idly

can any one help me to make a soft idly please. i am using ratio 5:1 ponni boiled rice 5 cups and 1 cup of urad dhal its not coming soft.please help me

என் பைனுக்கும் இட்லி என்றால ரொம்ப பிரியம ஆனால் நாங்கள் வசிகும் இடத்தில் இட்லி அரிசி மற்றும் இட்லி மாவும் கிடைபதிலை, ஆனால் இட்லி ரவா என்று ஒரு பாக்கெட்டில் விற்கிறார்கள், அதில் இட்லி நன்றாக வருமா? அதில் உளுந்து சேர்க்க வேண்டுமா?அப்படி என்றல் எவ்வள்வு சேர்கக வேண்டும். if someone knows answer for my doubt pls help me

ஹாய்,
இட்லி ரவை 2 கப்,உளுந்து 1 கப் என்ற விகிதத்தில் போடனும். முதல் நாள் ரவையை 1 மணி நேரம் ஊரவைத்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொண்டு அதனுடன் உளுந்தயை ஊரவைத்து அரைத்து அடுத்த நாள் இட்லி சுட்டால் நன்றாக வரும்.சாப்டாக இருக்கும் செய்து பாருங்கள்.ஆனால் இதில் தோசை வராது.

பச்சரிசி இட்லி

தேவையான பொருட்கள்
பச்சரிசி - 2 கப்
முழு உளுந்து - 2 கப்
அவல் - ஒரு கைப்பிடி

செய்முறை
பச்சரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊறவைக்கவும்.
அவலையும் தனியாக ஊற வைக்கவும்.
ஒரு மணி நேரம் ஊறியதும் முதலில் உளுந்தை (ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து) கிரைண்டரில் போட்டு குடையக் குடைய அரைத்து வழித்து எடுத்து வைக்கவும்.
அரிசியைக் கல்போக களைந்து வைக்கவும்.
பிறகு ஊற வைத்த அவலையும், அரிசியையும் கிரைண்டரில் போட்டு நைஸ் ரவை பதத்தில் அரைத்து வழித்து எடுத்து அரைத்த உளுந்துடன் சேர்த்து உப்பு போட்டு கரைத்து மூடி வைக்கவும்.
மாவு நன்கு பொங்கி வந்ததும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு நன்கு கலக்கி இட்லி வார்க்கவும்.

வழங்கியவர்
T S JAYANTHI CHENNAI 600 048

Jaleelakamal

ரொம்ப நன்றி ஜலீலா. சதாவுக்கு பதில் கொடுத்ததற்கு. இப்பல்லாம் நேரம் கிடைக்காததால் முதல் பக்கத்தில் இருக்கும் பதிவுகளுக்கு மட்டும் பதில் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறேன். இப்பதான் இந்தப்பதிவுகளைப்பார்த்தேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் பூர்ணா நான் மெல்பெர்ன் உள்ளேன்..பதில் தந்ததுக்கு நன்றி.. ஜெயந்தி மாமி நான் பச்சரிசி இட்லி செய்து பார்த்து சொல்ரேன்.

அன்புடன்
ஷராபுபதி

மிக்க நன்றி. கண்டிப்பக செய்து பார்க்கிறேன்.

சதாலட்சுமி
இன்றே அரிசி பருப்பு ஊறவைத்துவிட்டேன். செய்துப்பார்த்து நாளை பின்னோட்டம் அனுப்புகிறேன்.
ரொம்ப நன்றி ஜலிலா அக்கா, மற்றும் ஜெயந்தி மாமி.

சதாலட்சுமி

சதாலட்சுமி
நன்றி ஜெயந்தி மாமி, இட்லி ஸாப்டாக வந்தது. ரொம்ப நன்றாக வந்த்து.சந்தோசமாகயிருந்த்து.
மறுபடி நன்றி நன்றி நன்றி,... மாமி.

சதாலட்சுமி

dear jaleela madam,
thank you so much for your response. i tried today the receipe of maami. it has come very well.(idli)
thank you
bye
priya

எங்க இப்படி வாங்க பாஸ்மதி அரிசி இட்லி ரெசிப்பி அப்ப்டியே போடுங்க. எல்லா மக்களும் நல்லா இட்லி சாப்பிடட்டும்.

நான் சோனமசூரியில் செய்துள்ளேன். பச்சரிசி இட்லியும் செய்துள்ளேன். நன்றாக தான் இருக்கும்.
நான் இப்போது இட்லி அரிசி ரவை தான் வாங்கி வைத்துள்ளேன், அதில் தான் செய்கிறேன்.
இப்போது யூஎஸ்ஸில் எல்லாரும் இட்லி பொடி, தோசை பொடி என்று இந்தியன் கடைகளில் கிடைக்கிறது அதை தான் செய்கிறார்கள். நன்றாக இருக்கு.

மேலும் சில பதிவுகள்