ச சலடுக்காக முளை கட்ட முடியாது ஆகையால் தனித்தனியாக ஒரு ஒரு கப் அளவுக்கு முளை கட்டி வேக வைத்து கொண்டால் தேவைக்கு எடுத்து கொண்டு மீதியை ஒரு நாள் சுண்டலும் செய்யலாம் (அ) இதே சாலடும் செய்யலாம்.இல்லை பொரியாலிலும் சேர்க்கலம்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
ஆறு நபர்களுக்கு |
ஐந்து நிமிடம் |
இருபது நிமிடம் |