வாழைப்பூ கூட்டு

தேதி: October 7, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

வாழைப்பூ - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு
பூண்டு - இரண்டு தட்டியது
உளுத்தம் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது


 

துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் மலர வேக வைக்கவும்.
எண்ணெயை காய வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி, உப்பு, பச்சை மிளகாய் கீறி போட்டு வாழைப்பூவை சேர்த்து வதக்கவும். கடைசியில் தேங்காய் பூ, வெந்த பருப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


இந்த கூட்டு மாதம் ஒரு முறை சேர்த்துக் கொண்டால் வயற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது.
வாழைப்பூவை இதழாக பிரித்து உள்ளே உள்ள பூவை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா நான் ஒருமுறை வாழை பூ கூட்டு செய்யும்போது கசப்பாக இருந்தது காரணம் தெரியுமா
sohara rizwana

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஜலீலா,வாழைப்பூ கூட்டு நாங்கள் இப்படித்தான் சமைப்போம்.பூண்டு போடுவதில்லை.அடுத்த முறை உங்கள் குறிப்பில் உள்ள படி பூண்டு சேர்க்கிகின்றேன்.இதில் மாசிப்பொடி சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.
ஷொஹ்ரா ரிஸ்வானா, நறுக்கிய வாழைப்பூவில் மோர் ,கல் உப்பு விட்டு நன்கு தேய்த்து கழுகினால் கசப்புத்தன்மை குறையும்.பூ வாங்கும் பொழுது ரஸ்தாலிப்பூ எனக் கேட்டு வாங்குங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிக்கா, ரிஜ்வானா

கசப்பு தன்மைக்கு மோரில் ஊரவைத்து பிழிந்து எடுப்பார்கள் அதற்கு தான் பருப்பு சேர்த்து செய்வதால் கசப்பு தெரியாது.
இல்லை வடை செய்து சாப்பிடலாம்.
கேஸ் டிரபுள் வராம இருக்க பூண்டு, (அ) இஞ்சி பூண்டு, (அ) சோம்பு (அ) பெருங்காயம் சேர்க்கனும் அவரவர் விருப்பம், சமைக்கும் பொருளை பொருத்தும் இருக்கு.

ஜலீலா

Jaleelakamal