www.arusuvai.com
மஷ்ரூம் குருமா
தேவையானப் பொருட்கள்
- மஷ்ரூம் - 20
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
- காரட்,பீன்ஸ் (நறுக்கியது)பச்சை பட்டானி - 1 கப்
- முந்திரி பருப்பு - 15
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- தனியா தூள் - 1 தேக்கரண்டி
- சீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி
- மிளகு பொடி -1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- ஊப்பு - தேவையான அளவு
- பட்டை,கிராம்பு,சோம்பு - 1 தேக்கரண்டி
- எண்னை - 2 தேக்கரண்டி
செய்முறை
- மஷ்ரூமை நன்றாக கழுவி சுத்தம் செய்து,நான்காக வெட்டிக் கொள்ளவும்
- வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கவும்
- முந்திரி பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும் (ஊற வத்த தண்ணீரை சேர்த்தே அரைக்கலாம்)
- ஒரு கடாயில் எண்ணை சூடு செய்து,பட்டை , கிராம்பு மற்றும் சோம்பு போடவும்.
- பின்,வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
- சிறிது வதங்கிய வுடன் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
- பிறகு மிளகாய் தூள்,தனியா தூள்,சீரகப் பொடி,மிளகு பொடி,மஞ்சள் தூள்,ஊப்பு போட்டு நன்றாக கிளறவும்
- மஷ்ரூம் மற்றும் அனைத்து காய்கரியையும் அதனுடன் சேர்த்து அரைத்த முந்திரியை சேர்க்கவும்.
- 5 நிமிடம் வரை மூடி போட்டு வேக விடவும்
- மஷ்ரூம் வேந்தவுடன் மேலும் 5 நிமிடம் திக்காக வரும்வரை கொதிக்க விடவும்
- அடுப்பை அனைத்து சிறிது கொத்தமல்லி இலை தூவி பறிமாறலாம்.
- சப்பாத்திக்கு மிகவும் எளிய முறையில் செய்ய கூடிய சைட் டிஷ்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
4 |
20 mins |
20 mins |