பாலக் கீரை சூப்(குழந்தைகளுக்கு)

தேதி: October 9, 2007

பரிமாறும் அளவு: மூன்று பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பாலக் கீரை - இரண்டு கட்டு
மைதா - 100 கிராம்
பட்டர் - 100 கிராம்
பெப்பர் - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு


 

குக்கரில் பட்டர் போட்டு மைதாவை தூவவும் பிறகு வெங்காயத்தை வதக்கவும்.
பாலக் கீரையையும் வதக்கவும்.
இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விட்டு வேக வைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்
கடைசியில் பெப்பர் சால்ட் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பிள்ள ஜலீலா

அஸ்ஸலாமு அலைக்கும்.எப்படி இருக்கீங்க?

நான் இந்த கீரை சூப் செய்தேன்.சுலபமாகவும் டேஸ்ட்டாகவும் இருந்தது.மிகவும் நன்றி ஜலீலா.

அப்பரம் ஒரு சந்தேகம் நான் பாலக்கீரையில் தான் செய்தேன். பலக்கீரை என்று ஒன்று இருக்கா.
எனக்கு இங்கு பாலகீரை மட்டும் தான் கிடைக்கும்

அன்புடன் பர்வீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் பர்வீன்
பாலக் கீரை தான், இப்ப பாருங்க திருத்தி விட்டேன்.
எப்படி இருக்கீங்க ரொமப் நாளா ஆளை காணும்.
ஜலீலா

Jaleelakamal

பர்வீன்
இந்த பாலக் கீரைக்கு தேவைபட்டால் இஞ்சி (அ) பூண்டு ஒரு துண்டு சேர்த்து வெங்காயம் வத்க்கும் போது வதக்கி கொள்ளலாம்.
ஜலீலா

Jaleelakamal

அதிரா இந்தாங்க பாலக் கீரை சூப்

ஜலீலா

Jaleelakamal

மிக்க நன்றி ஜலீலாக்கா, நான் உங்கள் கீரைகறிதான் செய்யப்போகிறேன். எனது மூத்தவர் நிட்சயம் தண்ணியாக இருப்பதெதுவும் குடிக்கமாட்டார்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அக்கா,
உங்க பாலக்கீரை சூப் செய்த்தேன்,ரொம்ப எளிதாகவும்,மிகவும் சுவையாகவும் இருந்தது.நன்றி அக்கா.