இறால் முட்டை குதும்பு

தேதி: October 9, 2007

பரிமாறும் அளவு: மூன்று நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய இறால் - பத்து
முட்டை - இரண்டு
வெங்காயம் - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன்
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பட்டை - ஒரு சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது


 

இறாலை சுத்தம் செய்து நடுவில் மேலும், கீழும் உள்ள அழுக்கை எடுத்து கழுவி தனியாக வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து பட்டை, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி பச்சை மிளகாய் ஒடித்து போட்டு தக்காளியை துண்டுகளாக்கி சேர்க்கவும். இரண்டு நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.
பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுத்தம் செய்து வைத்திருக்கும் இறாலை போட்டு ஒரு கிளறு கிளறி மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்.
முட்டையில் எலுமிச்சை சாறு பிழிந்து நல்ல அடித்து வெந்து கொண்டிருக்கும் இறாலின் மீது பரவலாக ஊற்றவும். ஊற்றி மூடி போட்டு சிம்மில் வைத்து வேக விடவும்.
இரண்டு நிமிடம் கழித்து தோசை திருப்புவது போல் முட்டையோடு சேர்ந்து இறலை திருப்பி விட்டு மறுபடியும் மூடிபோட்டு சிம்மில் வைத்து வேக விடவும்.
வெந்ததும் நல்ல ஒரு கிளறு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.


சாதம், தோசை, ரொட்டிக்கு ஏற்ற சைட் டிஷ்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இறால் உடன் முட்டை என்பது மிகவும் நன்றாக இருந்தது. எனது மனைவிக்கு இறால் சப்பிடுவடு பிடிக்காது, எனக்கு இறால் மிகவும் பிடித்த உணவு. இந்த குறிப்பில் உள்ளது போல செய்த பின் அவளுக்கு மிகவும் பிடித்து, எனக்கும் தான். மிகவும் அற்புதமான குறிப்பு... மிக்க நன்றி.

இறால் உடன் முட்டை என்பது மிகவும் நன்றாக இருந்தது. எனது மனைவிக்கு இறால் சப்பிடுவடு பிடிக்காது, எனக்கு இறால் மிகவும் பிடித்த உணவு. இந்த குறிப்பில் உள்ளது போல செய்த பின் அவளுக்கு மிகவும் பிடித்து, எனக்கும் தான். மிகவும் அற்புதமான குறிப்பு... மிக்க நன்றி.

ஹலோ சரவணன்

முட்டை குதும்பு செய்து பார்த்து அதுவும் இறாலே சாப்பிடாத உங்க மனைவிக்கு பிடித்திருந்தது என்றீர்கள் கேட்கும் போதே ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

இந்த குதும்புக்கு பரோட்டா மிக அருமையாக இருக்கும்.
சின்ன வயதில் என் சித்தி எனக்கு செய்து கொடுத்தார்கள் அந்த டேஸ்ட் இன்னும் மறக்க முடியாது. இதுக்கேற்ற பரோட்டாவை குறிப்பி கொடுக்கிறேன் அடுத்த முறை செய்து பாருங்கள்.

ஜலீலா

Jaleelakamal

அன்புடைய ஜலீலா அவர்களுக்கு,இன்று இந்த இறால் முட்டை குதும்பை செய்து பார்த்தேன்.எங்கள் எல்லோர்க்கும் பிடித்து போய்விட்டது.இந்த குறிப்புக்கு நன்றி.

~AnuPandian

Be the best of what you are and the Best will come to you :)

சகோதரி அனு இறால் முட்டை குதும்பு செய்பார்த்தமைக்கு மிக்கநன்றி,இதற்கு சூப்பர் காம்பினேஷன், பரோட்டா.
ஜலீலா

Jaleelakamal

நேற்று உங்கள் இறால் முட்டை குதும்பு செய்தேன், ரொம்ப அருமையாக இருந்தது. மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)