உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

தாய்லாந்து வெள்ளரிக்காய் சாலட்

 


தேவையானப் பொருட்கள்

  • பெரிய வெள்ளரிக்காய் - 3
  • சாலட் வெங்காயம்( சிகப்பு நிறத்தில் கிட்டத்தட்ட பீட்ரூட் நிறத்தில் இருக்கும்) - 1 அல்லது காரம் குறைந்த பெரிய வெங்காய வகை -1
  • சீனி - 2 ஸ்பூன்
  • உப்பு - 1/4 ஸ்பூன்
  • வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லித் தழை - பொடியாக நறுக்கியது - 2 ஸ்பூன்
  • சிகப்பு மிளகாய்(காரமானது, சின்னதாக இருக்கும்) -2 பொடியாக நறுக்கியது அல்லது சிகப்பு குடை மிளகாய் - 1 (துண்டுகளாக்கவும்)

செய்முறை

  • அடுப்பில் ஒரு சின்ன வாணலியை வைத்து வினிகர், சீனி, உப்பினை சேர்த்து மிதமான தீயில் கிண்டவும்.
  • சீனி நன்கு கரைந்து சாஸ் போன்று வரும்போது அடுப்பை அணைத்து சாஸை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • வெள்ளரிக்காயை பிடித்த வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
  • அதனுடன் வட்ட வடிவில் வெட்டிய வெங்காயம், மிளகாய் சேர்க்கவும்.
  • சாஸினை மேலே ஊற்றி கலந்து, கொத்தமல்லி தூவவும்.

குறிப்பு:

தாய்லாந்து உணவு வகைகளில் சாஸிற்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. இந்த சாலட்டை இறால் ஃபிரிட்டர்ஸுடன் சாப்பிட நன்றாக இருக்கும். விருப்பப்பட்டால் நிலக்கடலையும்(Peanut) சேர்க்கலாம்.

வழங்கியவர்

தேவசேனா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 10 5
random food image


comments