ஃபிஷ் ஃபிங்கர்ஸ்

தேதி: October 9, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வஞ்சிரம்/வௌவால் மீன் -- 1/4 கிலோ
மைதா -- 3 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் -- 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -- 1/4 டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது -- 1/2 டீஸ்பூன்
பிரட்/ரஸ்க் தூள் -- தே.அ
எண்ணைய் -- தே.அ
உப்பு -- தே.அ


 

மீன் துண்டங்களை சுத்தம் செய்து கழுவி அதில் உப்பு , மஞ்சள்தூள் தடவி சிறிது நேரம் வைத்திருந்தால் தண்ணீர் விடும்.
இதை வடித்து விட்டு மீன் துண்டுகளை ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
மைதாவில் உப்பு,மிளகுத்தூள் சிறிது தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைக்கவும்.
மீன்களை விரல் நீள துண்டங்களாக வெட்டி மைதா கலவையில் முக்கி எடுத்து ரஸ்க் தூளில் புரட்டி காய்ந்த எண்ணையில் போட்டு பொரிக்கவும்.
சாஸ் உடன் சேர்த்து சாப்பிடலாம்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்