உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

ராஜ்மா கிரேவி

 


தேவையானப் பொருட்கள்

  • ராஜ்மா - 2 கப்
  • பெரிய வெங்காயம் - 2
  • தக்காளி - 3
  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • பால் - 1 கப்
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • தனியா தூள் - 1 தேக்கரண்டி
  • சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • பட்டை,கிராம்பு - 1/2 தேக்கரண்டி
  • பிரிஞ்சி இலை - 2
  • சோம்பு - 1/2 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணை - 2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தழை - அலங்கரிக்க

செய்முறை

  • ராஜ்மாவை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஊற வைத்த ராஜ்மாவை குக்கரில் 1 விசில் விட்டு வேக வைக்கவும்.
  • ஒரு கடாயில் நறுக்கின வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும். வதங்கிய பின் தனியே எடுத்து சூடு ஆரிய பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் எண்ணை சூடாக்கி பட்டை , கிராம்பு,பிரிஞ்சி இலை மற்றும் சோம்பு போடவும்.
  • பிறகு அடுப்பை சிம்மில் வைத்து இஞ்சி பூண்டு விழுது மற்றும் அனைத்து தூளையும் போடவும்.
  • பின் வேக வைத்த ராஜ்மா மற்றும் அரைத்த விழுதை போடவும். நன்றாக கிளறவும்.
  • பால் சேர்க்கவும். 10 நிமிடம் சிம்மில் வைத்து சமைக்கவும்.
  • கொத்தமல்லி இலையை தூவி அலங்கரிக்கவும்.சுவையான ராஜ்மா கிரேவி தயார்.சப்பாத்தி மற்றும் பூரிக்கான சத்தான சைட் டிஷ்.

வழங்கியவர்

அனிதா,அட்லாண்டா,யு.ஸ்.ஏ

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 30 mins 30-40 mins
random food image


comments