காளான் மசாலா

தேதி: October 9, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காளான் - 200 கிராம்
மிளகாய் வற்றல் - 5
மிளகு - சிறிது
மஞ்சள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 2
தேங்காய் பூ - 1/4 மூடி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 6 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


 

கரம் மசாலா, வற்றல் மிளகாய், பூண்டு, வெங்காயம் இவற்றை அரைத்து காளானுடன் கலக்கவும்.
தேங்காயை கொரகொரவென்று அரைத்து உப்பு, மஞ்சள் சேர்த்து காளானுடன் கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கலந்து வைத்த காளானை போட்டு வதக்கவும்.
மசாலா கலவையின் நீரிலேயே வேக வைக்கவும்.
நன்கு வதங்கியவுடன், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

பீவி, உங்கள் காளான் மசாலா செய்தேன், நன்றாக வந்திருக்கு. வித்தியாசமாக இருக்கு. கொஞ்சம் குழைந்துவிட்டது. நல்ல குறிப்பு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்