மீன் பிரியாணி

தேதி: October 8, 2007

பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் பொரிப்பதற்கு:
அதிகம் முள்ளில்லாத மீன் - ஒரு கிலோ (வஞ்சிரா)
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
பிரியாணிக்கு வதக்குவதற்கு:
பசு நெய் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - அரை கப்
பட்டை, கிராம்பு, ஏலம் - சிறிதளவு (கிராம்பு 5 க்கு அதிகம் வேண்டாம்)
நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கிலோ
நறுக்கிய பெரிய வெங்காயம் - 4-5
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
தக்காளி - 4
பொடியாக நறுக்கிய மல்லி இலை - ஒரு கட்டு
பொடியாக நறுக்கிய புதினா - ஒரு கட்டு
கரம் மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி
ஜாதிப்பத்திரி பொடி - கால் தேக்கரண்டி
சிவப்பு கலர் - கால் தேக்கரண்டிக்கும் குறைவு
தயிர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம்பழச்சாறு - கால் கப்
பாசுமதி அரிசி - 4 டீ கப் (தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறியது)
தயிர் சட்னிக்கு கீழ்காணும்வற்றை ஒன்றாக கலக்கவும்:
தயிர் - 3/4 கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய தக்காளி - கால்
பொடியாக நறுக்கிய மல்லி, புதினா - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
உப்பு - அரை தேக்கரண்டி


 

மீனில் 6 துண்டங்களை மட்டும் மாற்றி விட்டு அதன் முள்ளை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்
மீதமுள்ள மீனில் மசாலாவை போட்டு ஒரு மணி நேரம் கழித்து எண்ணெயில் முறுகாமல் முக்கால் பாகம் வேகும் அளவு பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.
ஒரு பரந்த நாண்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை ஒரு 5 நிமிடம் வதக்கவும்.
பிறகு தக்காளி, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்து மேலும் ஒரு 20 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்ப்பதால் தக்காளி சீக்கிரத்தில் மசிந்து விடும்.
அதனுடன் கரம் மசாலா பொடி, ஜாதிப்பத்திரி பொடி, நறுக்கி வைத்த முள் நீக்கிய மீன், கலர் சேர்த்து கிளறவும்.
பிறகு ஒரு கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் விகிதம் 9 கப் தண்ணீர் ஊற்றி தயிரை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் ஊறவைத்த அரிசியை நீர் வடித்து கொட்டவும். நல்ல தீயில் 5 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.
தண்ணீர் குறைந்து வரும்பொழுது எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். குறைந்த தீயில் 45 நிமிடம் மூடி வைக்கவும்.
10 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறவும். 45 நிமிடத்தில் அரிசி வெந்திருக்கும். இதனுடன் பொரித்த மீனை சேர்த்து உடையாமல் இடையிடையே சேர்த்து ஒரே ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
அருமையான மீன் பிரியாணி தயார். இதனுடன் தயிர் சட்னியும் சேர்த்து பரிமாற சுவையோ சுவை.


black pomfret வாங்கி செய்யும்பொழுது பிரியாணியும் சரி இனி வேறென்ன ஆனாலும் சரி கண்டிப்பாக தோல் நீக்கி வாங்குங்கள். இந்த மீன் எவ்வளவு ருசியோ அவ்வளவுக்கவ்வளவு தோல் ருசியை நாசமாக்கிவிடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Dear thalika madam,
By reading your recipe itself,it's inspiring me to cook this biriyani and i like to try this soon as fish biriyani is my husband's favourite.Since i am very new to cooking,i have doubts in this recipe.Please clearify madam.
For your fish biriyani recipe,
1.Can you plz give me the measurement of bigonions,tomato,curd and rice in grams.
2.Can you please give me the oil and lemon juice in ml measurement.
3.In 1kg fish,about how much grams of fish i can use for marination and in that only i am going to use 1/2 spoon chillipowder,1/2 spoon turmeric powder and 1 spoon ginger garlic paste.

