தம் காலிஃப்ளவர் வறுவல்

தேதி: October 9, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காலிஃப்ளவர் - முழு பூ ஒன்று
எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
வினிகர் - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - நான்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசலா தூள் - அரை டீஸ்பூன்


 

காலிஃப்ளவர் பூக்களை தனித் தனியாக பிரித்து எடுத்து வெந்நீரில் போட்டு ஒரு டீஸ்பூன் வினிகர் விட்டு அலசி எடுக்கவும்.
எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி போடவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும் இரண்டு நிமிடம் வதக்கவும்.
அதில் காலிஃப்ளவரை போட்டு நன்றாக கிளறி மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்பு போட்டு வதக்கி ஐந்து நிமிடம் தீயை சிம்மில் வைத்து மூடி போட்டு தம்மில் விடவும்.
காலிஃப்ளவர் வெந்ததும் கடைசியில் கரம் மசாலா தூள் தூவி இறக்கவும்.


சப்பாத்திகு ஏற்ற சைட் டிஷ்

மேலும் சில குறிப்புகள்