உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

தாய்லாந்து சிக்கன் வெஜிடபிள் ஸ்டிர் ஃபிரை

 


தேவையானப் பொருட்கள்

  • எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 1/4 கிலோ
  • பிரொக்கோலி அல்லது காலிபிளவர் - 1 கப் (இரண்டும் கிடைத்தால் கலந்து எடுத்துக் கொள்ளவும்)
  • மஷ்ரூம் (காளான்) - 1 கப்
  • ஸ்ப்ரிங் ஆனியன்( வெங்காயத்தாள்) - 3 (துண்டுகளாக்கவும்)
  • உப்பு- 1/4 ஸ்பூன் அல்லது பிஷ் சாஸ் - 1 ஸ்பூன்
  • சோயா சாஸ் - 2 ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 1ஸ்பூன்
  • சன்பிளவர் அல்லது வெஜிடபிள் எண்ணெய் - 1 மேஜைக் கரண்டி
  • வினிகர் - 1 ஸ்பூன்
  • துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்
  • பொடி செய்த நிலக்கடலை(Pea Nut) - 1ஸ்பூன்
  • கார்ன் பிளார் - 1 ஸ்பூன்
  • தண்ணீர் - 3 ஸ்பூன்

செய்முறை

  • வாணலியில் சன்பிளவர் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்க்னை மட்டும் போட்டு 2 நிமிடம் வேகவைத்து பொரித்து எடுக்கவும்(மொறு மொறுப்பாக இருக்கக்கூடாது).
  • கார்ன் பிளாரை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
  • அதே எண்ண்யில் காலிபிளவர், புரொக்கோலியைப் போட்டு 2 நிமிடம் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
  • பிறகு அதே எண்ணெயில் மஷ்ரூமை போட்டு 2 நிமிடம் நன்றாக கிண்டவும்.
  • சிக்கன், வதக்கிய காய்கறிகள், சோயாசாஸ், இஞ்சித் துருவியது, வினிகர், உப்பு, கார்ன் பிளார் அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் நன்கு கிண்டவும்.
  • நல்லெண்ணெய், கடலைத்தூள், ஸ்பிரிங் ஆனியன் போட்டு கிண்டி இறக்கவும்.

குறிப்பு:

தாய்லாந்தில் உப்பிற்கு பதில் பிஷ் சாஸ் சேர்ப்பார்கள். கிடைத்தால் உப்பிற்கு பதிலாக அதனை ஒரு ஸ்பூன் சேர்க்கவும்.

வழங்கியவர்

தேவசேனா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3 10 10
random food image


comments