வாழைக்காய் கோலா

தேதி: October 9, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

வாழைக்காய் -- 2 என்னம்
தேங்காய் துருவல் -- 1/2 மூடி
சோம்பு -- 1 டீஸ்பூன்
கசகசா -- 1 டீஸ்பூன்
தனியா -- 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -- 8 என்னம்
இஞ்சி -- 1/2 அங்குலம்
பச்சைமிளகாய் -- 6
பூண்டு -- 3 பல்
பட்டை -- 1 துண்டு
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
உப்பு -- தே.அ
எண்ணைய் -- 2 ஸ்பூன்


 

வாழைக்காயை தோலுடன் வேகவைக்கவும்.வெந்தபின் தோலை உரித்து கையால் /கத்தியால் துண்டாக்கவும்.
தேங்காய் துருவல்,சோம்பு,கசகசா,தனியா,பச்சை மிளகாய் , பூண்டு, பட்டை,வெங்காயம்,இஞ்சி,உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
இதனுடன் வாழைக்காயையும் நைசாக அரைக்கவும்.
அரைத்ததை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
மொத்தம் 25 என்னம் கிடைக்கும்.
ரெடி.


வாழைக்காயுடன் அரைத்த கலவை கெட்டியாக இருக்க வேண்டும். நீராக இருந்தால் 2 ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்து பிசைந்து போட கோலா நன்றாக வரும்.
இருந்தாலும் ருசியில் மாறுதல் இருக்கும். எனவே கலவை சரியான பதத்தில் இருப்பது நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

I've tried yesterday, it was very good taste.....
I'll try latter day futher......

priseka

Thanks for ur feedback.