ஸ்டீம்டு டோங்ரா

தேதி: October 7, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெந்தயக் கீரை -- 1 கட்டு (சுத்தம் செய்து பொடிதாக நறுக்கியது)
முழுபயத்தம் பயிறு -- 1/4 கிலோ
கசகசா -- 50 கிராம்
மிளகு -- 3 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் -- 4 (பெரியது)
பூண்டு -- 10 என்னம்
தேங்காய் பால் -- 1 கப்
வெங்காயம் -- 1/4 கிலோ (நறுக்கியது)
எண்ணைய் -- 1 கரண்டி
உப்பு -- தே.அ
தாளிக்க :
கடுகு -- 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
பெருங்காயம் -- 1 டீஸ்பூன்
தொட்டுக் கொள்ள நெல்லி ரய்தா செய்ய பொருட்கள்::
புளிப்பு இல்லா கெட்டித்தயிர் -- 1/2 லிட்டர்
பச்சை நெல்லிக்காய் விழுது -- 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது -- 1 டீஸ்பூன்
மெல்லியதாக சீவிய கேரட் -- 2 டீஸ்பூன்
பச்சை கொத்தமல்லி -- 1/2 கட்டு ( பொடிதாக நறுக்கியது)
உப்பு -- தே.அ


 

முழுபயத்தம்பருப்பை முதல்நாள் காலையிலேயே ஊறவைத்து மாலையில் மெல்லிய துணியில் கொட்டி முடிச்சு போட்டு தொங்கவிடவேண்டும். காலையில் முளைவிடும்.
வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அத்துடன் முளைகட்டிய பயிறு, கசகசா, உரித்த பூண்டு, நறுக்கிய வெங்காயம், மிளகு , மிளகாய் , உப்பு சேர்த்து தேங்காய் பால் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , உளுத்தம்பருப்பு , பெருங்காயம் சேர்த்து வாசனை வந்ததும் அரைத்த மாவைக் கொட்டி கைவிடாமல் கிளறவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறி அரைவேக்காடு வெந்தால் போதும்.
கறிவேப்பிலை தூவி வெந்தமாவை இறக்கவும்.
மாவு கொழகொழ என்று இருக்காமல் சற்று கெட்டியாக இருக்கவேண்டும்.
மாவு நன்கு ஆறியதும் சிறு சிறு உருண்டை போல உருட்டி ஓட்டலில் உள்ளதைப் போல் சிறு இட்லி அளவிற்கு செய்து நடுவில் கட்டை விரலால் ஓட்டை செய்து கொழுக்கட்டையைப் போல் ஆவியில் வேகவிடுவது போல இட்லி தட்டில் வாழை இலையை பரப்பி அதன் மேல் உருண்டைகளை வைத்து ஆவியில் வேகவிடவும்.
உருண்டைகளைக் கையால் தொட்டால் ஒட்டக்கூடாது.
நன்கு வெந்ததும் சற்று ஆறிய பிறகு தாம்பாளத்தில் கொட்டினால் இந்த ஸ்டீம்டு டோங்ரா ரெடி.
நெல்லி ராய்தா:
புளிப்பில்லாத கெட்டித்தயிரில் பச்சையாக அரைத்த நெல்லிக்காய் விழுது , பச்சைமிளகாய்விழுது , உப்பு, பெருங்காயம், காரட் துருவல், கொத்தமல்லி தூவி செய்து வைத்த ஸ்டீம்டு டோங்ராவை 2 நிமிடம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த ஸ்டீம்டு டோங்ரா மிகவும் சுவையாக இருக்கும்.

ஸ்வீட் ரய்தா:
பால்,தேன்,பேரிச்சை விழுது,பனங்கல்கண்டு கலந்த ரோஜா இதழ் (அ) ரோஸ் எசன்ஸ் விட்டு கீர் போல் செய்து ஸ்டீம்டு டோங்ராவை ஊற வைத்து சாப்பிடலாம்.


ஸ்டீம்டு டோங்ராவை வெறுமனே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

I tried this recipe it came out excellent

Thanks for ur comments.