பட்டர் பீன்ஸ் மசாலா

தேதி: October 9, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பட்டர் பீன்ஸ் -- 1கப் (உரித்த பருப்பு)
எண்ணெய் -- 3 ஸ்பூன்
உப்பு -- தே.அ
கடுகு , உளுத்தம்பருப்பு -- தாளிக்க தேவையான அளவு
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
பட்டை , கிராம்பு -- சிறிது
அரைக்க :
தேங்காய் -- 1/2 மூடி (துருவியது)
சீரகம் -- 2 டீஸ்பூன்
சோம்பு -- 1 டீஸ்பூன்
மிளகு -- 1 1/2 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் -- 5 என்னம்


 

வாணலியில் பாதி அளவு எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு,கடுகு,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் பட்டர் பீன்ஸ்யை போட்டு ஒரு வதக்கு வதக்கவும்.
அரைக்க கொடுத்தவைகளை அரைத்து , உப்பையும் போட்டு , பட்டர் பீன்ஸ் கலவையில் ஊற்றவும்.
இதனுடன் மீதி உள்ள எண்ணையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மசாலா நன்றாக பட்டர் பீன்ஸ்யில் ஒட்டி வரும்வரை சமைத்தபின் இறக்கி பறிமாறலாம்.
ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

பட்டர் பீன்ஸ் ரொம்ப superaa இருந்தது... இந்த taste என் husbandkku ரொம்ப பிடித்தது... இது நிறைய தடவை செய்து விட்டேன். Sorry.. இப்போது தான் comment போடுகிறேன்.

whats de name f butterbeans in tamil?
Kindly reply me soon

தமிழ் பெயர் தான் பட்டர் பீன்ஸ்
நம்மூரில் அப்படித்தான் அதை அழைப்பார்கள்.
தோலுரித்து அதில் 6 லிருந்து 7 பருப்புகள் இருக்கும்.
அதைத்தான் பட்டர் பீன்ச் என்போம். மேலும் நம் ஊரில் அது மிகவும் காஸ்ட்லியான ஒரு பருப்பு.

Thank u 4 ur information,
butter beans oora vaikka venduma?
means how long?
reply pls....