I am very eagerly waiting for your reply and i hope i will get it soon.Thanks in advance.

நிருப்பமா எனக்கு கிராம் அளவில் சொல்லத் தெரியவில்லை அதனால் உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன்.

உங்கள் ரெண்டு பேருக்கு அதும் முதல் முறை என்பதால் கொஞ்சமாக ஒரு நேரம் மட்டும் சாப்பிடும் அளவு தருகிறேன்..

தரமான பாஸ்மதி அரிசி - 2 டீ கப் (தண்ணீரில் 30 நிமிடம் ஊறியது(டில்டா அரிசி நல்ல இருக்கும்)

நெய் - 4 ஸ்பூன்
எண்ணை - 4 ஸ்பூன்
பட்டை - 1 விரல் நீள துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 5
பெரிய வெங்காயம் - 3 நீளமாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 3
இஞ்சி&பூண்டு விழுது - 2 ஸ்பூன்
1 இன்ச் துண்டு இஞ்சியும்,6 பல் பூண்டும் சேர்த்து அரைத்த விழுது
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
மல்லி இலை - பொடியாக நறுக்கியது 1 கைப்பிடி அளவு
புதினா இலை நறுக்கியது - 1 கைப்பிடி அளவு
தயிர் - 1/4 டீ கப்(இல்லையென்றால் தவிர்த்து விடலாம்)

மீன் - 1/2 கிலோ சுமார் (8 துண்டு மீன்)

அதில் 5 துண்டு மீனை மஞ்சள் தூள்,மிளகு,இஞ்சி பூன்டு சேர்த்து உப்பு சேர்த்து மொருகாமல் பொரித்து வைக்கவும்.
மீதமுள்ள 3 துண்டுகளை முள் நீக்கி சாதத்துடன் கலக்க தனியே வைக்கவும்.

இப்பொழுது மேலே குறிப்பிட்ட படி தயாரிக்கவும்.
எண்ணை,நெய்யின் அளவை எப்படி சொல்வட்கென்று தெரியவில்லை ஆனால் வெங்காயத்தை இட்ட்டால் வெங்காயம் லேசாக மூழ்கும் அளவு இருக்க வேண்டும்..எண்ணை சேர்க்காமல் நெய் மட்டும் சேர்த்து கூட செய்யலாம்.
எலுமிச்சை நீர் ஒரு சிரிய எலுமிச்சையின் பாதி பிழிந்த நீர் போதும்.
இப்பொழுது தைரியமாக செய்யுங்கள்.

தளிகா:-)

Dear thalika madam,

Thanks for the clear reply.I will do it and let you know the feedback.

Nirupama

தளிகா உங்கள் மீன் பிறியாணி படித்தவுடன் செய்யவேண்டும் என்ற ஆசையில் சனிக்கிழமை மீனைத் தேடினேன் பொருத்தமான மீன் fridge ல் இருக்கவில்லை. அடுத்த கிழமை செய்யப்போகிறேன் செய்துவிட்டுச் சொல்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இதே முறையில் செம்மீன்/இறால் கொண்டு செய்தாலும் சூப்பராகவும் இருக்கும் வேலை கம்மி..1 கிலோ இறால் போடுங்கள்..கொதித்த மசாலா தண்ணீரில் அரிசியும் மீனும் இட்டு செய்யுங்கள்..இதற்கு அதிகம் வேக தேவையே இல்லை..அதிரா செய்யுங்க செய்யுங்க

இதே முறையில் செம்மீன்/இறால் கொண்டு செய்தாலும் சூப்பராகவும் இருக்கும் வேலை கம்மி..1 கிலோ இறால் போடுங்கள்..கொதித்த மசாலா தண்ணீரில் அரிசியும் மீனும் இட்டு செய்யுங்கள்..இதற்கு அதிகம் வேக தேவையே இல்லை..அதிரா செய்யுங்க செய்யுங்க

