www.arusuvai.com
சோற்று வற்றல் (இரவு மீதியான சாதத்தில்)
தேவையானப் பொருட்கள்
- மீதியான சாதம் - இரண்டு கப்
- சீரகம் - இரண்டு டீஸ்பூன்
- மிளகு - ஐந்து
- பச்சமிளகாய் - இரண்டு
- உப்பு - தே.அளவு
- கரிவேப்பிலை - சிறிது
- பெருங்காயம் - ஒன் பின்ச்
செய்முறை
- நைட் மீதி ஆன சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.காலையில் தண்ணிரை பிழிந்தெடுத்து அதில் மேலே உள்ள அனைத்து பொருட்களயும் போட்டு மிக்சியில் அரைத்து ஒரு பெரிய தட்டில் எண்ணை தடவி சிறு சிறு உருண்டையாக பிடித்து வைத்து வெயிலில் காயவைக்கவும். கொஞ்சம் காஞ்சதும் எல்லாவற்றையும் தனித் தனியாக எடுத்து வேறு ஒரு தட்டில் மாற்றி இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் காயவைத்து காயவைத்து எடுக்கவும்.
- நல்ல காய்ந்ததும் ஒரு டப்பாவில் போட்டு வைத்து தேவையான போது எண்ணையில் பொரித்து ரசம் ,சாம்பார் சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம்.