வெஜ் ஃப்ரை வித் ப்ரட்

தேதி: October 9, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் -- 1/4 கப் (நன்றாக நறுக்கியது)
பீன்ஸ் -- 1/4 கப் (நன்றாக நறுக்கியது)
பச்சை பட்டாணி -- 1/4 கப்
உருளைக்கிழங்கு -- 1/4 கப் (சிறிய சிறிய சதுரமாக நறுக்கியது)
சிவப்பு மிளகாய் தூள் -- 1/2 டீஸ்பூன்
உப்பு -- தே.அ
எண்ணைய் -- 1 டீஸ்பூன்
தாளிக்க :
கடுகு -- 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -- 1/2 டீஸ்பூன்


 

ஸ்டஃப் செய்ய:
காய்கறிகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து அவன் இருந்தால் 4 நிமிடம் , வேகவைப்பதாக இருந்தால் 5 நிமிடமும் வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காயந்ததும் கடுகு , உளுத்தம்பருப்பு போட்டு வேகவைத்த காய்கறிகள் , உப்பு , மிளகாய்தூள் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
ப்ரட்டில் ஒரு சைட் ஜாம் சிறிதும் தக்காளி சாஸ் சிறிதும் சேர்த்து தடவி வேகவைத்த காய்கறிகளை வைத்து அதன் மேல் இன்னொரு ப்ரட் வைத்து டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.
இரண்டு புறமும் நன்றாக வெந்து வந்தபின் சாப்பிட ருசியாக இருக்கும்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்