இதே முறையில் செம்மீன்/இறால் கொண்டு செய்தாலும் சூப்பராகவும் இருக்கும் வேலை கம்மி..1 கிலோ இறால் போடுங்கள்..கொதித்த மசாலா தண்ணீரில் அரிசியும் மீனும் இட்டு செய்யுங்கள்..இதற்கு அதிகம் வேக தேவையே இல்லை..அதிரா செய்யுங்க செய்யுங்க

தளிகா மீன் பிறியாணி செய்திட்டேன் இன்னும் சாப்பிடவில்லை. மிகவும் சுவை தளிகா. நான் மீன் உடைத்து போட்டால் மணக்குமே தெரியாது என்று பயந்தபடியேதான் செய்தேன். எந்த மணமும் இல்லை. நல்ல சுவை. பொரியலுடன் சேர்த்துப் பார்க்கிறபோது ஒரு அழகாகத்தான் இருக்கு. பத்திரி பொடி, கலர் இரண்டும் சேர்க்கவில்லை. எனக்கு தெரியாது-பத்திரி பொடி. king fishஇல் தான் செய்தேன். றாலில் நிறைய தடவை செய்திருக்கிறேன் அதனால்தான் பொறுத்திருந்தேன் மீனில் செய்வதற்காக.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நலமா? மகள் நலமா? முதன்முறையாக உங்களிடம் கதைக்கிறேன். மீன் பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது.குறிப்பிற்கு நன்றி.

மகள் நலமே..எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..மனோஹரி அவர்கள் சொல்வது போல சுவையாக நீங்கள் சமைப்பது தான் பெரிய விஷயம்...குறிப்பு யார் வேனுமென்றாலும் கொடுக்கலாம்..ஆனால் நாம் எதிர்பார்த்த அதே சுவையில் மற்றவர்ரும் செய்தால் அது தான் வெற்றி..மிக்க நன்றி.
அதிரா இன்னும் சுவைக்கவில்லையா?

நான் சொன்னேனே நல்ல சுவை என்று. சாப்பிடுவதற்கு முன் பொறுக்கமுடியாமல் ஓடி வந்து பதில் போட்டேன். அதுதான் இன்னும் சாப்பிடவில்லை என்றேன். மிகவும் நல்ல சுவை. இப்போதுள்ள முறை அப்போதே இருந்திருந்தால், நான் உடனேயே படமெடுத்துப் போட்டிருப்பேன். சுவையுடன் பார்ப்பதற்கும் மிக அழகாக இருந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மீன் பிரியாணி மீண்டும் செய்தேன் .அருமையாக இருந்தது.குறிப்பில் 1கப் அரிசிக்கு 1.5 கப் வீதம் 9 கப் நீர் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். உங்கள் கணக்கின் படி 4 கப் அரிசிக்கு 6கப் நீர் தானே தேவைப்படும் .நான் இந்த அளவின் படி தான் செய்தேன். முதல் முறையே சொல்ல நினைத்தேன்.மறந்தே போய் விட்டது. இப்போது மீண்டும் செய்கையில் நினைவு வந்தது.பிழையாக எண்ணி விடாதீர்கள். தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்.

மிக்க சந்தோஷம் சுகு..ரொம்ப நன்றி..பிழையை சுட்டிக் காட்டுவது நல்ல விஷயமாச்சே இல்லாட்டா என்னுடைய கணக்குத் திறமை உலகமே புரிந்து கொள்ளுமே.ஹ்ம்ம் என் கணக்கு டீச்சட் மட்டும் இதைப் படிச்சா நீ இன்னும் திருந்தலியான்னு நெனச்சிருப்பாங்க.
தப்பை தப்புன்னு சொல்லுவது சரி.சரியை தப்புன்னு சொல்லுவது தான் தப்பு...புரியல??புஹஹஹஹா