ஷெஸ்வான் சிக்கன்

தேதி: October 9, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 1/2 கிலோ
வினிகர் - 2 ஸ்பூன்
சோயா சாஸ் - 3 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
சிகப்பு நிற மிளகாய்(மிகவும் காரமானது) - ஒன்று (பொடியாக நறுக்கியது)
ஸ்பிரிங் ஆனியன்(வெங்காயத் தாள்) பொடியாக நறுக்கியது - 3 ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சீனி - ஒரு ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்


 

சிக்கனை கழுவி சுத்தம் செய்துக் கொண்டு அதில் கார்ன்ஃப்ளார், உப்பு 1/8 ஸ்பூன் சேர்த்து சிக்கன் முழுதும் நன்றாக ஒட்டும் அளவு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சிக்கனைப் போட்டு லேசான பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.
அதே எண்ணெயில் நறுக்கிய பூண்டைப் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கவும். அதில் சிக்கன், வினிகர், சீனி, உப்பு, சோயா சாஸ், தண்ணீர் சேர்த்துக் கிண்டி ஒரு தட்டுப் போட்டு மூடி 3 நிமிடம் வேக வைக்கவும்.
தண்ணீர் வற்றி சிக்கன் நன்றாக வெந்திருக்கும்.
இப்போது வெங்காயத்தாள், மிளகாய் சேர்த்து நன்றாக 2 நிமிடம் கிளறி இறக்கவும்.


சிகப்பு நிற மிளகாய் கிடைக்காவிட்டால் பச்சை மிளகாய் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த ஷெஸ்வான் சிக்கனின் படம்

<img src="files/pictures/aa341.jpg" alt="picture" />